என் மலர்
சினிமா செய்திகள்
லண்டனில் இருந்து கிராமத்திருக்கு திரும்பிய ஒரு இளம் தொழில்நுட்ப தம்பதியினர், தங்கள் மூதாதையர் வீட்டிற்குள் நுழையும் போது மயக்கமடைந்த ஒரு மர்மமான, வயதான வடிவுக்கரசியை காண்கிறார்கள். அவள் யார் என்று தெரியாமல் அவர்கள் அவளுக்கு உதவ முயற்சிக்கிறார்கள். சில நாட்களில் அந்த வீட்டில் அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது. மேலும் அந்த தொழில் அதிபரின் இளம் குழந்தைகள் ஆபத்தில் சிக்குகிறார்கள்.
இறுதியில் வீட்டில் அமானுஷ்ய விஷயம் நடக்க காரணம் என்ன? வடிவுக்கரசி யார்? குழந்தைகளுக்கு என்ன ஆபத்து? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வடிவுக்கரசி, குறைந்த வசனங்களிலேயே பார்வை, உடல் மொழி மூலம் பயத்தை உருவாக்குகிறார். அவரது அமைதியான நடிப்பு தான் படத்தின் முக்கிய பலம். பல காட்சிகளில் அவர் தோன்றும் விதமே பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
இளம் தம்பதியினராக நடித்துள்ள ஆனந்த் நாக், அபர்ணா இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக குழந்தைகளை பாதுகாக்க முடியாமல் தவிக்கும் பெற்றோரின் மனநிலையை நன்றாக வெளிப்படுத்தியுள்ளனர். குழந்தைகள் தொடர்பான காட்சிகள் கதைக்கு தேவையான பதற்றத்தை கூட்டுகிறது. மற்ற கதாபாத்திரங்களான திலீபன், சிங்கம் புலி, கஜா ராஜா ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இயக்கம்
இயக்குனர் விஜய குமரன், அதிக ஜம்ப் ஸ்கேர் இல்லாமல் சூழல் ஹாரரை தேர்வு செய்துள்ளார். மெதுவாக நகரும் திரைக்கதை மூலம் பயத்தை உருவாக்க முயற்சி செய்துள்ளார். முதல் பாதி நன்றாக அமைந்திருந்தாலும், இரண்டாம் பாதியில் சில காட்சிகள் எதிர்பார்க்கக்கூடிய வகையில் நகரவில்லை.
இசை
செல்லையா பாண்டியனின் பின்னணி இசை ஹாரர் உணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. சில இடங்களில் இசை அதிகமாக பயன்படுத்தப்பட்டாலும், மொத்தத்தில் படத்திற்கு உதவியாக இருக்கிறது.
ஒளிப்பதிவு
மணிகண்டனின் ஒளிப்பதிவு, பழைய வீட்டின் இருண்ட சூழலை அழகாக பதிவு செய்துள்ளது.
ரேட்டிங்- 2/5
- இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைக்க உள்ளார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இணையும் படம் 'D55'. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி D55 படத்தை ஒரு பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், 'D55' படத்தின் முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, 'D55' படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே மற்றும் சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கப்பட உள்ளது.
- இந்த படத்தில் முன்னணி நடிகர்களையும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க திட்டமிடப்பட்டு வருகிறதாம்.
பல வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், இந்தமுறை தமிழ் தாண்டி தெலுங்கில் களம் இறங்கியிருக்கிறார்.
அல்லு அர்ஜூன் நடிப்பில் அவர் புதிய படம் இயக்கப் போகிறார். இது அல்லு அர்ஜூனின் 23-வது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கப்பட இருக்கும் நிலையில், படம் பற்றிய புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது இந்த படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடிக்க பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஷ்ரத்தா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாகவும், அவரது தரப்பில் பச்சைக்கொடி காட்டவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிரடி - ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் முன்னணி நடிகர்களையும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க திட்டமிடப்பட்டு வருகிறதாம்.
மும்பையில் ஒரு சாதாரண மனிதனாக விஜய் சேதுபதி வாழ்ந்து வருகிறார். வாழ்க்கையில் தொடர்ந்து சந்திக்கும் இழப்புகள், பண நெருக்கடி, மன அழுத்தம் ஆகியவற்றுக்கு நடுவே அவர் பயணம் தொடங்குகிறது. மறுபக்கம் பெரும் பணக்காரரான அரவிந்த் சாமி, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு தனது சொத்துக்களை இழக்கிறார்.
இருவரும் ஒரு கட்டத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். அதன்பின் இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? இவர்களின் நிலைமைக்கு என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விஜய் சேதுபதி பார்வை, உடல் மொழி, முகபாவனை மூலம் கவர்ந்து இருக்கிறார். எந்த டயலாக் இல்லாமலும் ஒரு மனிதனின் வலி, கோபம், குழப்பம், அமைதி ஆகிய அனைத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் அவரது நடிப்பு தான் முக்கிய பலம்.
அரவிந்த் சுவாமி, குறைந்த காட்சிகளில் வந்தாலும் கதைக்கு தேவையான அழுத்தத்தை கொடுக்கிறார். அதிதி ராவ், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் அமைதியான நடிப்பை கொடுத்துள்ளார். அனைவருமே வசனம் இல்லாத இந்த உலகத்துக்குள் நன்றாக பொருந்தி நடித்துள்ளனர்.
காந்தி டாக்ஸ் வழக்கமான வணிகப்படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமான முயற்சி. வசனமே இல்லாமல், காட்சிகள், முகபாவனைகள், இசை மூலமாக மட்டுமே கதை சொல்லப்பட்டிருக்கிறது.
இயக்கம்
இயக்குனர் கிஷோர் பாண்டுரங்கா பெலேக்கர், ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை போராட்டத்தை மிக அமைதியாக சொல்ல முயற்சி செய்துள்ளார். சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், படம் தன் பாதையை விட்டு விலகவில்லை.
எல்லாவற்றையும் பார்வையாளரே உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையோடு படம் நகர்கிறது. காந்தி டாக்ஸ் எல்லோருக்குமான படம் அல்ல. வசனம், மாஸ் காட்சிகள், வேகமான திரைக்கதை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இது சவாலாக இருக்கலாம். ஆனால் வித்தியாசமான முயற்சி, நடிப்பை ரசிக்கும் பார்வையாளர்களுக்கு இது ஒரு புதிய அனுபவம்.
இசை
ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்தின் உயிர். இவர் இசை இல்லாமல் இந்த படம் முழுமை பெறாது. ஒவ்வொரு காட்சிக்கும் தேவையான உணர்வை இசை மூலம் கொண்டு வந்துள்ளார்.
ஒளிப்பதிவு
கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவு படத்தின் மனநிலையை அழகாக பதிவு செய்துள்ளது.
ரேட்டிங்-3/5
- இப்படம் வருகிற 6-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ‘வித் லவ்’ படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.
'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். தற்போது 'வித் லவ்' படம் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதில் ஜீவிந்த்க்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.
இப்படத்தை 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர், முதல் பாடல் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் வருகிற 6-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 'வித் லவ்' படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இதையடுத்து நடிகர் அபிஷன் ஜீவிந்த்க்கு நடிகை சிம்ரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகை சிம்ரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கேமராவுக்குப் பின்னால் இருந்து படங்களை எடுப்பது முதல் அதன் முன் தோன்றி நடிப்பது வரை!! அபிஷன் ஜீவிந்த் இந்தப் புதிய நடவடிக்கையை எடுப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.
'வித் லவ்' விரைவில் திரையரங்குகளில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
- நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஹன்சிகாவிடம், ‘எப்படி உடல் எடை குறைத்தீர்கள்?' என்று கேட்கப்பட்டது.
- ஹன்சிகா கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் சோகைல் கட்டாரியாவை பிரிந்து வாழ்கிறார்.
நடிகைகள் பலரும் தங்கள் உடலை அழகாக, ஒல்லியாக, கச்சிதமாக வைத்திருப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை (டயட்) கடைபிடிக்கிறார்கள். மெலிந்த தேகத்துக்கு மாறியும் வருகிறார்கள்.
அந்தவகையில் 'கொழுக் மொழுக்' என அமுல்பேபி போன்று இருந்த ஹன்சிகா மோத்வானி, என்ன செய்தாரோ தெரியவில்லை உடல் எடையை வெகுவாக குறைத்து ஆளே மாறிப் போயுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஹன்சிகாவிடம், 'எப்படி உடல் எடை குறைத்தீர்கள்?' என்று கேட்கப்பட்டது.
அதற்கு ஹன்சிகா, "நான் ஒரு 'பைலேட்ஸ் கேர்ள்'. 'பைலேட்ஸ்' பயிற்சி என்பது மூட்டுகளில் அதிக அழுத்தமில்லாமல் வயிறு, முதுகு, தண்டுவடத்தின் பலம் அதிகரிக்க செய்யும் உடல் நெகிழ்வுத்தன்மைக்கான பயிற்சியாகும்'. இதுதவிர அவ்வப்போது யோகாவும் செய்து வருகிறேன்.', என்றார். ஹன்சிகா கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் சோகைல் கட்டாரியாவை பிரிந்து வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறார் கிஷோர். மனைவி, மகன், மகள் என அன்பான குடும்பத்துடன் வாழந்த வருகிறார். இசை மீது தீராத ஆசைக்கொண்ட கிஷோருக்கு எப்படியாவது பாடகராக வேண்டும் என்பது கனவு. ஆனால், அந்த ஆசை நிறைவேறாமல் போகிறது.
ஆனால், அவரது மகள் தனது தந்தை எப்படியாவது பாடகராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக பல மேடைகளை ஏறுகிறார். அதன் மூலம், வாழ்க்கையில் முன்னேற்றத்தை கண்டு வரும் கிஷோருக்கு மீண்டும் சறுக்கல் ஏற்படுகிறது. இதனால், மனமுடைந்து போகிறார்.
இந்த சூழலில் இருந்து கிஷோர் எப்படி வெளியே வருகிறார்? அவரது வாழ்க்கை என்னவானது? என்பதே படத்தின் மீதி கதை..
நடிகர்கள்
கதையின் நாயகனாக நடித்திருக்கும் கிஷோர், ஏக்கங்களோடு வாழும் ஒரு குடும்ப தலைவரின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கிஷோரின் மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா ராபர்ட், இயல்பாக நடித்து ஸ்கோர் செய்து இருக்கிறார்.
மகன் மற்றும மகளாக நடித்திருக்கும் தனன்யா வர்ஷினி, ஜஸ்வந்த் மணிகண்டன் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இயக்கம்
குடும்பத்தாரின் ஆதரவும், அன்பும் இல்லாமல் சரிந்து போகும், சராசரி மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் திரவ். சுவாரஸ்யமாக கதையை நகர்த்தியிருக்கிறார்.
இசை
பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் தேவராஜ் புகழேந்தி கதைக்களத்திற்கு அதிகமான வலிமையை சேர்த்திருக்கிறது.
ரேட்டிங்-3/5
- படத்தை சாம் ரோட்ரிகஸ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
- 90ஸ்களில் ரசிகர்களை மகிழ்வித்த இந்த காமெடி கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது
நடிகர்கள் பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் புதிதாக உருவாகி வரும் படத்திற்கு `BANG BANG' எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தை சாம் ரோட்ரிகஸ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் தலைப்பு மற்றும் அறிவிப்பு புரோமோவை இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா வெளியிட்டுள்ளார்.
காதலன், மனதை திருடிவிட்டாய், ராசைய்யா, மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் மற்றும் எங்கள் அண்ணா போன்ற படங்களின் மூலம் 90ஸ்களில் ரசிகர்களை மகிழ்வித்த இந்த காமெடி கெமிஸ்ட்ரி கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிடில் க்ளாஸ் வாலிபரான அட்டகத்தி தினேஷ், ஆர்ஓ ப்யூரிபையர் வாட்டர் சப்ளை செய்து வருகிறார். திருமணத்திற்காக, மணமகள் தேவை என மேட்ரிமோனியலில் விளம்பரம் செய்கிறார்.
அப்படி, ரேஷ்மாவை சந்திக்கும் தினேஷ்க்கு அவரை பிடித்துப்போகவே இருவரும் பழகுகிறார்கள். இருவரும் காதலிக்கிறார்கள்.
காதலிக்கும்போது, தன்னிடம் கருப்பு நிற பல்சர் இருப்பதாக தினேஷ் கூற, அந்த பைக்கில் தன்னை அழைத்து செல்லும்படி ரேஷ்மா ஆசையாக கூறுகிறார்.
இதனால், தினேஷ் வேறு வழியின்றி பழைய கருப்பு பல்சர் ஒன்றை விலைக்கு வாங்குகிறார். ஆனால் அந்த பைக்கை வாங்கியதில் இருந்து தினேஷூக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வருகிறது. தன்னை சுற்றி அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன.
அப்போது, இந்த பைக்கில் ஆவி புகுந்து இருப்பது தெரியவருகிறது. இதன்பிறகு, பைக்கில் அமானுஷ்ய சக்தி புகுந்தது எப்படி? தினேஷை துரத்த காரணம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை..
நடிகர்கள்
பட்ஜெட் போட்டு வாழும் இளைஞராக வரும் அட்டகத்தி தினேஷ், தனது வழக்கமான எதார்த்த நடிப்பில் இரு வேடங்களில் கலக்கி இருக்கிறார். அழகாக வந்து தனது கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் ரேஷ்மா. மன்சூர் அலிகான், மதுநிகா, சரவண சுப்பையா, கலையரன் கண்ணுசாமி உள்ளிட்டோரும் தங்களது பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
வழக்கமான கதை என்றாலும் திரைக்கதை எடுத்திருக்கும் விதத்தில் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம். பைக்கில் காளையின் ஆவி புகுந்தது வித்தியாசமான முயற்சி.
இசை
இன்பாவின் இசை படத்திற்கு பலம்
ஒளிப்பதிவு
பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கச்சிதம்.
ரேட்டிங்- 1.5/5
- பிருத்விராஜ் சுகுமாரன், பிரகாஷ் ராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
- தமிழ் புத்தாண்டு மற்றும் உகாதி பண்டிகை காலத்தை ஒட்டி வெளியாகிறது
இயக்குநர் ராஜமௌலி, நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் வாரணாசி. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் படத்திற்கு கதை எழுதியுள்ள நிலையில், ஆஸ்கர் விருதுபெற்ற கீரவாணி படத்திற்கு இசையமைக்கிறார்.
படம் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் உகாதி பண்டிகை காலத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். தற்போது வித் லவ் படம்மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதில் ஜீவிந்த்க்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.
இப்படத்தை 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர், முதல் பாடல் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வித் லவ் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகி அனுபமா பரமேஸ்வரன், அம்மா, அப்பா, தங்கை என வாழ்ந்து வருகிறார். படித்து முடித்து விட்டு வேலை தேடி வரும் அனுபமா, தனது தோழியுடன் ஒரு இரவு பார்ட்டிக்கு செல்கிறார். அங்கே ஆண், பெண் என வித்தியாசம் இல்லாமல் அனைவரும் போதையில் ஆட்டம் போடுகின்றனர்.
அனுபமா குடித்துவிட்டு ஆட்டம் போட்டபடி போதையில் மயங்கி விழ, அந்த சந்தர்பத்தினை பயண்படுத்திக்கொள்ளும் முகம் தெரியாத நபர் ஒருவர், அவரை கர்ப்பமாக்கி விடுகிறார்.
தான் கர்ப்பமானது தெரியாமலேயே நாட்களைக் கடத்தும் அனுபமா பரமேஸ்வரன், அது தெரிய வரும்போது கடும் அதிர்ச்சிக்குள்ளாகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இதனிடையே, பாதுகாப்பான கருக்கலைப்பு சாத்தியமில்லாமல் போகிறது.
இறுதியில் அனுபமா பரமேஸ்வரன் வாழ்க்கை என்ன ஆனது? மர்ம நபர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன் அனிதா என்ற கதாபாத்திரத்தில் உணர்ச்சியாகவும், துணிச்சலாகவும் நடித்துள்ளார். குற்ற உணர்ச்சி, செய்வதறியாது திகைத்து நிற்பது, தனிமை, வெறுப்பு, இயலாமை, மன அழுத்தம் என அனைத்து உணர்ச்சிகளையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். தனிமையில் சிக்கிக்கொள்ளும் ஒரு பெண்ணின் உணர்ச்சியை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட் மற்றும் லிவிங்ஸ்டன் போன்றோர் படத்திற்கு ஆதரவான நடிப்பை வழங்குகின்றனர். சில துணை கதாபாத்திரங்கள் படத்தில் கதை ஓட்டத்தை வலுப்படுத்த உதவுகின்றன.
இயக்கம்
லாக்டவுன் காலத்தில் ஒரு பெண் சந்தித்த மனிதர்களையும், அவர்களை எதிர்கொண்ட விஷயத்தையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.ஜீவா. பிள்ளைகள் தங்களது பிரச்சனை குறித்து பெற்றோர்களை அணுகுவதும், போதை கலாச்சார உலகில் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியங்கள் குறித்து பேசியிருப்பதும் பாராட்டுக்குரியது.
இசை
சித்தார்த் விபின் மற்றும் என்.ஆர்.ரகுநந்தன் ஆகியோரின் இசை, படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. பல இடங்களில் இவர்களின் இசை காட்சியின் கணத்தை மேலும் கூட்டுகிறது.
ஒளிப்பதிவு
சக்திவேலின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. லாக்டவுன் காலத்தில் நம் கண்ட காட்சிகளை கண் முன்னே நிறுத்தி இருக்கிறது.
ரேட்டிங்: 3.5/5






