என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்திற்கு ஹீரோ என தலைப்பு வைத்துள்ளனர். #HERO #VijayDevarkonda #AnandAnnamalai
    அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ஆனந்த் சங்கர் இயக்கிய நோட்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் அவர் நடிக்கும் படங்களுக்கு தமிழிலும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

    இந்த நிலையில், விஜய் அடுத்ததாக மற்றுமொரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.



    விளையாட்டு சம்பந்தப்பட்ட த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா பைக் ரேசராக நடிப்பதாக கூறப்படுகிறது. ஹீரோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22-ந் தேதி டெல்லியில் துவங்க இருக்கிறது.

    இந்த படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். முரளி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. #HERO #VijayDevarkonda #AnandAnnamalai

    ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் கண்ணடித்து பிரபலமான பிரியா வாரியர் மீது அந்த படத்தின் இயக்குநர் ஒமர் லூலு புகார் கூறியுள்ளார். #OruAdaarLove #PriyaVarrier #OmarLulu
    ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா வாரியர். அந்த படத்தில் காதல் காட்சியில் கண்ணடித்து நடித்தது பிரபலமானதை அடுத்து அவரது புகழ் கூடியது. சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனார்.

    இந்த படத்தில் முதலில் நூரின் ஷெரீப் தான் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். பிரியா வாரியர் கண்ணடித்து நடித்தது பிரபலம் ஆனதால் நூரினை துணை கதாபாத்திரமாக்கி பிரியாவை முதன்மை கதாநாயகியாக மாற்றினார்கள்.

    ஒரு அடார் லவ் படம் கடந்த மாதம் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பிரியா வாரியர் மீது அந்த படத்தின் டைரக்டர் ஓமர் லூலு புகார் கூறி உள்ளார்.



    அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ’இந்த படத்தின் ஒரிஜினல் பதிப்பில் பிரியாவாரியர் கதாநாயகி கிடையாது. அவர் கண்ணடித்தது பிரபலம் ஆனதால், தயாரிப்பாளர் என்னை அணுகி பிரியா வாரியரை கதாநாயகியாக வருவது போல் கதையை மாற்றி எழுதும்படி கூறினார்.

    நூரின் ஷெரிப் தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பிறகு அவரது கதாபாத்திரம் துணை கதாபாத்திரமாக்கப்பட்டது. படத்தினால் புகழ் கிடைத்த பின்னர் பிரியாவாரியர் பட புரமோ‌ஷன் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை.

    பட ரிலீசுக்கு பிறகு நடந்த படத்தை பிரபலபடுத்தும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. அது சரியில்லை. எதிர்காலத்தில் அவர் இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது’ என்றார். #OruAdaarLove #PriyaVarrier #OmarLulu

    பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி - ராஷ்மிகா மந்தானா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #Karthi #K19
    மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் நடித்து வரும் கார்த்தியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது.

    எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக உருவாகும் இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தானா தமிழில் அறிமுகமாகிறார். யோகி பாபு, பொன்னம்பலம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கார்த்தியின் 19-வது படமாக உருவாகும் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கின்றனர்.


    விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவையும், ஜெய் கலை பணிகளையும், ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். தொடர்ந்து சென்னை மற்றும் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் சில இடங்களில் பெரிய செட் போடப்படுகிறது. #K19 #Karthi #Karthi19 #RashmikaMandanna

    இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வருகிற மார்ச் 15-ந் தேதி ரிலீசாகவிருக்கும் நிலையில், இந்த படம் காதல் மற்றும் புரிதல் பற்றியது என ஹரிஷ் கல்யாண் கூறினார். #IspadeRajavumIdhayaRaaniyum #HarishKalyan
    ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் வருகிற மார்ச் 15-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    படம் பற்றி ஹரிஷ் கல்யாண் பேசும் போது,

    “ இந்த படம் காதலை மற்றும் புரிதலை பற்றிய படம். இன்றைய தலைமுறையினரை கவரும் வகையில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் இடம்பெறும் சில சம்பவங்கள் அனைவரது வாழ்விலும், சந்தித்ததாக இருக்கும்.



    ஒளிப்பதிவாளர் கவின் வண்ணங்களை எண்ணத்தில் கலந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கதை சொன்ன தருணமே இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் என்று அறிந்தே தேர்வு செய்தேன். அதில் ஓர் அளவுக்கு வெற்றியும் பெற்று இருக்கிறேன் என நம்புகிறேன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எனக்கொரு நிரந்தரமான இடத்தை பெற்றுத் தரும் என நம்புகிறேன்.

    கதாநாயகி ஷில்பாவுடன் இணைந்து பணிபுரிந்தது சிறப்பானது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பல வருடங்களுக்கு பேசப்படும். காதலுக்கு மரியாதை தரும் படம் என்றால் மிகையாகாது. இந்தப் படம் நிச்சயமாக யாரையும் புண்படுத்தாது. இந்தப் படத்தில் பெண்கள் ஆண்களை சார்ந்து இல்லை என வலியுறுத்துகிறோம். என்னுடைய கதாபாத்திரமான ரசிகர்களை கவரும் என நம்புகிறேன் ” இவ்வாறு கூறினார். #IspadeRajavumIdhayaRaaniyum #HarishKalyan #ShilpaManjunath

    ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், ஜானவிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ஆயிரம் பொற்காசுகள் படம் கோடை விடுமுறையில் திரைக்கு வர இருக்கிறது. #AayiramPorkasugal #Vidharth
    ஈரமான ரோஜாவே, அலெக்சாண்டர் உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் கேயார். தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தராகவும் அனுபவம் கொண்ட கேயார் தனது கேஆர் இன்போடெயின்மெண்ட் சார்பில் அடுத்து வெளியிடும் படம் ஆயிரம் பொற்காசுகள். 

    அறிமுக இயக்குனர் ரவி முருகையா இயக்கத்தில் “மைனா” விதார்த், “பருத்தி வீரன்” சரவணன், ஜானவிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது. மேலும் இப்படத்தில் வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



    ஜோஹன் இசையமைக்க, பானுமுருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி கேயார் கூறும்போது ‘இது முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாக கொண்ட கதை. தொடக்கம் முதல் கடைசி காட்சி வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். கழிப்பறை தோண்ட சென்ற இடத்தில் விதார்த், சரவணன் கூட்டணிக்கு ஒரு புதையல் கிடைக்கிறது. அந்த செய்தி ஊர் முழுக்க பரவி ஊரே பங்கு கேட்கிறது.

    அதன் பிறகு என்ன ஆகிறது என்பதே கதை. கிராமத்து மக்களின் பசுமையான வாழ்வியலையும், அன்றாட நிகழ்வுகளையும் பிண்ணனியாக கொண்டு உருவாகியுள்ளது, குடும்ப பொழுதுபோக்கு படம் என்பதால் கோடை காலத்தில் வெளியிட உள்ளோம்’ என்றார். #AayiramPorkasugal #Vidharth

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் - அர்ஜூன் - கல்யாணி பிரியதர்ஷன் - இவானா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு `ஹீரோ' என்று தலைப்பு வைத்துள்ளனர். #SK15 #HERO #SK15ShootFromToday
    `மிஸ்டர்.லோக்கல்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார்.

    இதற்கிடையே சிவகார்த்திகேயனின் 15-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்த படத்திற்கு `ஹீரோ' என்று தலைப்பு வைத்துள்ளனர். 

    இந்த படத்தில் சிவகார்த்திகேனுடன் இணைந்து அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்க, ரோபோ சங்கர், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அரசியல் கலந்த த்ரில்லர் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். 

    24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா, கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்த இந்த படத்தை தயாரிக்கின்றனர். #SK15 #Sivakarthikeyan #PSMithran #KalyaniPriyadharsan #Ivana

    தேவதர்ஷினி - சேத்தன் இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில், சமீபத்தில் 96 படத்தில் அறிமுகமான அவர்களது மகள் நியதி தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த தடை விதித்திருக்கிறார்கள். #Chetan #Devadarshini
    தேவதர்ஷினி - சேத்தன் இருவருமே தம்பதிகளாகவே டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். அவர்கள் வழியில் மகள் நியதியும் 96 படம் மூலம் நடிகையாகி இருக்கிறார். தேவதர்ஷினியின் சிறுவயது வேடத்தில் நடித்தவருக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன.

    தாம் தூம் படம் மூலம் அறிமுகமான சேத்தன் சமீபத்தில் வெளிவந்த தமிழ்படம் 2 படத்திலும் கலக்கி இருந்தார். களவு படத்திலும் நடித்திருந்தார். இதுபற்றி அவர் கூறும்போது ‘இயக்குநர் சி.எஸ்.அமுதனின் ரெண்டாவது படம் என்ற படத்திலும் நடித்தேன். எனக்கு காமெடியும் வரும் என்று கண்டு கொண்டவர். எனக்கு பாசிடிவ், நெகடிவ், காமெடி என எல்லா கேரக்டரும் செய்ய ஆசை. எந்த ஒரு வட்டத்திலும் சிக்கிக் கொள்ள விருப்பம் இல்லை. இந்த வி‌ஷயத்தில் எனக்கு நாசர் சார் தான் முன்னோடி. நானும் அவர் வழியில் செல்ல விரும்புகிறேன். என் மனைவி தமிழ், தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மகள் இப்போது 10 ஆம் வகுப்பு படிப்பதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.



    பிறகு பார்க்கலாம் என்று இருக்கிறோம். சினிமாவே குடும்பம். குடும்பமே சினிமா என்று இருக்கிறோம்.” என்கிற சேத்தன் இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் படத்தில் பாரதிராஜா, சசிகுமாருடன் நடிக்கிறார். சி.வி.குமார் தயாரிப்பில் இரண்டு பபங்கள் உள்பட 5 புதிய படங்களில் நடித்து வருகிறார். #Chetan #Devadarshini #Niyathi

    பிராஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் - ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கும் கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #KGF #Yash
    பிராஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் கே.ஜி.எஃப் படம் இரண்டு பாகங்களாக உருவாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கே.ஜி.எஃப் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கன்னட சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் படம் வசூல் குவித்துள்ளது.

    கன்னடத்தில் ரூ.100 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை கே.ஜி.எஃப் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார்.



    இந்த நிலையில், கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியிருக்கிறது. பூஜையில் பிரசாந்த் நீல், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். #KGF #Yash #SrinidhiShetty

    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தில் அரசியல் இருக்காது என்றும், படம் ஜாலியாக இருக்கும் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். #Thalapathy63 #Vijay #Nayanthara
    நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

    விஜய் சமீபகாலமாக நடிக்கும் படங்கள் அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. மெர்சல், சர்கார் படங்களில் இடம்பெற்ற வசனங்கள், காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின. விஜய் நடித்த கத்தி, மெர்சல், சர்கார் படங்களில் கிளைமாக்ஸ் காட்சியில் மீடியா முன்பு விஜய் பேசுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.



    சென்னையில் இருக்கும் வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ், சமீபத்தில் நடிகர் விஜய்யை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

    அட்லி இயக்கத்தில் நடித்து வரும் படம் பற்றி அவர் விஜய்யிடம் கேட்டுள்ளார். அதற்கு விஜய், இந்தபடம் “வண்ணமயமான, கொண்டாட்டமான படமாக இருக்கும். எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும். கடைசி சில படங்கள் கொஞ்சம் சீரியசாக இருந்தது.படத்தின் இறுதிக்காட்சியில் மீடியா முன்னாடி பேசறது எனக்கே போர் அடிச்சிடுச்சு” என்று பதில் அளித்துள்ளார்.



    இந்த ட்விட் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரல் ஆனது. விஜய் ரசிகர்கள் அதிக அளவில் பகிர தொடங்கினார்கள். ஆனால் ராகேஷ் இந்த டுவிட்டைப் பகிர்ந்த சிறிது நேரத்திலேயே நீக்கிவிட்டார்.

    படக்குழு அவரை அணுகி நீக்கச் சொல்லியிருக்கலாம் என்று தெரிகிறது. இருந்தாலும் அவரது டுவிட் பலரால் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. #Thalapathy63 #Vijay63 #Vijay #Nayanthara #Kathir #Atlee

    நடிகர் விமல் தன்னை தாக்கியதாக தெலுங்கு நடிகர் அபிஷேக் போலீசில் புகாரின் பேரில், விசாரணைக்காக விமலை போலீசார் அழைத்த நிலையில், விமல் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது. #Vemal
    நடிகர் விமல் குடிபோதையில் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் தன்னை தாக்கி காயம் ஏற்படுத்தியதாக தெலுங்கு நடிகர் அபிஷேக், விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். ஆஸ்பத்திரிக்கு சென்றும் சிகிச்சை பெற்றுள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக விமல் மீது போலீசார் ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கு தொடர்பாக விமல் கைதாவாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் புகார் குறித்து விமலிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வருமாறு நேரில் சென்றும் அழைத்தனர். அப்போது விமல் நீங்கள் செல்லுங்கள், நான் பின்னால் வருகிறேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி போலீஸ் நிலையத்துக்கு அவர் வரவில்லை. 



    கைது நடவடிக்கைக்கு பயந்து விமல் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரது செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு உள்ளது. எனவே விமலை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எங்கே நடக்கிறது? என்றும் விசாரித்து வருகிறார்கள். தெலுங்கு நடிகரை விமல் தாக்கினாரா? என்பதை அறிய சம்பவம் நடந்த குடியிருப்பு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். #Vemal

    தனுஷ் - சினேகா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடக்கும் நிலையில், ஐஸ்வர்யா தனுஷ், பிரசன்னா ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தரிசனம் செய்தனர். #Dhanush #Snekha
    துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் - சினேகா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்து வருகிறது. அதை பார்வையிட்ட பின்னர் நடிகர் ரஜினிகாந்த் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா மற்றும் நடிகை சினேகாவின் கணவர் நடிகர் பிரசன்னா ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். 

    அவர்களை கோவில் பட்டாச்சாரியார்கள் வரவேற்று ஆண்டாள் சன்னதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஐஸ்வர்யா, நடிகர் பிரசன்னா ஆகியோர் ஆண்டாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் கோவிலுக்கு வெளியே வந்து கோவில் யானைக்கு பழங்களை வழங்கிவிட்டு மணவாள மாமுனிகள் சன்னதிக்குச் சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்தனர்.



    சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் இருவருக்கும் ஆசி வழங்கினார். தொடர்ந்து ஐஸ்வர்யாவும், பிரசன்னாவும் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர். #Dhanush #Snekha #AishwaryaDhanush #Prasanna

    விஜய் 63 படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்திக்க விஜய் வந்த போது இடையே இருந்த தடுப்பு வேலி சரிந்து விழுந்த நிலையில், ரசிகர்கள் கீழே விழாதபடி வேலியை விஜய் தாங்கிப்பிடித்தார். #Vijay #Vijay63
    விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் விளையாட்டு சம்மந்தப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    விஜய் படத்தின் படப்பிடிப்பு நடப்பதை அறிந்து விஜய்யை பார்க்க, அவரது ரசிகர்கள் படப்பிடிப்பு தளங்களுக்கு படையெடுப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யைக் காண அவரது ரசிகர்கள் குவிந்தனர். இதையறிந்த விஜய் ரசிகர்களை சந்திப்பதற்காக வந்தார்.



    ரசிகர்களை நோக்கி கையசைத்துக் கொண்டே விஜய் வேலி அருகில் சென்ற போது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் விஜய்யை பார்க்க வேலியில் ஏறினர். அப்போது அந்த தடுப்பு வேலி திடீரென சரிந்து விழுந்தது. திடீரென வேலி சரிந்ததை பார்த்து முதலில் அதிர்ச்சிக்குள்ளான விஜய், பின்னர் அந்த வேலி கீழே விழுந்துவிடாதபடி தாங்கிப் பிடித்தார். விஜய்க்கு அவரது உதவியாளர்கள் உதவிசெய்ய, வேலி கீழே விழாதபடி தடுத்தனர்.

    இதையடுத்து விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Vijay #Vijay63

    விஜய் ரசிகர்களை சந்திக்கும் வீடியோ:

    ×