அட்லீ இயக்கத்தில் சல்மான் கான், ரன்வீர் சிங்?

பாலிவுட்டில் ஷாருக் கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார்.கோலிவுட்டில் விஜயுடன் மூன்று படங்களில் பணிபுரிந்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் சல்மான் கான், ரன்வீர் சிங்?
Published on

கோலிவுட்டில் ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் அட்லீ. பின்னர் விஜய்-ஐ வைத்து மெர்சல், பிகில், தெறி ஆகிய படங்களை இயக்கினார். நான்கு படங்களும் சூப்பர் ஹிட் ஆக தனது பார்வையை பாலிவுட்டிற்கு நகர்த்தினார்.

ஷாருக் கானிடம் கதை சொல்ல அவரும் சரி என சொல்ல உருவான படம்தான் ஜவான். இந்த படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதனால் பாலிவுட்டில் அட்லீ பெயர் மிகப் பிரபலம் ஆனது.

இந்த நிலையில் சல்மான் கான் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோரை வைத்து புதிய படத்தை அட்லீ இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது வதந்திகள் எனக் கூறப்பட்டாலும் இதற்கான முதற்க நகர்வுகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியானால் இரண்டு முன்னணி நடிகரை வைத்து இயக்கும் பெருமையை அட்லீ பெறுவார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com