என் மலர்
சினிமா செய்திகள்
- கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ளார்.
- நாட்டில் நடக்கும் சமூக அவலங்களை காண்பிக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது.
சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரூரிஸ்ட் ஃபேமிலி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், சசிகுமார் படங்களிலையே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் பெற்றது. மேலும் ஆஸ்கார் தகுதிப்பட்டியலிலும் இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து தற்போது சசிகுமார் நடித்து முடித்துள்ள படம் 'மை லார்ட்'. இப்படத்தை ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கியுள்ளார். கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில், தற்போது ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி படம் வரும் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. நாட்டில் நடக்கும் சமூக அவலங்களை காண்பிக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது.
- நடிகர் ரஹ்மான், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் மலையாள சினிமாவுக்கு திரும்புகிறார்.
- படம் திரையரங்குகளில் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்திய திரையுலகில் 23 ஆண்டுகளாக தனது நடிப்பு திறமையாலும், விடாமுயற்சியாலும் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்தவர் பாவனா. பல்வேறு திரைப்படங்கள், பிரபல நடிகர்களுடன் பணியாற்றி இருக்கும் பாவனா தனது 90வது மைல்கல் திரைப்படமான 'அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்' மூலம் மீண்டும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த உள்ளார்.
'நம்மல்' திரைப்படம் மூலம் அறிமுகமான பாவனா, இதுவரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில், `அனோமி' படத்தில் அவர் புது கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்துள்ளார். இந்த திரில்லர் படத்தை அறிமுக இயக்குநர் ரியாஸ் மரத் எழுதி இயக்கியுள்ளார்.
வழக்கமான குற்றவியல் திரில்லர் எல்லைகளைத் தாண்டி, பேரலெல் இன்வெஸ்டிகேஷன் எனும் தனித்துவமான கதை சொல்லும் முறையில், உணர்ச்சிகளும் பதற்றமும் கலந்த திரைக்கதையை அமைந்துள்ளார். படத்தில் பாவனா, 'சாரா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உணர்ச்சி ஆழமும், புத்திசாலித்தனமும் கொண்ட ஒரு தடயவியல் நிபுணராக அவரது நடிப்பு முக்கிய களமாக இருக்கும்.

மேலும் நடிகர் ரஹ்மான், இந்தப் படத்தில் விசாரணை அதிகாரியாக மலையாள சினிமாவுக்கு மீண்டும் திரும்புகிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் பினு பப்பு, விஷ்ணு அகஸ்த்யா, அர்ஜுன் லால், ஷெபின் பென்சன் மற்றும் த்ரிஷ்யா ரகுநாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை டி சீரிஸ் ஃபிலிம் மற்றும் பனோரமா ஸ்டூடியோஸ் வழங்க குமார் மங்கத் பாதக் மற்றும் அபிஷேக் பாதக் தயாரித்துள்ளனர். ராஜேஷ் மேனன், ராம் மிர்சந்தானி, நிதின் குமார் மற்றும் மன்சூத் டி.பி. இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தை ப்ளிட்ஸ்கெர்க் ஃபிலிம்ஸ் (Blitzkrieg Films), ஏபிகே சினிமா (APK Cinema) மற்றும் நடிகை பாவனாவின் சொந்த நிறுவனமான பாவனா ஃபிலிம் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
'அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்' மர்மம், உணர்ச்சி, மற்றும் புத்திசாலித்தனமான விசாரணை ஆகியவற்றின் சங்கமமாக, ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது. இப்படம் திரையரங்குகளில் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக உள்ளது.
- இயக்குனர் மாதவ் தாசன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
- ‘ஆழி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் சரத்குமார் 'ஆழி' படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தினை இயக்குனர் மாதவ் தாசன் இயக்கியுள்ளார். இந்த படம் கடலை மையமாக கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. 'ஆழி' படத்தில் தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், தாமரை செல்வி, வையாபுரி மற்றும் ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
888 புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் பொன்னு கண்ணன் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. இதனிடையே, 'ஆழி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், 'ஆழி' திரைப்படம் வருகிற 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.
பிரபல பாலிவுட் இயக்குனர் ரோகித் ஷெட்டியின் வீட்டின் முன் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோகித் ஷெட்டி இந்தியில் சிங்கம், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆவார்.
மும்பையின் ஜுஹு பகுதியில் உள்ள ரோகித் ஷெட்டியின் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே, நேற்று நள்ளிரவு சுமார் 12:45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.
அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அந்த கட்டிடத்தை நோக்கி சுமார் 4 முதல் 5 சுற்றுகள் துப்பாக்கியால் சுட்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் ரோகித் ஷெட்டி வீட்டிற்குள்ளேயே இருந்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த போலீசார் மற்றும் தடவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையிட்டனர்.
அந்தப் பகுதியில் உள்ள CCTV கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் இத்தகைய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில், தற்போது ரோகித் ஷெட்டி இலக்கு வைக்கப்பட்டிருப்பது பாலிவுட் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இத்தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து 2023-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
- பலரும் ராம் சரண்- உபாசனாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் கடந்த 2012 ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து 2023-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அப்பெண் குழந்தைக்கு கிளின் காரா என பெயர் சூட்டி இருந்தனர்.
இதனை தொடர்ந்து, உபாசனா மீண்டும் கர்ப்பமாக இருந்த நிலையில் மொத்த குடும்பமும் புது உறுப்பினரின் வருகைக்காக காத்திருந்தனர்.
இந்த நிலையில், ராம் சரண்- உபாசனா தம்பத்திக்கு நேற்று இரட்டை குழந்தைகள் பிறந்து இருப்பதாக ராம்சரணின் தந்தையும் நடிகருமான சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "மிகுந்த மகிழ்ச்சியுடனும், நிறைந்த இதயத்துடனும் ராம்சரண் மற்றும் உபாசனாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை. குழந்தைகளும், தாயும் ஆரோக்கியமாகவும் நலமாகவும் உள்ளனர். இந்த குழந்தைகளை எங்கள் குடும்பத்தில் வரவேற்பது தாத்தா பாட்டிகளாகிய எங்களுக்கு மகிழ்ச்சி. அனைவரின் பிரார்த்தனைகள், அன்பு, ஆசீர்வாதங்கள் மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றி கூறுகிறோம் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பலரும் ராம் சரண்- உபாசனாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
- அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
- வீடியோவை கண்ட ரசிகர்கள், பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகாவுக்கும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும் ஐதராபாத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் காதலை போலவே, இருவரும் இந்த விவகாரம் குறித்து வாயைத் திறக்காமல் ரகசியமாகவே வைத்திருந்தனர். ஆனாலும் ராஷ்மிகா விரலில் இருந்த நிச்சயதார்த்த மோதிரம் அதை சொல்லாமல் சொல்லியது.
இதனிடையே, தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு நடத்திய நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்துகொண்டார். அப்போது அவரது விரலில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி பேச்சு எழுந்தது. இதற்கு ராஷ்மிகா, 'இது என் வாழ்நாளில் முக்கியமான ஒன்று' என்று கண்ணடித்து சிரித்தார்.
இதனை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இந்த தகவல்கள் குறித்து இருதரப்பினரும் பதிலளிக்காமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானின் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நாளை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் திருமணத்திற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கு எப்போதும் போல இருதரப்பினரும் பதிலளிக்காமல் மவுனமாக உள்ளனர்.
மேலும் வீடியோவை கண்ட ரசிகர்கள், பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஹாலிவுட்டில் கார் ரேஸிங்கை வைத்து இயக்கப்பட்ட பிரபலமான திரைப்பட சீரீஸ் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்.
இதுவரை இந்த சீரீஸ்-இல் 10 படங்கள் வெளியாகி உள்ளன. இதற்கென உலகெங்கிலும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இதன் 11வது மற்றும் கடைசி பாகம் ற்போது உருவாகி வருகிறது. 2027 ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் படமானது 2028 மார்ச் 17 ஆம் தேதி தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் படத்தின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கடைசி பாகத்திற்கு 'Fast forever' என பெயரிடப்பட்டுள்ளது.
பட சீரிஸ் இன் பிரதான நாயகனான வின் டீசல் இந்த அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், மறைந்த நடிகர் பவுல் வால்கர் உடன் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் பாகத்தில் தான் இருந்த புகைப்படத்தை வின் டீசல் பகிர்ந்துள்ளார்.
இதற்கிடையே இந்த படத்தில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியோனா ரொனால்டோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என புகைப்படங்களை வெளியிட்டு படக்குழு குறிப்பிடதக்கது.

- ராஜ்குமார் பெரியசாமி D55 படத்தை ஒரு பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்
- D55 படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்
தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இணையும் படம் 'D55'. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ தயாரிக்கிறது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி D55 படத்தை ஒரு பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், 'D55' படத்தின் முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, 'D55' படத்தின் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான பாக்யஸ்ரீ போர்ஸ் அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் (AIFF) இளையராஜா கைகளில் விருது வாங்கியது குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், டியர் இளையராஜா சார், எனது சொந்த ஊரான சத்ரபதி சம்பாஜிநகரில் நடைபெற்ற அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் உங்களால் கௌரவிக்கப்பட்டதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமையாகக் கருதுகிறேன்.
உங்களது ஆசீர்வாதங்களுடன் எனது பயணத்தைத் தொடங்குவதில் நான் மிகுந்த நன்றியுணர்வுடன் இருக்கிறேன்.
இந்த அழகான கௌரவத்திற்கும், 'மராத்வாடாவின் மகள்' என்று என்னைக் கொண்டாடியதற்கும் AIFF-க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
சத்ரபதி சம்பாஜிநகர் எப்போதும் பெருமைப்படும் வகையில் செயல்படுவேன் என உறுதியளிக்கிறேன்.
எனது சாதனையைப் பாராட்டிப் பேசிய ரசூல் பூக்குட்டி சார் அவர்களுக்கு மிக்க நன்றி." என்று தெரிவித்துள்ளார்.
பாக்யஸ்ரீ தமிழில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான காந்தா படத்தில் குமாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வருட அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜாவுக்கு பத்மபாணி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இன்னும் 5 நிமிடங்கள் அவர்கள் என்னிடம் பேசி இருந்தால், ஒருவேளை நான் அதை அணிந்து கொண்டிருப்பேன்.
- என்னை மற்ற நடிகைகளுடன் ஒப்பிட்டு பேசியதுதான் பிரச்சனை.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சிறிய வயது காலகட்டத்தில் தனக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து ஆதங்கத்துடன் அவர் கூறியதாவது:-
நான் சினிமாவுக்கு வரும் முன், மிக சின்ன வயதில் நடந்த சம்பவம் இது. நான் எப்போதும் இதனை மறக்கவே மாட்டேன். போட்டோ ஷூட் என அழைத்தார். நான் என் சகோதரருடன் சென்றேன். அவரை வெளியே அமர சொல்லிவிட்டு என்னை உள்ளே அழைத்து சென்றார்.
உள்ளாடைகளை கொடுத்து, இதனை அணிந்து கொள், உன் உடலை நான் பார்க்க வேண்டும் என சொன்னார். எனக்கு என்னவென்றே புரியவில்லை. நான் மிகவும் சின்ன பிள்ளை அப்போது.
இங்கு எல்லாம் இப்படித்தான் நடக்குமோ என நான்கூட யோசிக்க ஆரம்பித்தேன். அங்கிருந்தவர்களும் இதை அணிந்ததும் எப்படி போட்டோ எடுக்கலாம் என பேச ஆரம்பித்தார்கள். இன்னும் 5 நிமிடங்கள் அவர்கள் என்னிடம் பேசி இருந்தால், ஒருவேளை நான் அதை அணிந்து கொண்டிருப்பேன்.
ஆனால் ஏதோ தப்பாக நடக்கிறது என நான் உணர்ந்ததும், என் சகோதரனிடம் அனுமதி கேட்க வேண்டும் என சொல்லி, அந்த அறையில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இதே போல அவர்கள் இன்னும் எத்தனை பெண்களுக்கு செய்திருப்பார்கள். என்னால் அந்த சம்பவத்தை இன்னும் மறக்க முடியவில்லை. திரை உலகில் இயக்குநர் ஒருவர் நான் படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்ததாக திட்டினார். திட்டியதால் பிரச்சனை இல்லை. என்னை மற்ற நடிகைகளுடன் ஒப்பிட்டு பேசியதுதான் பிரச்சனை. நான் என்ன தவறு செய்திருந்தாலும் பொதுவில் திட்டுவது சரியல்ல என்றார்.
- அஜித் குமார் பல சர்வதேச கார் ரேஸிங் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
- "Transition Reels" எனும் முறையில் அஜித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.
ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வரும் "Transition Reels" எனும் முறையில் அஜித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
லண்டனில் இருந்து கிராமத்திருக்கு திரும்பிய ஒரு இளம் தொழில்நுட்ப தம்பதியினர், தங்கள் மூதாதையர் வீட்டிற்குள் நுழையும் போது மயக்கமடைந்த ஒரு மர்மமான, வயதான வடிவுக்கரசியை காண்கிறார்கள். அவள் யார் என்று தெரியாமல் அவர்கள் அவளுக்கு உதவ முயற்சிக்கிறார்கள். சில நாட்களில் அந்த வீட்டில் அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது. மேலும் அந்த தொழில் அதிபரின் இளம் குழந்தைகள் ஆபத்தில் சிக்குகிறார்கள்.
இறுதியில் வீட்டில் அமானுஷ்ய விஷயம் நடக்க காரணம் என்ன? வடிவுக்கரசி யார்? குழந்தைகளுக்கு என்ன ஆபத்து? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வடிவுக்கரசி, குறைந்த வசனங்களிலேயே பார்வை, உடல் மொழி மூலம் பயத்தை உருவாக்குகிறார். அவரது அமைதியான நடிப்பு தான் படத்தின் முக்கிய பலம். பல காட்சிகளில் அவர் தோன்றும் விதமே பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
இளம் தம்பதியினராக நடித்துள்ள ஆனந்த் நாக், அபர்ணா இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக குழந்தைகளை பாதுகாக்க முடியாமல் தவிக்கும் பெற்றோரின் மனநிலையை நன்றாக வெளிப்படுத்தியுள்ளனர். குழந்தைகள் தொடர்பான காட்சிகள் கதைக்கு தேவையான பதற்றத்தை கூட்டுகிறது. மற்ற கதாபாத்திரங்களான திலீபன், சிங்கம் புலி, கஜா ராஜா ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இயக்கம்
இயக்குனர் விஜய குமரன், அதிக ஜம்ப் ஸ்கேர் இல்லாமல் சூழல் ஹாரரை தேர்வு செய்துள்ளார். மெதுவாக நகரும் திரைக்கதை மூலம் பயத்தை உருவாக்க முயற்சி செய்துள்ளார். முதல் பாதி நன்றாக அமைந்திருந்தாலும், இரண்டாம் பாதியில் சில காட்சிகள் எதிர்பார்க்கக்கூடிய வகையில் நகரவில்லை.
இசை
செல்லையா பாண்டியனின் பின்னணி இசை ஹாரர் உணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. சில இடங்களில் இசை அதிகமாக பயன்படுத்தப்பட்டாலும், மொத்தத்தில் படத்திற்கு உதவியாக இருக்கிறது.
ஒளிப்பதிவு
மணிகண்டனின் ஒளிப்பதிவு, பழைய வீட்டின் இருண்ட சூழலை அழகாக பதிவு செய்துள்ளது.
ரேட்டிங்- 2/5






