பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் இருந்து வெளியேற கரண் ஜோஹர் தான் காரணம்.. கங்கனா சர்ச்சை பதிவு

பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா.இவர் பாலிவுட்டில் இருந்து தான் வெளியேறுவதற்கான காரணத்தை சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
பிரியங்கா சோப்ரா - கரண் ஜோஹர் - கங்கனா ரனாவத்
பிரியங்கா சோப்ரா - கரண் ஜோஹர் - கங்கனா ரனாவத்
Published on

பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த இவர் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதிக்க ஆரம்பித்தார்.

பிரியங்கா சோப்ரா

ஹாலிவுட்டில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் இருந்து விலகுவதற்கு என்ன காரணம் என்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், "பாலிவுட் சினிமாவில் இருந்து நான் ஓரம் கட்டப்பட்டேன். பட வாய்ப்புகள் படிப்படியாக குறைய தொடங்கின. எனக்கு அங்கு நடந்த அரசியல் சரியாகபடவில்லை. எனக்கு சற்று ஓய்வு தேவைப்பட்டது. அதே நேரத்தில் ஹாலிவுட்டில் வாய்ப்பு வந்ததால் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன்" என்று கூறினார்.

கங்கனா ரனாவத் - கரண் ஜோஹர்

இந்நிலையில், பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் இருந்து வெளியேறியதற்கு பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தான் காரணம் என நடிகை கங்கனா ரனாவத் சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், ஷாருக்கான் உடனான பிரியங்கா சோப்ராவின் நட்பின் காரணமாக அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற கரண் ஜோஹர் நினைத்ததாகவும் பாலிவுட்டிற்கு கலங்கம் விளைவிக்கும் இதுபோன்ற செயலுக்கு கரண் ஜோஹர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com