என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
எல்சியூ என்பது மக்கள் கொடுத்தது: லோகேஷ் நெகிழ்ச்சி
- விக்ரம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
- வரும் படங்களில் எல்சியூ என்ற பெயர் இடம்பெறும் என லோகேஷ் தகவல்
ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில் , முன்னணி நட்சத்திரங்களான கமல்ஹாசன், பகத்ஃபாசில், விஜய்சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரசிகர்கள் 'கைதி-2' படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்பது மக்கள் கொடுத்தது என்று இயக்குனர் லோகேஷ் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
இது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், "லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (எல்சியூ) என்ற பெயர் மக்கள் கொடுத்தது. இந்த பெயர் ஒரு புது வரவேற்பாக உள்ளது. அதனால், இனி வரும் காலங்களில் கைதி, விக்ரம் திரைப்படங்களின் தொடர்ச்சியாக வரும் படங்களில் எல்சியூ என்ற பெயர் இடம்பெறும்" என்று தெரிவித்துள்ளார்.