என் மலர்
சினிமா செய்திகள்

ஷங்கரின் கனவு படம்- ஹீரோ யார்?
- பெரும் பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
- முக்கிய அறிவிப்பு ஷங்கர் தரப்பில் இருந்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் எப்படி இருந்த ஆள் தெரியுமா? என்று 'முத்து' படத்தில் சொல்லப்படுவது போல புகழ்ச்சியின் உச்சத்தில் இருந்தவர், இயக்குனர் ஷங்கர். பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கரின் கடைசி படைப்புகளான 'இந்தியன்-2', 'கேம் சேஞ்சர்' படங்கள் தோல்வியை சந்தித்தன.
'இந்தியன்-3' படம் வருமா, வராதா? என்று தெரியாத நிலையில், தனது கனவு படத்தை ஷங்கர் கையில் எடுக்கிறார். அதன்படி 'வேள்பாரி' நாவலை படமாக்கும் முயற்சிகளில் இனி முழுமூச்சாக இறங்கப் போகிறாராம். பெரும் பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதன்படி ஷங்கர் இயக்கும் 'வேள்பாரி' படத்தின் ஹீரோவாக நடிக்க விக்ரம், சூர்யா ஆகியோரின் பெயர் அடிபடுகிறது. அதேவேளை பாலிவுட் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கின் பெயரும் பரிசீலனையில் உள்ளதாம்.
விரைவில் இதுதொடர்பான முக்கிய அறிவிப்பு ஷங்கர் தரப்பில் இருந்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 'வேள்பாரி படத்தின் மூலமாக பழைய பன்னீர்செல்வமாக ஷங்கர் மீண்டும் திரும்புவார்' என்று அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.






