என் மலர்
சினிமா செய்திகள்
- மலையாள படங்களில் பெரியளவில் கவர்ச்சியாக நடிக்க முடியாது.
- ஆனால், தமிழ், தெலுங்கில் அப்படி நடிக்கலாம்.
சென்னை:
மலையாளத்தில் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் மாளவிகா மேனன், தமிழில் 'இவன் வேற மாதிரி', 'விழா', 'பிரம்மன்', 'வெத்துவேட்டு', 'நிஜமா நிழலா', 'பேய் மாமா', 'அருவா சண்ட' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை மாளவிகா மேனன் சினிமா வாழ்க்கை பற்றிப்பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
'நான் முதன்முதலில் நடித்தது 'நித்ரா' என்ற மலையாள படத்தில்தான். அப்போது எனக்கு 14 வயது. சின்ன பெண்ணாக இருப்பதால் என்னை இயக்குனர் ஹீரோயினுக்கு தங்கையாக நடிக்க வைத்துவிட்டார்.
பின்னர், '916' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனேன். அதில் நிறைய சவாலான காட்சிகளில் நடிக்க வேண்டியது இருந்தது. சிரமம்தான் இருந்ததே தவிர, பெரியளவில் கேலி பேச்சுகள் வரவில்லை. மலையாள படங்களில் பெரியளவில் கவர்ச்சியாக நடிக்க முடியாது. அப்படிப்பட்ட கதாபாத்திரங்களும் வராது. ஆனால், தமிழ், தெலுங்கில் அப்படி நடிக்கலாம்.
இதுவரை முத்தக்காட்சிகளில் நடித்தது கிடையாது. ஆனால் அப்படி நடிக்க கேட்டிருக்கிறார்கள். கதைக்கு மிகவும் அவசியப்பட்டால், அது பேசப்படும் காட்சியாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். அதில் ஒன்றும் தவறு இல்லை. அப்படி ஒரு படம் வரட்டும் பார்க்கலாம். இவ்வாறு கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- பாலிவுட்டில் ஷாருக் கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார்.
- கோலிவுட்டில் விஜயுடன் மூன்று படங்களில் பணிபுரிந்துள்ளார்.
கோலிவுட்டில் ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் அட்லீ. பின்னர் விஜய்-ஐ வைத்து மெர்சல், பிகில், தெறி ஆகிய படங்களை இயக்கினார். நான்கு படங்களும் சூப்பர் ஹிட் ஆக தனது பார்வையை பாலிவுட்டிற்கு நகர்த்தினார்.
ஷாருக் கானிடம் கதை சொல்ல அவரும் சரி என சொல்ல உருவான படம்தான் ஜவான். இந்த படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதனால் பாலிவுட்டில் அட்லீ பெயர் மிகப் பிரபலம் ஆனது.
இந்த நிலையில் சல்மான் கான் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோரை வைத்து புதிய படத்தை அட்லீ இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது வதந்திகள் எனக் கூறப்பட்டாலும் இதற்கான முதற்க நகர்வுகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியானால் இரண்டு முன்னணி நடிகரை வைத்து இயக்கும் பெருமையை அட்லீ பெறுவார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பேட்டை படத்தில் மூலம் மாளவிகா மோகனன் தமிழில் அறிமுகமானார்.
- அதன்பின் மாஸ்டர் மற்றும் மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.
கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து கோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். எனவே, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடினார்.
இதன் மூலம் பேட்டை படத்தில் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன்பின் மாஸ்டர் மற்றும் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள தங்கலான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்டு 15-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர் ஒருவர் உங்கள் அழகு சூரியனை விட பிரகாசமாக உள்ளது என கமெண்ட் செய்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக பிரியங்கா சோப்ரா வலம் வந்தார்.
- ஹாலிவுட்டில் பல படங்களில் பிசியாக அவர் நடித்து வருகிறார்.
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த இவர் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதிக்க ஆரம்பித்தார்.
கடந்த 2018- ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோன்சை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இருவரும் வாடகைத் தாய் மூலம் மால்தி மேரி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். ஹாலிவுட்டில் பல படங்களில் பிசியாக அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரத்த காயங்களுடன் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட வீடியோவை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஹாலிவுட் திரைப்படமான தி பிளப் படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்படும் போது இந்த காயங்கள் ஏற்பட்டதாக அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா சோப்ராவின் அர்ப்பணிப்பை பாராட்டி வருகின்றனர்.
- ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.
- உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.
100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தமிழக அரசை கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது .
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்.
நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது , இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திட்டம் போட்டு நடித்தால் நிச்சயமாக படம் வெற்றி பெறாது.
- உண்மையான உழைப்பை கொடுத்தோம் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 50-வது படம் மகாராஜா. அனுராக் காஷ்யப் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த வாரம் படம் திரைக்கு வந்து நல்ல விமர்சனங்களை பெற்று வசூலை குவித்து வருகிறது. மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.32.6 கோடி வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பங்கேற்ற விஜய் சேதுபதி பேசியது, இந்த கதையை கேட்டவுடன் ஒரு பிரமிப்பும் நம்பிக்கையும் இருந்தது. இது எப்படி சாத்தியமாக போகிறது என்ற கேள்வி ஒவ்வொரு படத்தின் போதும் இருக்கும். கதை கேட்கும் போது கொஞ்சம் யூகிக்கலாம்.
ஆனால் நடித்து முடித்த பிறகு எதையும் யோசிக்க முடியாது. எப்படியும் இந்த படம் ஓடி தயாரிப்பாளருக்கு போட்ட காசை எடுத்துக் கொடுத்து விடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் எனது முந்தைய படங்கள் சரியாக ஓடாததால் கட் அவுட் வைப்பவர்கள் சிலர் விஜய் சேதுபதிக்கு கட் அவுட் வைப்பதால் மக்கள் படம் பார்க்க வரவா போகிறார்கள் என்று பேசியதாக என் நண்பர் கூறினார்.
அதை யெல்லாம் மனதில் வைத்து நிச்சயமாக இந்த படத்தில் நடிக்கவில்லை. அப்படி திட்டம் போட்டு நடித்தால் நிச்சயமாக அந்த படம் வெற்றி பெறாது. உண்மையான உழைப்பை கொடுத்தோம் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த படத்தை தியேட்டருக்கு வந்து பார்த்த அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கர்ப்பிணியாக உள்ள தீபிகா படுகோனேவும் விழாவில் பங்கேற்றார்.
- போட்டா போட்டியில் சிறிது நேரம் விழா அரங்கம் சிரிப்பொலியில் அதிர்ந்தது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கல்கி 2898 ஏ.டி. இப்படத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்பட பலர் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் அறிவியல் கலந்து உருவாக்கப்பட்டுள்ள புராண காலத்து கதையான இந்த படம் வருகிற 27-ந்தேதி சர்வதேச அளவில் திரைக்கு வர இருக்கிறது.
இதையொட்டி படத்தின் பிரி ரிலீஸ் விழா மும்பையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் பங்கேற்றனர். கர்ப்பிணியாக உள்ள தீபிகா படுகோனேவும் விழாவில் பங்கேற்றார்.
விழா தொடங்கியதும் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். தீபிகா படுகோனே மேடையில் ஏறும்போது அவரது கையை பிடித்து உதவி செய்வதற்காக பிரபாஸ் முன் வந்தார். அதற்குள் ஓடி வந்த அமிதாப்பச்சன் நான் பிடித்துக்கொள்கிறேன். நீங்கள் வாருங்கள் என கூறி தீபிகா படுகோனே மேடை ஏற உதவினார்.
பிரபாஸ், அமிதாப்பச்சன் இடையே நடந்த போட்டா போட்டியில் சிறிது நேரம் விழா அரங்கம் சிரிப்பொலியில் அதிர்ந்தது.
தொடர்ந்து விழாவில் அமிதாப்பச்சன் பேசியதாவது:-
நாக் அஸ்வின் கல்கி 2898 ஏ.டி. படத்தின் கதையை என்னிடம் கூறும்போது இதெல்லாம் சாத்தியமா? என யோசித்தேன். மேலும் இவர் குடித்திருக்கிறாரா? என்று கூட நினைத்தேன். இப்போது படத்தை பார்க்கும் போது அற்புதமான படைப்பாக வந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விக்னேஷ் ராஜாவுடன் நடிகர் தனுஷ் கூட்டணி அமைக்கப்போவதாக புதிய அப்டேட்.
- பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் ஆகியோரின் நடிப்பில் போர் தொழில் எனும் திரைப்படம் வெளியானது.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.
கிரைம் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ராட்சசன் படத்திற்கு பிறகு பெரிய அளவில் பேசப்பட்டது. அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீண்டும் அசோக் செல்வன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சொல்லப்பட்டது. மேலும் படம் தொடர்பான அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவல் என்னவென்றால், விக்னேஷ் ராஜாவுடன் நடிகர் தனுஷ் கூட்டணி அமைக்கப்போவதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது. அதே சமயம் இந்த புதிய படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
நடிகர் தனுஷ் தற்போது `குபேரா' படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக `தேரே இஷ்க் மெய்ன்' எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இன்னும் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார் தனுஷ். எனவே தனுஷ் தனது முந்தைய படங்களின் கமிட்மெண்ட்களை முடித்த பின்பு போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் தம்பி ராமையா.
- ராஜாகிளி படமானது 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் தம்பி ராமையா. ஏற்கனவே சமுத்திரகனி தம்பி ராமையா, ஆகியோர் இணைந்து சாட்டை, அப்பா, வினோதய சித்தம் போன்ற படங்களில் நடித்திருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ராஜாகிளி என்ற புதிய படத்தில் இணிந்து நடித்துள்ளனர்.
'மாநாடு', 'கங்காரு', 'மிகமிக அவசரம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் கதையின் நாயகனாக சமுத்திரக்கனியும், கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கிய வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், பழ.கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவின்.ஜி, இயக்குனர் மூர்த்தி, 'கும்கி' அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், 'கும்கி' தரணி, தீபா, பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு கதை , வசனம், திரைக்கதை, பாடல்வரிகள் மற்றும் இசையமைப்பாளராக தம்பி ராமையா பணியாற்றியுள்ளார். மேலும் படத்திற்கு கேதர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். நேற்று (ஜூன் 19) தம்பி ராமையாவின் பிறந்தநாளை முன்னிட்டு பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ராஜாகிளி படமானது 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஹாரர் கதைக்களத்தை மையமாக வைத்து சுந்தர் சி அரண்மனை 1 படத்தை 2014 ஆம் ஆண்டு இயக்கினார்.
- வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது அந்த வகையில் கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.
தமிழ் சினிமாவில் அடுத்து வளர்ந்துக் கொண்டு வரும் ஃப்ரான்சிஸ் படமாக அரண்மனை திரைப்படம் இருக்கிறது, ஹாரர் கதைக்களத்தை மையமாக வைத்து சுந்தர் சி அரண்மனை 1 படத்தை 2014 ஆம் ஆண்டு இயக்கினார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த இரண்டு பாகத்தை இயக்கினார்.
இதன் மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. இந்த படத்தில் சுந்தர்.சி-க்கு தங்கையாக தமன்னா நடிக்க, தமன்னாவிற்கு ஜோடியாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் பாடல் ஒன்றுக்கு குஷ்பு மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் நடனமாடியுள்ளனர்.
இந்த படமானது கடந்த மே 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது அந்த வகையில் கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.
இதன் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர்.சி கலகலப்பு-3 படத்தை இயக்கப் போவதாக தகவல் பரவியது. அது மட்டும் இல்லாமல் தமன்னா , வடிவேலு கூட்டணியில் புதிய படம் சுந்தர்சி இயக்கப் போகிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய சுந்தர் சி, "பேய் படத்தில் ஏன் கவர்ச்சி இருக்கிறது என்று கேட்கிறார்கள். பேயாக இருந்தாலும் அது கவர்ச்சியாக வந்தால் தான் இங்க வியாபாரமே நடக்குது. அரண்மனை 5 ஆம் பாகத்திலும் கவர்ச்சி இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அவர் அரண்மனை பாகம் 5 கட்டாயமாக இயக்கவுள்ளார் என உறுதியாகியுள்ளது. அடுத்த எந்த திரைப்படத்தை இயக்கப்போகிறார் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது.
- வெற்றி படங்களின் தயாரிப்பு செலவுகளை ஆய்வு செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை.
திருவனந்தபுரம்:
சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மலையாள திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. கொடைக்கானலில் உள்ள குணா குகையில் விழுந்த வாலிபரை நண்பர்கள் சேர்ந்து காப்பாற்றும் கதையை கொண்ட அந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கேரள மாநிலம் மட்டு மின்றி தமிழகத்திலும் பல திரையரங்குகளில் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. இதன் காரணமாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த படம் ரூ.220 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இந்நிலையில் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது. அதனடிப்படையில் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான ஷான் ஆண்டனி, சவுபின் ஷாகி ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
மேலும் பண மோசடிக்காக டிக்கெட் வசூல் எண்ணிக்கையை உயர்த்தியிருப்பதாகவும் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்பட குழுவினர் மீது புகார் எழுந்திருக்கிறது. இதேபோன்று மேலும் சில திரைப்படங்களை எடுத்தவர்களும் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அமலாக்கத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆகவே கடந்த 5 ஆண்டுகளில் கேரளாவில் எடுக்கப்பட்ட அனைத்து வெற்றி படங்களின் தயாரிப்பு செலவுகளை ஆய்வு செய்ய அமலாக்கத் துறை தயாராகி வருகிறது. 2024-ம் ஆண்டில் கடந்த 5 மாதங்களில் மலையாள திரையுலகம் ரூ720 கோடி வசூல் செய்திருக்கிறது. அதிலும் 'மஞ்சுமெல் பாய்ஸ்', 'ஆடுஜீவிதம்', 'ஆவேசம்', 'பிரேமலு' ஆகிய 4 மலையாள திரைப்படங்களின் வசூல் ரூ100 கோடியை தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மோசடி புகார் கூறப்பட்டுள்ள 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்களின் வங்கி கணக்குகளை முடக்க அமலாக்கத் துறை இயக்குனரகம் சட்ட ஆலோசனை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி அப்படத்தில் நடித்திருந்தார்.
- சில மாதங்களுக்கு முன் கோகுல் இயக்கத்தில் வெளிவந்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்தார்.
2010 ஆம் ஆண்டு 92.7 பிக் FM-ல் ரேடியோ ஜாக்கியாக பணிப்புரிந்தார். அதில் பணியாற்றி இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இவர் தொகுத்து வழங்கிய டேக் இட் ஈசி, க்ராஸ் டாக் போன்ற நிகழ்ச்சிகள் மிகப் பெரிய ஹிட்டானது.
அதன் பிறகு ஆர்.ஜே பாலாஜி 2013 ஆம் ஆண்டில் இருந்தே தமிழ் படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாக நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.
அதைத்தொடர்ந்து புகழ், ஜில் ஜங் ஜக், தேவி, போன்ற படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான LKG திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி அப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இந்தியில் வெளியான 'பதாய் ஹொ' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து கதாநாயகனாக நடித்து இருந்தார்.
சில மாதங்களுக்கு முன் கோகுல் இயக்கத்தில் வெளிவந்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்தார். ஆர் ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகை திரிஷாவை வைத்து இயக்கப்போவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.
அதைத்தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் புதியப்படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. இவர் நடிக்கும் அடுத்த படத்தை குட் நைட் மற்றும் லவ்வர் போன்ற வெற்றி படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர். ஆர் ஜே பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இப்போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் பாலாஜி ஒரு கையில் கத்தியுடனும் மறு கையில் மெலுகுவர்த்தியை சிகரெட் போல் பிடித்துக் கொண்டும் அவர் அணிந்திருக்கும் சட்டை முழுக்க ரத்த கறைகள் படிந்தும் இருக்கிறது. இது ஒரு திரில்லர் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படத்தின் இயக்குனர், மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






