என் மலர்
சினிமா செய்திகள்
2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதில், பொன்னியின் செல்வன்-1 படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விருது அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பொன்னியின் செல்வன் -1 படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு திரைப்பட விருது பெறுவதில் பெருமை கொள்கிறேன்.
இந்த அங்கீகாரம் அளித்த தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி. விருது பெறும் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தணிக்கை வாரியம் தனது தரப்பு விளக்கத்தை அளிக்கப் போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை
- தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழுவை அணுகத் தயாரிப்பு நிறுவனம் ஆலோசனை
'ஜன நாயகன்' பட தணிக்கை சான்று விவகார வழக்கில் ஜன.27 அன்று, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, இப்படத்திற்கு உடனடியாக 'U/A' சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் தணிக்கை வாரியம் தனது தரப்பு விளக்கத்தை அளிக்கப் போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை என்று கூறி, இந்த வழக்கினை மீண்டும் தனி நீதிபதியின் விசாரணைக்கே அனுப்பி வைத்தது.
இந்நிலையில் தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. படக்குழு மேல்முறையீடு செய்தால், தங்களின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தனி நீதிபதி மீண்டும் விசாரணை நடத்தி இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை படத்தின் வெளியீடு குறித்து தெளிவான தகவல் வெளியாகாது.
இதனிடையே சட்டப் போராட்டத்தைத் தொடர்வதற்குப் பதிலாக, தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழுவை அணுகத் தயாரிப்பு நிறுவனம் தற்போது ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் துறந்தார் 'துரந்தர்'
இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மேஹா ஹிட் ஆனது.
மூன்றரை மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றத்தை மையமாகக் கொண்டு, இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும்.
இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், இன்று (ஜனவரி 30) முதல் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இத்திரைப்படம் நெட்பிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
திரையரங்குகளில் இப்படத்தைப் பார்க்கத் தவறிய ரசிகர்கள் இப்போது ஓடிடியில் கண்டு ரசிக்கலாம்.
- இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
- இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி). இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.
நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து படம் வெளியாவது குறித்த அறிவிப்புகள் வெளியானாலும் படம் வெளியாகவில்லை.
இந்த நிலையில், 'LIK' படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 12 மற்றும் 13-ந்தேதிகளில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
'LIK' படம் கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகும் என முதன் முதலில் கூறப்பட்டது. அதன்பின், செப்டம்பர் 18, அக்டோபர் 17, டிசம்பர் 18 என வெளியிட்டு தேதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில் படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பெரும் பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
- முக்கிய அறிவிப்பு ஷங்கர் தரப்பில் இருந்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் எப்படி இருந்த ஆள் தெரியுமா? என்று 'முத்து' படத்தில் சொல்லப்படுவது போல புகழ்ச்சியின் உச்சத்தில் இருந்தவர், இயக்குனர் ஷங்கர். பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கரின் கடைசி படைப்புகளான 'இந்தியன்-2', 'கேம் சேஞ்சர்' படங்கள் தோல்வியை சந்தித்தன.
'இந்தியன்-3' படம் வருமா, வராதா? என்று தெரியாத நிலையில், தனது கனவு படத்தை ஷங்கர் கையில் எடுக்கிறார். அதன்படி 'வேள்பாரி' நாவலை படமாக்கும் முயற்சிகளில் இனி முழுமூச்சாக இறங்கப் போகிறாராம். பெரும் பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதன்படி ஷங்கர் இயக்கும் 'வேள்பாரி' படத்தின் ஹீரோவாக நடிக்க விக்ரம், சூர்யா ஆகியோரின் பெயர் அடிபடுகிறது. அதேவேளை பாலிவுட் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கின் பெயரும் பரிசீலனையில் உள்ளதாம்.
விரைவில் இதுதொடர்பான முக்கிய அறிவிப்பு ஷங்கர் தரப்பில் இருந்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 'வேள்பாரி படத்தின் மூலமாக பழைய பன்னீர்செல்வமாக ஷங்கர் மீண்டும் திரும்புவார்' என்று அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
- இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
- படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. பின்னர் அவரது திடீர் விலகலை தொடர்ந்து, சிபி சக்கரவர்த்தி படத்தை இயக்கப் போகிறார் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது ரஜினிகாந்தின் 173-வது படமாகும். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படம் குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட் படமான 'தி அவுட்பிட்' படத்தின் தழுவலாக இந்த படம் உருவாக இருப்பதாகவும், ரஜினிகாந்த் இதில் டெய்லராக நடிக்கப் போவதாகவும், இது 70 காலகட்டத்தில் நடக்கும் கதைக்களம் என்றும் பேசப்படுகிறது.
ரஜினிகாந்த் - கமல்ஹாசன் கூட்டணியில் தயாராகும் இந்த புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.
- நான் 1968-ல் இசைப்பயணத்தை தொடங்கியபோது தொழில்நுட்பம் இல்லை.
- இன்று கணினி மூலம் யார் வேண்டுமானாலும் இசையமைக்கலாம்.
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் நடைபெற்ற 11-வது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில், இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான உயரிய 'பத்மபாணி விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஆஸ்கார் வெற்றியாளர் ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது.
பின்னர் இளையராஜா பேசியதாவது:-
இந்த விழாவிற்கு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்புதான் எனது 1,541-வது படத்தின் பின்னணி இசை பணிகளை முடித்துவிட்டு வந்தேன். நிறைய பேர் என்னிடம் எப்படி துல்லியமான பாடல்கள் மற்றும் மெட்டுகளை உருவாக்குகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். அதற்கு நான் சொல்வது ஒன்றுதான். எனக்கு இன்னும் இசை தெரியாது. ஒருவேளை இசை முழுவதையும் கற்றுக்கொண்டு அதில் தேர்ச்சி பெற்றுவிட்டதாக நான் நினைத்திருந்தால், இந்த நேரம் வீட்டிலேயே முடங்கியிருப்பேன். கற்க வேண்டியவை இன்னும் இருப்பதால் தான் நான் இன்றும் உழைத்து கொண்டிருக்கிறேன்.
நான் 1968-ல் இசைப்பயணத்தை தொடங்கியபோது தொழில்நுட்பம் இல்லை. இன்று கணினி மூலம் யார் வேண்டுமானாலும் இசையமைக்கலாம். ஆனால், நேரடி வாத்தியங்கள் (லைவ் ஆர்கஸ்ட்ரா) தரும் உணர்வை எந்திரங்களால் தர முடியாது. அதனால்தான் இன்றும் நான் ஒவ்வொரு வாத்தியத்திற்கும் தனித்தனியாக குறிப்புகளை(நோட்ஸ்) எழுதி, நேரடி இசையையே பதிவு செய்கிறேன் என்றார்.
முன்னதாக நிகழ்ச்சி தொடக்கத்தில், விமான விபத்தில் மரணம் அடைந்த மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி அஜித் பவாருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
- சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று விழா நடைபெறுகிறது.
- 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 2016-2022ம் ஆண்டுகளுக்கான சிறந்த இயக்குநர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிறந்த இயக்குநர்கள் விருது 2016-லோகேஷ் கனகராஜ், 2017-புஷ்கர் காயத்ரி, 2018- மாரி செல்வராஜ், 2019- பார்த்திபன், 2020- சுதா கொங்கரா, 2021- தா.செ.ஞானவேல், 2022-கவுதம் ராமச்சந்திரன் ஆகியோருக்கு சிறந்த இயக்குனர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை உயர்வாக சித்திரிக்கும் படங்களாக அருவி, தர்மதுரை, கனா, பொன் மகள் வந்தாள் படங்களுக்கு சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படங்களாக கமலி ஃபிரம் நடுக்காவேரி, நெற்றிக்கண், அவள் அப்படித்தான்-2க்கு சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த படங்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், 2வது பரிசு ரூ.1 லட்சம், 3வது பரிசு ரூ.75,000, சிறப்பு பரிசு- ரூ.75,000 அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்கு சிறப்பு பரிசாக ரூ.1.25 லட்சம் வழங்கப்படும்.
- சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று விழா நடைபெறுகிறது.
- 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளில் 2016-2022ம் ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு சிறந்த படம்- மாநகரம், 2017- அறம், 2018-பரியேறும் பெருமாள், 2019-அசுரன், 2020- கூழாங்கல், 2021- ஜெய்பீம், 2022- கார்கி ஆகிய படங்கள் சிறந்த படங்களாக தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று விழா நடைபெறுகிறது.
- 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சிறந்த நடிகர்களுக்கான விருது சூர்யா, தனுஷ், விஜய்சேதுபதி, கார்த்தி, பார்த்திபன், ஆர்யா, விக்ரம் பிரபுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகைகளுக்கான விருது, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லியோ மோல் ஜோஸ், சாய் பல்லவிக்கு சிறந்த நடிகைகளுக்கான தமிழக அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ தயாரிக்கிறது.
- D55 ஆக்ஷன் அதிரடி படமாக வரவுள்ளது.
தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இணையும் படம் D55. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ தயாரிக்கிறது.
இந்நிலையில், D55 படத்தின் முக்கிய அறைவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாக இயக்குனர் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி D55 படத்தை ஒரு பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க முடிவு செய்துள்ளார். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே மற்றும் சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நடிகை ஸ்ரீ அஸ்வினிக்கு இன்ஸ்டாகிராமில் மணிகண்டன் என்பவர் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னையில் இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய நபரை துணை நடிகை ஸ்ரீ அஸ்வினி அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துணை நடிகை ஸ்ரீ அஸ்வினிக்கு இன்ஸ்டாகிராமில் மணிகண்டன் என்பவர் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதனை பார்த்து கடுப்பான ஸ்ரீ அஸ்வினி குறுஞ்செய்தி அனுப்பிய உணவக ஊழியர் மணிகண்டன் என்பவரை உணவகத்திற்கு நேரிலே சென்று நடுரோட்டில் வைத்து அடித்து அவரை காவல்துறையில் ஒப்படைத்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.






