மீண்டும் வெளியாகும் 'பத்து தல'.. உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பத்து தல’.இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
பத்து தல
பத்து தல
Published on

ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'பத்து தல' திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இப்படம் வெளியான முதல் நாளில் ரூ.12 .3 கோடியை வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

பத்து தல போஸ்டர்

சமீபத்தில் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர். இந்நிலையில், 'பத்து தல' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 27-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com