என் மலர்
சினிமா செய்திகள்

தமிழ்நாடு திரைப்பட விருது பெறுவதில் பெருமை கொள்கிறேன்- ஏ.ஆர்.ரஹ்மான்
2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதில், பொன்னியின் செல்வன்-1 படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விருது அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பொன்னியின் செல்வன் -1 படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு திரைப்பட விருது பெறுவதில் பெருமை கொள்கிறேன்.
இந்த அங்கீகாரம் அளித்த தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி. விருது பெறும் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






