என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 11-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் Title Glimpse வீடியோவை ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தனது 'Taxiwaala' இயக்குனர் ராகுல் சங்க்ரித்யனுடன் மீண்டும் இணைந்துள்ளார். இது விஜய் தேவரகொண்டாவின் 14-வது படமாகும்.

    இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கான தலைப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அப்படத்திற்கு 'ரணபாலி' என்று பெயரிடப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 11-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் Title Glimpse வீடியோவை ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    இதனிடையே, விஜய் தேவகொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்வதாக தகவல்கள் வெளியான நிலையில், இருவரும் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 



    • யோகி பாபு, சுனில் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
    • பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ரேவா இசையமைக்கிறார்.

    நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான '3BHK' படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சித்தார்த் நடித்து வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

    கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் 'ரவுடி அண்ட் கோ' படம் உருவாகி வருகிறது. 'டக்கர்' படத்திற்கு பிறகு சித்தார்த் மற்றும் கார்த்திக் ஜி கிரிஷ் இணையும் இரண்டாவது படம் இதுவாகும். இந்தப் படத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடிக்கிறார். யோகி பாபு, சுனில் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

    பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ரேவா இசையமைக்கிறார். இந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள 'ரவுடி அண்ட் கோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 



    • பெமினிசி பாத்திமா படத்தில் நடித்த ஷாம்லா ஹம்சாவுக்கு சிறந்த நடிகை, மஞ்சுமல் பாய்ஸ் சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டது.

    2024ஆம் ஆண்டுக்கான கேரள மாநிலத்தின் திரைப்பட விருதுகள் கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நேற்று குடியரசு தினத்தன்று முதல்வர் பினராயி விஜயன் விருதுகளை வழங்கினார்.

    பிரம்மயுகம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை மம்மூட்டிக்கு முதல்வர் பினராயி விஜயன் வழங்கினார்.


    அதே சமயம், பெமினிசி பாத்திமா படத்தில் நடித்த ஷாம்லா ஹம்சாவுக்கு சிறந்த நடிகை, மஞ்சுமல் பாய்ஸ் சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டு மம்மூட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் மமூட்டி சிறந்த நடிகருக்கான மாநில விருதை பெறுகிறார்.

    இது மம்மூட்டி பெற்றுள்ள 7-வது மாநில விருதாகும். 1984, 1989, 1993, 2004 மற்றும் 2009,2023 ம் ஆண்டுகளில் சிறந்த நடிகருக்கான கேரள அரசின் மாநில விருதை மம்மூட்டி வென்றுள்ளார்.  

    மெழுகு அருங்காட்சியகத்தில் உள்ள பிளாஸ்டிக் சிலைகளைப் போல இருக்கின்றன. பார்க்க அழகாக இருக்கும், ஆனால் அவற்றில் உயிர் இல்லை.

    கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22 முதல் நடந்த இலக்கியத்திருவிழா நேற்று முடிவடைந்தது.

    இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், "பாலிவுட் அதன் ஆன்மாவை இழந்துவிட்டது. இந்தி சினிமாக்கள் இப்போது மெழுகு அருங்காட்சியகத்தில் உள்ள பிளாஸ்டிக் சிலைகளைப் போல இருக்கின்றன. பார்க்க அழகாக இருக்கும், ஆனால் அவற்றில் உயிர் இல்லை.

    இன்றைய இந்தி படங்கள் வெறும் ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள் மற்றும் மார்க்கெட்டிங் மூலம் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றன. அவற்றில் கதைக்கோ அல்லது உணர்வுகளுக்கோ இடமில்லை.

    தென்னிந்திய சினிமாக்களை, குறிப்பாகத் தமிழ் மற்றும் மலையாளப் படங்களைப் பாருங்கள், அவை இன்னும் மண்ணின் வாசனையோடு இருக்கின்றன.

    சாமானிய மக்களின் வாழ்க்கையையும், சமூகப் பிரச்சினைகளையும் அவை தைரியமாகப் பேசுகின்றன.

    ஜெய் பீம், மாமன்னன் போன்ற படங்கள் சமூக மாற்றத்திற்காகக் குரல் கொடுக்கின்றன. ஆனால் பாலிவுட் இன்னும் வணிக வலையில் சிக்கிக்கிடக்கிறது.

    நமது கதைகள் நமது வேர்களைப் பற்றிப் பேச வேண்டும். அதை விட்டுவிட்டு வெறும் கிளாசிக் மற்றும் மேலோட்டமான கவர்ச்சியை மட்டும் நம்பினால் மக்கள் நம்மை விட்டு விலகிவிடுவார்கள்." என்று தெரிவித்தார். 

    விஜய் தேவரகொண்டாவின் 14-வது படம் இதுவாகும். ராஷ்மியாக கதாநாயகியாக நடிக்கிறார்.

    விஜய் தேவரகொண்டா தனது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னதாக ஆங்கிலேயர் இந்தியர்களை எப்படி கொடுமைப்படுத்தினார்கள். ஆங்கிலேயரிடம் இருந்து தனது மக்களை வீரமிக்க இளைஞன் காப்பாற்றும் வகையில் மறைக்கப்பட்ட வரலாற்றை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

    இது விஜய் தேவரகொண்டாவின் 14-வது படமாகும். இந்த நிலையில் இந்த படத்திற்கான டைட்டிலை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. செப்டம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியது. ராகுல் சங்கிரித்யான் இயக்க, அஜய்-அதுல் இசையமைக்கிறார். மைத்திரி மூவி மேக்கர் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது.

    • இசையமைப்பாளர் அனிருத் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.
    • தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் உருவாகி வரும் படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ளார்.

    'சிறை' படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் எல்.கே. அக்ஷய் குமார், மலையாள ஸ்டார் பேசில் ஜோசப் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் உருவாகி வரும் படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்துள்ளார்.

    இதில் ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன், ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார் கள். இந்தப்படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். நகைச்சுவை கதையாக தயாராகும் இந்தப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில் படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இதனை வெளியிட்டுள்ளார். மேலும் படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் அறிவிப்பு தொடர்பான வீடியோ ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. 


    • மேப்படியான் படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருதை விஷ்ணு மோகன் பெற்றுள்ளார்.
    • மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகவுள்ளது

    நடிகர் மோகன்லாலின் 367வது படத்தை இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பை போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது படக்குழு. கோகுலம் கோபாலன் தனது ஸ்ரீ கோகுலம் மூவீஸ் நிறுவனத்தின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படம் குறித்த மற்ற தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், இந்திய அரசின் ஆபரேஷன் கங்காவை அடிப்படையாக கொண்ட கதை என தகவல்கள் பரவிவருகிறது.

    உன்னி முகுந்தன் மற்றும் அஞ்சு குரைன் நடித்த மேப்படியான் படம்மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் விஷ்ணு மோகன். இன்னுவாரே எனும் படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் மோகன்லால் உடன் இணைந்துள்ளார். துடரும் படத்திற்குப் பிறகு, தற்காலிகமாக எல் 366 என்று பெயரிடப்பட்டுள்ள தனது 366வது படத்திற்காக தருண் மூர்த்தியுடன் மீண்டும் இணைகிறார் மோகன்லால். இதனைத்தொடர்ந்து இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 

    இதனிடையே மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் படத்தை இயக்கி வருகிறார்.

    Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4-வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், படம் "இதயம் முரளி". படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

    இப்படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக இதயம் முரளி உருவாகி வருகிறது.

    தமிழ் சினிமாவில் நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, அவரது மகன் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

    இதயம் முரளி படம் காதலர் தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் 2-வது சிங்கிள் தங்கமே, தங்கமே நாளைமறுதினம் 28-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    • சென்சார் கிடைக்காததால் ஜன நாயகன் படம் இன்னும் வெளியாகவில்லை.
    • இன்று செய்தியாளர்களை சந்தித்து லோகேஷ் கனகராஜ் பேசினார்

    ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாகவிருந்து. ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் கிடைக்காததால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை.

    இப்படத்தில் இயக்குனர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய லோகேஷ் கனகராஜ், "வினோத் அண்ணாவும், விஜய் அண்ணாவும் ஜனநாயகனில் கேமியோ செய்ய அழைத்தார்கள்.. அவ்வளவுதான் என்னால் சொல்லமுடியும்" என்று தெரிவித்தார்.

    இதன்மூலம் ஜன நாயகன் படத்தில் கேமியோ ரோலில் நடித்ததை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார்.

    • ரவி தேஜா நடிப்பில் அண்மையில் மாஸ் ஜாதரா படம் வெளியானது.
    • ரவி தேஜாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ரவி தேஜா. இவரை ரசிகர்கள் அன்போடு மாஸ் மகாராஜா என அழைப்பர்.

    ரவி தேஜா நடிப்பில் அண்மையில் வெளியான மாஸ் ஜாதரா படம் கலைவையான விமர்சங்களையே பெற்றது.

    இந்நிலையில், ரவி தேஜா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இருமுடி என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை சிவா நிர்வாணா இயக்குகிறார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் வெளியான குஷி படத்தை சிவா நிர்வாணா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கைதி 2 படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் தகவல் பரவியது.
    • அல்லு அர்ஜுனை வைத்து புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்

    மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது.

    'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியானது. தற்போது மலாய் மொழியில் கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

    கூலி படத்திற்கு கைதி 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது.

    இதனிடையே, கைதி 2 படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் தகவல் பரவியது. கூலி படத்துக்காக ரூ.50 கோடி சம்பளம் பெற்ற லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்திற்கு ரூ.75 கோடி வரை கேட்டதாகவும் இதனை கேட்டு தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய லோகேஷ் கனகராஜ், "நான் அதிக சம்பளம் கேட்டதால் 'கைதி 2' படத்திலிருந்து விலகிவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள், மேலும் சிலர் LCU முடிந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

    இப்போது நான் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன். அல்லு அர்ஜுன் சார் படத்திற்குப் பிறகு எனது அடுத்த படம் 'கைதி 2' தான். 'கைதி 2', 'விக்ரம் 2' மற்றும் ரோலக்ஸ் ஆகிய படங்களை எடுத்து முடிக்காமல் நான் சினிமாவில் இருந்து விலகமாட்டேன். LCU மிக விரைவில் திறக்கப்படும். பென்ஸ் படமும் LCU-வைச் சேர்ந்ததுதான்" என்று தெரிவித்தார். 

    • இந்த தொடரில் சென்னை அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
    • மும்பை அணியுடனான போட்டியில் சென்னை கேப்டன் விக்ராந்த் சதம் அடித்தார்.

    ஒவ்வொரு வருடமும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் சிசிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதில் வேல்ஸ் சென்னை கிங்ஸ், கர்நாடகா புல்டோசர்கள், தெலுங்கு வாரியர்ஸ், மும்பை ஹீரோஸ், பஞ்சாப் தே ஷெர், பெங்கால் டைகர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், கேரளா ஸ்டைகர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்த தொடரில் சென்னை அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால் சென்னை அணியால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியுமா ? என்ற கேள்வி எழுந்தது. அரையிறுதிக்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்ற சொல்லப்பட்டது.

    சென்னை அணி அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டுமென்றால் மும்பை அணியுடனான போட்டியில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். அதுமட்டுமல்லாமல் கர்நாடகா அணி போஜ்புரி அணியை தோற்கடிக்க வேண்டும். இது நடந்தால் தான் சென்னை அணி அரையிறுதிக்கு போக முடியும் என்ற சூழல் உருவானது.

    கர்நாடகா அணி போஜ்புரி அணியை தோற்கடிக்க மறுபக்கம் சென்னை அணி மும்பைக்கு எதிரான போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் விக்ராந்த் நேற்றைய முக்கியமான போட்டியில் சதம் விளாசி தன் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். மேலும் ஆதவ் கண்ணதாசன் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார்

    விக்ராந்த் சதம் அடித்த பிறகு மெர்சல் விஜய் ஸ்டைலில் அந்த சதத்தை கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தவெக தொண்டர்களும் இதனை கொண்டாடி வருகின்றனர்.

    ×