ஜன நாயகன் தணிக்கை விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் கேவியட் மனுத்தாக்கல்

தணிக்கை வாரியம் தனது தரப்பு விளக்கத்தை அளிக்கப் போதுமான அவகாசம் வழங்கப்படவில்லைதணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழுவை அணுகத் தயாரிப்பு நிறுவனம் ஆலோசனை
ஜன நாயகன் தணிக்கை விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் கேவியட் மனுத்தாக்கல்
Published on

'ஜன நாயகன்' பட தணிக்கை சான்று விவகார வழக்கில் ஜன.27 அன்று, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, இப்படத்திற்கு உடனடியாக 'U/A' சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் தணிக்கை வாரியம் தனது தரப்பு விளக்கத்தை அளிக்கப் போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை என்று கூறி, இந்த வழக்கினை மீண்டும் தனி நீதிபதியின் விசாரணைக்கே அனுப்பி வைத்தது.

இந்நிலையில் தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. படக்குழு மேல்முறையீடு செய்தால், தங்களின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தனி நீதிபதி மீண்டும் விசாரணை நடத்தி இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை படத்தின் வெளியீடு குறித்து தெளிவான தகவல் வெளியாகாது.

இதனிடையே சட்டப் போராட்டத்தைத் தொடர்வதற்குப் பதிலாக, தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழுவை அணுகத் தயாரிப்பு நிறுவனம் தற்போது ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com