விரைவில் வெளியாகும் ஹிப்ஹாப் ஆதி படத்தின் இரண்டாவது பாடல்

இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வீரன்’.இப்படம் வருகிற ஜுன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஹிப்ஹாப் ஆதி
ஹிப்ஹாப் ஆதி
Published on

மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்து வரும் படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்ஷன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வீரன் போஸ்டர்

சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வீரன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'பப்பர மிட்டாய்' பாடல் வருகிற 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

'வீரன்' திரைப்படம் வருகிற ஜுன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com