என் மலர்
சினிமா செய்திகள்
பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள் (BAFTA) விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
இதில் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' திரைப்படம், சிறந்த படம், சிறந்த இயக்குனர் உட்பட 14 பரிந்துரைகளைப் பெற்று போட்டியில் முதல் இடத்தில் உள்ளது.
'சின்னர்ஸ்' திரைப்படம் 13 பரிந்துரைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 'ஹாம்நெட்' , 'மார்ட்டி சுப்ரீம்' மற்றும் 'சென்டிமென்டல் வேல்யூ' ஆகிய படங்களும் சிறந்த திரைப்படத்திற்கான போட்டியில் உள்ளன.
இந்த விருது வழங்கும் விழா பிப்ரவரி 22 அன்று லண்டனில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையே மார்ச் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஆஸ்கார் விருதுகளுக்கான இறுதிப்பட்டியலில் சின்னர்ஸ் திரைப்படம் 16 பிரிவுகளிலும், ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் 13 பிரிவுகளிலும் போட்டிக்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியில் முன்னணி இயக்குநர் விஷால் பரத்வாஜ். ஷேக்ஸ்பியர் நாடகங்களை தழுவி இவர் எடுத்த படங்கள் பிரசித்தம். ஓம்காரா(ஒதெல்லோ நாடகம்), மகபூல் (மாக்பெத் நாடகம்), ஹைதர்(ஹாம்லெட் நாடகம்) ஆகிய படங்கள் கிளாசிக் ரகம்.
இவர் தற்போது ஓ' ரோமியோ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது ரோமியோ ஜூலியட் நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹைதர் படத்தில் நடித்த ஷாஹித் கபூர் மீண்டும் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக திரிப்தி திம்ரி நடித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் நானா படேகர், பரிதா ஜலால் , அவினாஷ் திவாரி, விக்ராந்த் மாஸ்ஸி, திஷா பதானி மற்றும் தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி உள்ள இதன் டிரெய்லர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற கவர்ச்சி பாடலின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதில் ஷாஹித் கபூர் உடன் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடனமாடியுள்ளார். இந்த வீடியோ பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
இப்படம் பிப்ரவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழில், SP.பொன் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Flag.
ஐ அண்ட் ஐ மூவிஸ் சார்பில் வைரப் பிரகாஷ் தயாரிப்பில் உருவான இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
புகழ்பெற்ற பாலிவுட் திரைப்பட நடிகர் மிக்கி மஹிஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இட்லி கடை திரைப்படத்தில் சின்ன வயது தனுஷாக நடித்த தீஹான், அமீர் மாலிக், கிரீத்துவாரகேஷ், அபினவ் கோ சாமி, பபுஷா மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.
படத்தின் டிரெய்லர் பார்த்துவிட்டு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டியுள்ளார். ஒவ்வொரு இந்தியரும் அவசியம் திரையில் கண்டு மகிழ வேண்டிய படம் Flag என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி , மராத்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
- ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார்.
- தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
நடிகர் விஜயின் 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்று உடனே வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஜன நாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் இவ்வழக்கு தனி நீதிபதியின் விசாரணை அனுப்பி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இரு நீதிபதிகள் உத்தரவை அடுத்து நீதிபதி ஆஷா மீண்டும் வழக்கை விசாரிக்கிறார்.
இந்நிலையில், ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் வழக்கைத் திரும்பப் பெற்று, தணிக்கை குழுவின் ரிவைசிங் கமிட்டியை அணுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிவைசிங் கமிட்டியிடம் செல்வதா அல்லது வழக்கை தொடர்வதா என்பது குறித்த இறுதி முடிவை பட தயாரிப்பு நிறுவனம் நாளை எடுக்கும் என்று கூறப்படுகிறது.
- சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார்.
- சீதா ராமம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார். மேலும், ராஷ்மிகா மந்தனா, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இந்நிலையில், துல்கர் சல்மானும் மிருணாள் தாக்கூரும் புதிய படத்தில் ஒன்றாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் சீதா ராமம் 2-வாக இருக்குமா? இல்லை புதிய படமாக இருக்குமா என்று ரசிகர்களை இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முன்னதாக மிருணாள் தாக்கூரிடம் சீதா ராமம் 2-ம் பாகம் வருமா? என்று கேள்வி எழுப்பியதற்கு, "எனக்கு சீதா ராமம் 2-ம் பாகம் வருமா என்று எந்த யோசனையும் இல்லை. ஆனால் அந்த படம் உருவானால் அதில் நானும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அனிமல் படத்தை மூன்று பாகங்களாகக் கொண்டுவரும் திட்டத்தில் சந்தீப் வங்கா இருக்கிறார்
- 'அனிமல் பார்க்' எனப் பெயரிடப்பட்டுள்ள இரண்டாம் பாகம் படப்பிடிப்பு 2027-ஆம் ஆண்டில் தொடங்கும்
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, திரிப்டி டிம்ரி ஆகியோர் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த படம் அனிமல். விமர்சனரீதியாக பெரிதும் பாரட்டுகளை பெறாவிட்டாலும், வசூல்ரீதியாக இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 2023ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக உருவெடுத்தது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் ரன்பீர் கபூர் பேசியுள்ளார். டெட்லைன் ஹாலிவுட்-இல் இதுகுறித்து பேசிய அவர், 'அனிமல் பார்க்' எனப் பெயரிடப்பட்டுள்ள இரண்டாம் பாகம் படப்பிடிப்பு 2027-ஆம் ஆண்டில் தொடங்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளார். இதில் ரன்பீர் கதாநாயகன், வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும், முதல் பாகத்தின் இறுதியில் காட்டப்பட்டது போல, பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் கதாநாயகனைப் போலவே வில்லன் மாறுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அனிமல் படத்தை மூன்று பாகங்களாகக் கொண்டுவரும் திட்டத்தில் சந்தீப் வங்கா இருப்பதாகவும் ரன்பீர் தெரிவித்துள்ளார். படத்தின் வன்முறை மற்றும் பெண் வெறுப்பு தொடர்பான முந்தைய விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "அனிமல் திரைப்படம் சமூகத்தில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தைத் தொடங்கியுள்ளது" என்றும், ஒரு நடிகராகப் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- வசனங்கள் எதுவுமின்றி மெளனப் படமாக காந்தி டாக்ஸ் உருவாகியுள்ளது.
- 'காந்தி டாக்ஸ்' படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் நடித்திருந்தனர். இதன்பின்னர் இந்த மூவர்கள் கூட்டணி இணைந்துள்ள படம் 'காந்தி டாக்ஸ்'.
வசனங்கள் எதுவுமின்றி மெளனப் படமாக உருவாகியுள்ள காந்தி டாக்ஸ், டார்க் காமெடி ஜானரில் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
கிஷோர் பி பெல்லேக்கர் இயக்கியுள்ள 'காந்தி டாக்ஸ்' படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
மேலும், 'காந்தி டாக்ஸ்' படம் காந்தி நினைவுதினமான வருகிற 30-ந்தேதி உலகளவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், காந்தி டாக்ஸ் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
கதைக்களம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணாச்சி என மக்களால் அழைக்கப்படும் பெரிய செல்வந்தராக குகன் சக்கவர்த்தி வாழ்ந்து வருகிறார். திருமணமான முதல் இரவே அவருக்கு இல்லறத்தில் சோதனை வருகிறது. இதனால் மனம் உடைந்து கடற்கரையில் தனிமையில் இருக்கும் நேரத்தில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவரை காப்பாற்றிய குகனுக்கு தற்கொலைக்கு முயன்ற பெண் தனது முன்னாள் காதலி என தெரிய வருகிறது.
அவரது நிலையை அறிந்த குகன் சக்கரவர்த்தி அந்த பெண்ணுடன் வாழ்வது மட்டுமின்றி அவருக்காக ஒரு கொலை செய்கிறார். இந்நிலையில் குகன் சக்கரவர்த்தியால் கொலை செய்யப்பட்டவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குகனையும், காதலியையும் மிரட்டுகிறார். இதனால் குகன் அதிர்ச்சி அடைகிறார்.
இறுதியில் கொலை செய்யப்பட்டவர் எப்படி மிரட்டுகிறார்? குகன் சக்கரவர்த்தி என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
படத்தை இயக்கியது மட்டுமின்றி படத்தில் உள்ள 21 கிராப்ட்களையும் தனி ஆளாக கையாண்டு கின்னஸ் சாதனைக்கு முயற்சித்துள்ளார் இயக்குநர் குகன் சக்கரவர்த்தி. மனைவியிடம் அன்பு முன்னாள் காதலியிடம் அர்ப்பணிப்பு மற்றும் ஊர் செல்வந்தராக நடித்துள்ள குகன் கேரக்டர் பொருத்தமாக அமைந்துள்ளது.
படத்தில் 2 கதாநாயகிகளின் காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. பொன்னம்பலம், வையாபுரி, வாசுவிக்ரம் ஆகியோர் நடிப்பு கூடுதல் பலம்.
காட்சிகளில் பல இடங்களில் செயற்கை தனமான நடிப்பு, திரைக்கதையில் சுவாரசியம் குறைவு. ஆகியவற்றை சரி செய்து இருக்கலாம். இறுதிக்காட்சியில் மெரினா கடலுக்கு திராவிட கடல் என பெயர் மாற்ற கோரிக்கை சிறப்பு.
- இந்த கடிகாரம் மிக முக்கியமான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
- உலகில் சிலரிடம் மட்டுமே இருக்கிறது.
பாலிவுட் பாட்ஷா என்று திரையுலக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ஷாருக்கான்.
இந்திய திரை உலகில் மட்டும் இன்றி சர்வதேச அளவில் தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் ஷாருக்கான். இந்நிலையில் ஷாருக்கான் சமீபத்தில் சவுதி அரேபியாவில் நடந்த ஜாய் விருது விழாவில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
காரணம் அந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ. 13 கோடி. அப்படி என்ன இருக்கிறது அந்த கடிகாரத்தில்? 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட இந்த கடிகாரம் 54 வைரங்களாலும் மற்றும் வெள்ளி அப்டிசியன் டயலும் ஒளியைப் பொறுத்து நிறங்களும் மாறும் சிறப்பு கொண்டதாகும். இந்த கடிகாரம் மிக முக்கியமான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தயாரிக்கப்படுகிறது. உலகில் சிலரிடம் மட்டுமே இருக்கிறது.
ஷாருக்கானுக்கு பிடித்த கைக்கடிகாரங்களில் இது மிகவும் பிடித்த கடிகாரம் என்பது குறிப்பிடத்தக்கது.
- வீட்டிற்கான அட்வான்ஸ் தொகை ரூ.22 கோடியை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்து இருக்கிறார்.
- வீடு வாங்கும் பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
திரை உலக பிரபலங்கள் பலர் துபாயில் வீடு வாங்கி வருவது அதிகரித்து வருகிறது. தமிழ் திரை உலக நட்சத்திரங்கள் மட்டுமல்ல பாலிவுட், தெலுங்கு, மலையாள திரை உலகில் பலரும் துபாயில் சொந்தமாக வீடு வாங்கி உள்ளனர். தமிழ் திரை உலகில் அஜித், நயன்தாரா, யுவன் சங்கர் ராஜா உள்பட பலர் வீடு வாங்கி இருக்கும் நிலையில் நடிகர் சிம்புவும் துபாயில் தற்போது சொந்தமாக ஒரு வில்லாவை வாங்கி இருக்கிறார்.
அஜித் வீட்டின் அருகே இருக்கும் இந்த ஆடம்பர வில்லாவின் விலை ரூ.57 கோடி என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வீட்டிற்கான அட்வான்ஸ் தொகை ரூ.22 கோடியை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்து இருக்கிறார்.
சென்னையில் இருந்து 4 மணி நேரம் விமான பயணத்தில் துபாய் சென்று தனி உரிமையுடனும் சுதந்திரமாகவும் இருப்பதற்கு வசதியாக இருப்பதால் அங்கு வீடு வாங்கும் பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
- சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
- இப்படம் பொங்கலையொட்டி கடந்த 14-ந்தேதி வெளியானது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான படம் "வா வாத்தியார்". இந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் தமிழில் எல்.ஐ.கே., ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கார்த்தியின் 26-வது படமான இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்தது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலையொட்டி கடந்த 14-ந்தேதி வெளியான நிலையில், ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில், "வா வாத்தியார்" படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, "வா வாத்தியார்" படம் நாளை (ஜன.28) அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
- தணிக்கை வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது
நடிகர் விஜயின் 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்று உடனே வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஜன நாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் இவ்வழக்கு தனி நீதிபதியின் விசாரணை அனுப்பி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இரு நீதிபதிகள் உத்தரவை அடுத்து நீதிபதி ஆஷா மீண்டும் வழக்கை விசாரிக்கிறார்.
தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக தணிக்கை வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகி இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.






