search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது
    X

    பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது

    அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது
    திருப்பதியை அடுத்த அப்பலாயகுண்டாவில் பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 18 - ந்தேதி கல்யாண உற்சவமும், 19-ந்தேதி கருட சேவை உற்சவமும், 22-ந்தேதி தேரோட்டமும், 23 - ந்தேதி சக்கரஸ்நானமும் நடக்கிறது.

    கருட சேவையையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளும் பிரசன்ன வெங்கடேஸ்வரசாமிக்கு, திருமலையில் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படும் தங்க காசு மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்பட உள்ளன. அந்த ஆபரணங்கள் திருமலையில் இருந்து 19 - ந்தேதி பிற்பகல் 3 மணியளவில் அப்பலாயகுண்டாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. பிரம்மோற்சவ விழா 23 - ந்தேதி வரை நடக்கிறது.
    Next Story
    ×