உங்கள் அழகு சூரியனை விட பிரகாசமாக உள்ளது- மாளவிகாவின் லேட்டஸ்ட் கிளிக் வைரல்

பேட்டை படத்தில் மூலம் மாளவிகா மோகனன் தமிழில் அறிமுகமானார்.அதன்பின் மாஸ்டர் மற்றும் மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.
உங்கள் அழகு சூரியனை விட பிரகாசமாக உள்ளது- மாளவிகாவின் லேட்டஸ்ட் கிளிக் வைரல்
Published on

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து கோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். எனவே, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடினார்.

இதன் மூலம் பேட்டை படத்தில் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன்பின் மாஸ்டர் மற்றும் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள தங்கலான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்டு 15-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 

அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர் ஒருவர் உங்கள் அழகு சூரியனை விட பிரகாசமாக உள்ளது என கமெண்ட் செய்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

https://iflicks.in/

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com