என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகை ஸ்ரீ அஸ்வினிக்கு இன்ஸ்டாகிராமில் மணிகண்டன் என்பவர் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னையில் இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய நபரை துணை நடிகை ஸ்ரீ அஸ்வினி அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துணை நடிகை ஸ்ரீ அஸ்வினிக்கு இன்ஸ்டாகிராமில் மணிகண்டன் என்பவர் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதனை பார்த்து கடுப்பான ஸ்ரீ அஸ்வினி குறுஞ்செய்தி அனுப்பிய உணவக ஊழியர் மணிகண்டன் என்பவரை உணவகத்திற்கு நேரிலே சென்று நடுரோட்டில் வைத்து அடித்து அவரை காவல்துறையில் ஒப்படைத்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்.
- அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்தனர்
நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.
ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.
அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்தனர்
இதை தொடர்ந்து, அஜித்தை துபாய் ரேஸிங் களத்தில் நடிகர் மாதவன் நேரில் சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
- 'தும் ஹி ஹோ' பாடல் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்றார்.
- தமிழில், ‘நான் உன் அழகினிலே’, அடடா என்ன ஆழகு உள்ளிட்ட பாடல்களைப் பாடி உள்ளார்.
இனி திரைப்படப் பாடல்களைப் பாடப்போவதில்லை என்று பிரபல பின்னணி பாடகர் அர்ஜித் சிங் அறிவித்துள்ளார்.
38 வயதே ஆகும் கடந்த 15 ஆண்டுகளாகத் திரைப்படங்களில் பாடி வருகிறார். இந்தியில் ஆஷிக் 2 படத்தின் 'தும் ஹி ஹோ' பாடல் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்றார்.
தமிழில், 'நான் உன் அழகினிலே', அடடா என்ன ஆழகு உள்ளிட்ட பாடல்களைப் பாடி உள்ளார்.
கடந்த ஆண்டு இந்திய அரசு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது. இந்நிலையில் இனி திரைப்படங்களில் பாடப்போவதில்லை என அர்ஜித் சிங் அறிவித்துள்ளார். இருப்பினும் திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
அர்ஜித் சிங் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "உண்மையைச் சொல்லப்போனால், எனக்குத் திரையிசைப் பாடல்களில் ஒருவித சலிப்பு ஏற்பட்டுவிட்டது.
எனது வளர்ச்சிக்கு புதிய வகை இசையை ஆராய வேண்டிய தேவை உள்ளது. ஒரே மாதிரியான இசையில் எனக்கு ஆர்வம் குறைந்துவிட்டது.
பின்னணிப் பாடகர் பணியிலிருந்து விலகினாலும், இசையைத் நான் கைவிடவில்லை.
இனி ஒரு இண்டிபெண்டண்ட் ஆர்ட்டிஸ்ட் ஆக இசையை உருவாக்குவதிலும், இந்திய கிளாசிகல் இசையில் கவனம் செலுத்தவும் விருபுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அர்ஜித் சிங்கின் இந்தத் திடீர் முடிவு அவரது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4-வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், படம் "இதயம் முரளி". படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
இப்படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக இதயம் முரளி உருவாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, அவரது மகன் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இதயம் முரளி படம் காதலர் தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் 2-வது சிங்கிள் தங்கமே, தங்கமே பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
- தணிக்கை வாரியத்தின் இந்த செயல் அப்பட்டமான தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் போக்காக தெரிகிறது.
- நான் என் மனதில் பட்டதை தைரியமாக சொல்வேன்.
முரளி கிரிஷ்.எஸ் இயக்கத்தில் நாளை மறுநாள் (30-ந்தேதி) திரைக்கு வர இருக்கும் படம் 'கருப்பு பல்சர்'. இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ் மதுனிகா, மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் புரமோஷன் விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு பேசினார். சமீப காலமாக விஜய்யை கடுமையாக எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டு வந்த மன்சூர்அலிகான் நேற்று நடந்த 'கருப்பு பல்சர்' பட விழாவில் 'ஜன நாயகன்' பட விவகாரம் குறித்து விஜய்க்கு ஆதரவாக பேசினார். படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர தாமதிப்பதாக கூறி தணிக்கை வாரியத்திற்கு கண்டனம் தெரிவித்து பேசினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:-
படம் எடுப்பது என்பது படைப்பாளியின் சுதந்திரம். ஆனால் தற்போது அந்த சுதந்திரம் பறிபோய் கொண்டு இருக்கிறது. படைப்பாளிகள் நசுக்கப்பட்டு வருகிறார்கள். மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தும் படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கையில் விஜய்யின் ஜனநாயகன் படத்தை வெளியிட முடியாமல் தணிக்கை வாரியம் செய்வது எந்த வகையில் நியாயம். மத்திய அரசு ஏன் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு படத்தை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அந்த படத்துக்கு முதலீடு செய்த தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஏன் தணிக்கை வாரியம் யோசிக்க மறுக்கிறது.
இந்த படத்தை வெளியிடுவதால் அவர்களுக்கு என்ன பிரச்சனை வந்து விடப் போகிறது. அவரது கடைசி படம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள் .ஆனால் பொங்கல் பண்டிகைக்கு அந்த படத்தை வரவிடாமல் செய்து விட்டார்கள். இப்போது அந்த படத்தை வெளியிடவே கூடாது என்ற வகையில் முயற்சி செய்து வருகிறார்கள் .
தணிக்கை வாரியத்தின் இந்த செயல் அப்பட்டமான தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் போக்காக தெரிகிறது. மத்திய அரசும் அதற்கு துணை போகிறது. நாட்டில் எவ்வளவோ அத்துமீறல்கள் அடக்கு முறைகள் மக்கள் பிரச்சனைகள் இருக்கும் போது துளி கூட செவி சாய்க்காத மத்திய அரசு இது போன்ற பிரச்சனைகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து முழுமூச்சாக இறங்குவது பயமாக இருக்கிறது. இப்படி சென்றால் படைப்பாளியின் சுதந்திரம் என்ன ஆவது. இதை நினைத்தாலே வேதனையாக இருக்கிறது. நான் என் மனதில் பட்டதை தைரியமாக சொல்வேன். எந்த இடத்திலும் பயம் இல்லாமல் பேசுவேன். எனக்கு யாரைப் பற்றியும் கவலை கிடையாது. திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும்.
இந்த போக்கு தொடர்ந்தால் படங்கள் இனி சுதந்திரமாக வெளிவர முடியாது. என்னை கேட்டால் தணிக்கை வாரியமே எதற்கு என்பேன். நல்ல படத்தை மக்கள் மதிப்பீடு செய்து சான்றிதழ் அளித்தால் போதும். எதற்கு தணிக்கை வாரியம்? என்று பேசினார்.
- சுப்ரபாத சேவையில் அவர் தனது மகன்களுடன் சாமி தரிசனம் செய்தார்.
- தரிசனம் முடிந்து தனுஷ் கோவிலில் இருந்து வெளியே வந்த போது அவரை காண பக்தர்கள் முண்டியடித்தனர்.
நடிகர் தனுஷ் அவரது மகன்களுடன் நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்தார். இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். சுப்ரபாத சேவையில் அவர் தனது மகன்களுடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
தரிசனம் முடிந்து தனுஷ் கோவிலில் இருந்து வெளியே வந்த போது அவரை காண பக்தர்கள் முண்டியடித்தனர். இதனால் அந்த பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. மேலும் சிலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். தனது மகன்களுடன் வந்த தனுஷ் அங்கிருந்தவர்களை பார்த்து கைகூப்பி வணங்கியபடி சென்றார்.
- மங்காத்தா’ படத்தின் ரீ ரிலீஸை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
- ரீ ரிலீஸில் இதுவரை வெளிவந்த படங்கள் செய்த அனைத்து சாதனைகளையும் ‘மங்காத்தா’ முறியடித்துள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான 'மங்காத்தா' படம் கடந்த 23-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. 'மங்காத்தா' படத்தின் ரீ ரிலீஸை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை 'மங்காத்தா' படம் ரூ.16 கோடி வசூலித்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் 5 ஆம் நாள் நிலவரப்படி ரூ.17.5 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் ஓப்பனிங் வசூலில் ரீ ரிலீஸில் இதுவரை வெளிவந்த படங்கள் செய்த அனைத்து சாதனைகளையும் 'மங்காத்தா' முறியடித்துள்ளது.
'மங்காத்தா' படத்தில் அர்ஜுன், திரிஷா, வைபவ், அஞ்சலி, பிரேம்ஜி, ராய் லக்ஷ்மி, ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் ஜெயபிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
- புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்த படம் பிப்ரவரி 6-ந்தேதி திரைக்கு வருகிறது.
- யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும் கொண்டாடப்பட்டன.
முன்னணி நடிகர்களின் வெற்றி படங்கள் மீண்டும் ரீ-ரிலீசாகும் போக்கு தமிழ் சினிமாவில் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கூட அஜித்குமாரின் 'மங்காத்தா' படம் ரீ-ரிலீசாகி வசூல் குவித்து வருகிறது.
அந்தவகையில் 2008-ம் ஆண்டில் எஸ்.சரவணன் இயக்கத்தில் சிம்பு, சனா கான், சினேகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி 'ஹிட்' அடித்த 'சிலம்பாட்டம்' படம் மீண்டும் ரிலீசுக்கு வருகிறது. புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்த படம் பிப்ரவரி 6-ந்தேதி திரைக்கு வருகிறது.

சிம்பு இரட்டை வேடங்களில் நடித்த இந்த படம் வசூல் குவித்ததுடன், சிம்புவின் திரைப் பயணத்தில் முக்கியமான படமாகவும் அமைந்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும் கொண்டாடப்பட்டன.
இந்த படம் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீசுக்கு வரவிருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.
- வனத்துறையினரிடம் அனுமதி பெறாமல் தடை மீறி மலை உச்சி வரை சென்று வந்துள்ளார்.
- அவர் மலை ஏறி இறங்க மிகவும் சிரமம் அடைந்ததாகவும், இருள் சூழ்ந்து விட்டதால் மிகவும் அச்சம் அடைந்து விட்டதாக குறிப்பிட்டு உள்ளார்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்கின்றனர். இந்த மலை பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலையில் ஏற வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சின்னத்திரை நடிகையான அர்ச்சனா ரவிச்சந்திரன் என்பவர் ஓரிரு தினங்களுக்கு முன்பு வனத்துறையினரிடம் அனுமதி பெறாமல் தடை மீறி மலை உச்சி வரை சென்று வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் மலை ஏறி இறங்க மிகவும் சிரமம் அடைந்ததாகவும், இருள் சூழ்ந்து விட்டதால் மிகவும் அச்சம் அடைந்து விட்டதாக குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர் மலையேற்றம் செய்கிறீர்கள் என்றால் சீக்கிரமாகவே தொடங்குங்கள், எப்போதும் சூரிய அஸ்தமனத்திற்கு முன் இறங்குவதை திட்டமிடுங்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.
மலைக்கு தடையை மீறி சென்று வந்த அவர் பிறரையும் மலை ஏற ஊக்குவிப்பது போன்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இயக்குனர் அட்லீ, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார்.
முன்னதாக அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடித்த ஜவான் படத்திலும் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அட்லீ, " தீபிகா படுகோன் எனது லக்கி சார்ம் (Lucky Charm). இந்த படத்தில் அவர் இதுவரை பார்த்திராத வகையில் மிகவும் Fresh ஆகவும், புதிய தோற்றத்திலும் காண்பீர்கள்" என்று தெரிவித்தார்.
ஜவான் படத்தை குறிப்பிட்ட தீபிகாவின் நடிப்பு இந்தப் படத்திலும் அனைவரையும் ஈர்க்கும் எனத் தெரிவித்தார்.
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான படம் 'ராஜாசாப்'. பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.
மிகவும் பிரம்மாண்டமாக ஹாரர் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் பிரபாஸ் மிகவும் ஜாலியாக நகைச்சுவைத்தனத்துடன் நடித்துள்ளார்.
பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் ஜனநாயகனுக்கு போட்டியாக ஜனவரி 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.

பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனாலும் இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாகதகவல் வெளியாகி உள்ளது.
பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில் இப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள் (BAFTA) விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
இதில் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' திரைப்படம், சிறந்த படம், சிறந்த இயக்குனர் உட்பட 14 பரிந்துரைகளைப் பெற்று போட்டியில் முதல் இடத்தில் உள்ளது.
'சின்னர்ஸ்' திரைப்படம் 13 பரிந்துரைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 'ஹாம்நெட்' , 'மார்ட்டி சுப்ரீம்' மற்றும் 'சென்டிமென்டல் வேல்யூ' ஆகிய படங்களும் சிறந்த திரைப்படத்திற்கான போட்டியில் உள்ளன.
இந்த விருது வழங்கும் விழா பிப்ரவரி 22 அன்று லண்டனில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையே மார்ச் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஆஸ்கார் விருதுகளுக்கான இறுதிப்பட்டியலில் சின்னர்ஸ் திரைப்படம் 16 பிரிவுகளிலும், ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் 13 பிரிவுகளிலும் போட்டிக்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.






