என் மலர்
சினிமா செய்திகள்
மலையாளத்தில் இருந்து பல நடிகைகள் தமிழுக்கு வரும் நிலையில், தற்போது லிஜோ மோள் என்னும் நடிகை புதிய படத்தில் மூலம் தமிழுக்கு வருகிறார். #lijomol
பிச்சைக்காரன் படத்துக்கு பிறகு சசி இயக்கும் படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்கின்றனர். இதற்கு தலைப்பு வைக்காமல் இருந்தனர். இந்நிலையில், சிவப்பு மஞ்சள் பச்சை என்று தலைப்பு வைத்துள்ளனர்.
அக்கா, தம்பி பாசத்தை சொல்லும் கதையாக இப்படம் உருவாகிறது. அக்காவாக மலையாள நடிகை லிஜோ மோள் நடிக்கிறார். இவர் அறிமுகமாகும் தமிழ் படம் இது. மலையாளத்தில் மகிஷிண்டே பிரதிகாரம், கட்டபனையில் ஹிரித்திக் ரோஷன் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்தவர்.

அவரது தம்பியாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். லிஜோவுக்கு ஜோடியாக சித்தார்த் நடித்து, டிராபிக் போலீஸ் வேடம் ஏற்றுள்ளார். பைக் ரேஸராக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். தவிர காஷ்மீரா, மதுசூதனன், யூடியூப் குழு நடிகர்கள் உள்பட பலர் நடிக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.
மலையாள உலகில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லாலை வைத்து, நடிகர் பிரித்விராஜ் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். #Mohanlal #Prithviraj
இயக்குநர் கே.வி.ஆனந்துடன் நடிகர் சூர்யா மூன்றாவது முறையாகக் கூட்டணி அமைத்து ‘காப்பான்’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். ஆர்யா, மோகன்லால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார்.
பிரதமரைப் பாதுகாக்கும் அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். நியூயார்க், பிரேசில், டெல்லி, சண்டிகர், ஐதராபாத் எனப் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. மலையாளத்தில் மோகன்லால் அடுத்து நடித்துள்ள லூசிபர் படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்கி உள்ளார். மொழி, ராவணா உள்பட பல படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். இந்த படத்தில் மஞ்சு வாரியர், தொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், விவேக் ஓபராய் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

அரசியல் திரில்லர் கதைக்களம் கொண்ட இந்தப் படம் வர்த்தக அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் மார்ச் 28-ந்தேதியன்று வெளியாக உள்ளது. மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாராவை காதலித்து வரும் விக்னேஷ் சிவன், அவரை புகழ்ந்து தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். #Nayanthara #VigneshShivan
தமிழ் சினிமாவின் காதல் ஜோடியாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் வலம் வருகிறார்கள். நயன்தாராவை புகழ்ந்து விக்னேஷ் சிவனின் காதல் பதிவுகள் சுவாரசியமாக இருக்கின்றன. மார்ச் 8ந்தேதி பெண்கள் தினத்தன்று ’நீ என் உலக அழகியே... உன்னை போல் ஒருத்தி இல்லையே’ என்று ஜெர்சி படத்துக்காக தான் எழுதிய பாடல் வரிகளை பகிர்ந்தார்.
தற்போது நயன்தாரா சேலையில் இருக்கும் படத்தை வெளியிட்டு ’நீண்ட நாட்களுக்கு பிறகு என் தங்கத்துடன் டின்னர்’ என்று பதிவிட்டு இருக்கிறார். இது நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் ஆகும்.

இதை பார்த்த ரசிகர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளுங்கள். இது சரியாகி விடும் என்று பதில் அளித்து வருகின்றனர்.
பொள்ளாச்சியில் பெண்கள் பலர் பாலியல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சம்பவம் குறித்து நடிகைகள் ஆவேசமாக கருத்து கூறியிருக்கிறார்கள். #PollachiAbuseCase #PollachiCase
பொள்ளாச்சியில் பெண்கள் பலர் பாலியல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சம்பவத்தில் பல பிரபலங்கள் தங்களுடைய ஆதங்கத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை அதுல்யா ரவி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
‘பாதிக்கப்பட்ட பெண்கள் இனிதான் தைரியமாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தை தாண்டி வரவேண்டும். ஒரு சிலர் செய்யும் தவறால் நாம் நல்ல ஆண்களையும் தவறாக பார்க்க வேண்டியிருக்கிறது.
மற்ற நாடுகளில் இது மாதிரி விஷயங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பார்களோ அதைக் கொடுத்தால்தான் அடுத்து பண்ணணும்னு நினைக்கிறவர்களும் பயப்படுவார்கள். இதை அரசியலாக மட்டும் மாற்றி விடாதீர்கள். இவர்களுக்குப் பெரிய தண்டனை கொடுக்காமல் விட்டு விடாதீர்கள்.

யாரையும் நம்பாமல் நம்மால் வாழ முடியாது தான். அதேநேரம் நீங்கள் நம்புகிற, காதலிக்கற யாராக இருந்தாலும் சரி, அவருடன் பைக்கிலோ, காரிலோ தனியாக போவதை தவிர்த்து விடுங்கள். சந்திக்கிற இடம் பொது இடமாக இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் பையில் ஒரு தற்காப்பு பொருளை வைத்துக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் எனக் கேட்கும்போது பதறுகிறது. இன்னும் நீங்கள் மனதளவில் உறுதியுடன் இருக்க வேண்டும்.
காளி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படங்களின் கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத் கூறியதாவது:-
நட்பான குடும்பம் அமையாததே, பல பெண்கள் வெளியில் அன்பைத் தேட காரணம். வீட்டில் மனம் விட்டுப் பேசி, நட்பாய் பழக ஆட்கள் இருந்தால், எந்தப் பெண்ணிற்கும் வெளியில் அதனைத் தேட வேண்டிய தேவை இருக்காது.

வரலட்சுமி சரத்குமார் கூறும்போது,
‘பெண்ணை வைத்து விளையாடுகிறீர்களா? மீண்டும் மீண்டும் அதே கொடூர குற்றம். அப்புறம் ஒரு பக்கம் மகளிர் தினம் வேறு. இந்த சமூகத்திற்கு பெண் என்றால் இதுதான் அர்த்தமா? பொள்ளாச்சி பலாத்காரர்களை தோலுரித்துக் கொல்ல வேண்டும்.
இந்த மாதிரியான உலகத்தில்தான் நாம் வாழ்கிறோமா? பலாத்காரத்துக்கு மரண தண்டனை. இது மட்டும்தான் ஒரே வழி.
நடிகை ராசிகன்னா கூறும்போது:-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்னை மிகவும் பாதிக்கிறது. நடந்தது எல்லாம் மிகவும் கொடூரமாக இருக்கிறது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அவர்கள் முதுகெலும்பை நொறுக்குவதாக இருக்க வேண்டும். இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.
ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள பதிவில் ‘இனியும் நாம் மவுனம் காக்கத்தான் வேண்டுமா? பதில் சொல்ல வேண்டியவர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிக்பாஸ் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Oviya
களவாணி படம் மூலம் அறிமுகமானவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் அடைந்தார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் நடித்த படம் 90 எம்.எல். அனிதா உதீப் இயக்கிய இந்த படத்தில் ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இடம்பெற்று இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. ஓவியா மீதும் இயக்குனர் மீதும் போலீசில் புகார்கள் கொடுக்கப்பட்டன.
90 எம்.எல். படத்துக்காக ஓவியா மீது நேற்று கமிஷனர் அலுவலகத்தில் இன்னொரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருவேற்காட்டை சேர்ந்த தமிழ்வேந்தன் என்பவர் அந்த புகாரை கொடுத்துள்ளார். புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக சித்தரவதை செய்யப்பட்டுள்ளனர். முகநூல், டுவிட்டர் மூலமாக அவர்களுக்கு காதல் வலை வீசி திருமண ஆசை காட்டி அந்த பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளிட்டோர் நடந்து கொண்ட விதம் மனித இனத்திற்கே அவமானம்.
தமிழகத்தில் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் வகையில் படங்கள் எடுக்கப்படுவது அதைவிட கேவலம். கடந்த மார்ச் 1-ந் தேதி அனிதா உதீப் இயக்கிய 90 எம்.எல். படம் வெளியானது. அந்த படத்தில் நடிகை ஓவியா அருவருக்கத்தக்க வகையில் நடித்து இருந்தார்.

புகைப்பது, ஆண் நண்பருடன் உதட்டோடு உதடு முத்தமிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதான் பெண்ணியம் என்றும் கற்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக கலாசாரத்தை சீர்குலைக்கும் விதமாகவும் பெண்களை தவறாக வழி நடத்தக்கூடிய வகையிலும் 90 எம்.எல். படத்தை இயக்கிய அனிதா உதீப், அதில் நடித்த ஓவியா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும்’.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
செல்வ கண்ணன் இயக்கத்தில் பூ ராமு, இளங்கோ, எல்விஸ் அலெக்சாண்டர், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் `நெடுநல்வாடை' படத்தின் முன்னோட்டம். #Nedunalvadai
பி ஸ்டார் புரொடக்ஷன் சார்பில் ஒன்றாக படித்த 50 நண்பர்களட இணைந்து தயாரித்துள்ள படம் `நெடுநல்வாடை'.
பூ ராமு, இளங்கோ, எல்விஸ் அலெக்சாண்டர், அஞ்சலி நாயர், அஜெய் நடராஜ், மைம்கோபி, ஐந்துகோவிலான், செந்தி, ஞானம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - வினோத் ரத்தினசாமி, இசை - ஜோஸ் ஃபிராங்க்ளின், பாடல்கள் - கவிப்பேரரசு வைரமுத்து, படத்தொகுப்பு - மு.காசிவிஸ்வநாதன், கலை - விஜய் தென்னரசு, சண்டை பயிற்சி - ராம்போ விமல், நடனம் - தினா, சதீஷ் போஸ், தயாரிப்பு - பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - செல்வகண்ணன்.

படம் பற்றி இயக்குனர் செல்வகண்ணன் கூறியதாவது,
எல்லோரோட வாழ்க்கைக்கு பின்னாடியும் யாரோ ஒருத்தரோட தியாகம் இருக்கும். என்னோட இந்த நெடுநல்வாடை படத்திற்கு பிறகு என் நண்பர்களின் தியாகம் இருக்கு. அந்த தியாகம் தான் இந்த படத்தின் கதை.
இந்த படம் பார்க்கிறவர்கள் இந்த மாறி ஒரு வாழ்கையை வாழ்ந்திருப்பீர்கள் அல்லது இப்படி ஒரு வாழ்கையை வாழ முடியாமல் போய்விட்டதே என்று ஏங்கி இருப்பீர்கள். இது 75 சதவீதம் உண்மை கதையை மையமாக வைத்து உருவாக்கபட்ட படம். பூ ராமுவை நான் ஒவ்வொரு காட்சியிலும் என் தாத்தாவாகத் தான் பார்த்தேன்.
சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இப்படம் வருகிற மார்ச் 15 அன்று ரிலீஸாகிறது. பிரபல தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் பி.மதன் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார் என்றார். #Nedunalvadai #NedunalvaadaiFromTomorrow
நெடுநல்வாடை டிரைலர்:
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் `நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித் - வித்யா பாலனுக்கு ஒரு காதல் பாடல் ஒன்று இருக்கிறதாம். #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan
அஜித் நடித்து வெளியான ‘விஸ்வாசம்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார்.
இது இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. `பிங்க்’ படத்தில் இல்லாத ஒரு கதாபாத்திரத்தை இந்த படத்தில் வடிவமைத்துள்ளார் வினோத். அந்த கேரக்டரில் தான் வித்யா பாலன் நடிக்கிறார். இதில் அஜித்-வித்யா பாலனுக்காக ஒரு காதல் பாடலை எழுதியிருக்கிறார் பா.விஜய்.
பி.எஸ்.மித்ரன் - சிவகார்த்திகேயன் படத்தின் இசைக்காக துபாய் சென்றுள்ள யுவன், சென்னை திரும்பியதும் இந்தப் பாடலுக்கான பணியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்த படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது. #RRR #Rajamouli
பாகுபலி படங்கள் மூலம் உலகத்தின் பார்வையை இந்திய சினிமாவின் பக்கம் திருப்பியவர் இயக்குனர் ராஜமவுலி. இவரது படங்களில் பிரம்மாண்டம், கதை சொல்லும் முறை, கிராபிக்ஸ் ஆகிய அம்சங்கள் எப்போதும் கவனிக்க வைப்பவை. பாகுபலிக்கு முன்பே ‘விக்ரமாகுடு’, ‘சத்ரபதி’, ‘ஈகா’, ‘மகதீரா’ எனத் தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர்.
ராஜமவுலியின் அடுத்த படத்துக்கு சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் நடிக்க ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இதன் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி என சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கான அதிகாரபூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. இதில் ராஜமவுலி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ’படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரணுடன் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, டேய்சி ஜோன்ஸ், அலியா பட் ஆகியோரும் நடிக்கிறார்கள். படம் அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
July 30th, 2020... RRR...🔥🔥🔥
— RRR Movie (@RRRMovie) March 14, 2019
In theatres, Worldwide!!!
In Telugu, Tamil, Hindi, Malayalam and other Indian languages simultaneously.
An @ssrajamouli Film... #RRR#RRRPressMeet@tarak9999#RamCharan@aliaa08@ajaydevgn@thondankani@dvvmovies@RRRMoviepic.twitter.com/YgWpESLeVP
படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டது.படத்தின் தலைப்பு இப்போதைக்கு ‘ஆர் ஆர் ஆர்’ என்றே இருக்கும். ஒவ்வொரு மொழிக்குமான விரிவாக்கம் பின்னர் வெளியிடப்படும்’ ஆகிய அறிவிப்புகள் இன்று வெளியாகின.
படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜி பிலிமி சிட்டியில் நடந்து வருகிறது. இதற்கு முன்னர் ராம்சரணுடன் ‘மக தீரா’ படத்திலும், ஜூனியர் என்.டி.ஆருடன் ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘யமதொங்கா’ ஆகிய படங்களிலும் ராஜமவுலி பணிபுரிந்துள்ளார். ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, இயக்குநராக ராஜமவுலியின் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. #RRR #Rajamouli #JrNTR #RamCharan #AjayDevgn #Samuthirakani #AliaBhatt
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ஹீரோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #HERO #Sivakarthikeyan
சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தலைப்புக்கு புதுமுக இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் படத்தை முடித்துவிட்டு ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இரும்புத்திரை படம் மூலம் பிரபலமான பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் பூஜையை படக்குழுவினர் சென்னையில் நேற்று நடத்தினர். இப்படத்துக்கு ‘ஹீரோ’ என்று தலைப்பு வைத்து இருப்பதாக அறிவித்தனர். இந்த தலைப்பு தனக்கு சொந்தமானது என்று புதுமுக இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
“நான் காக்கா முட்டை படத்துக்கு வசனம் எழுதி விருதுகள் பெற்று இருக்கிறேன். குற்றமே தண்டனை படத்தில் மணிகண்டனுடன் இணைந்து திரைக்கதை எழுதி உள்ளேன். பல நாவல்களும் எழுதி இருக்கிறேன். தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறேன்.

படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். படத்துக்கு ஹீரோ என்ற தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு வருடத்துக்கு முன்பே பதிவு செய்துள்ளோம். ஆனால் திடீரென்று சிவகார்த்திகேயன் படத்துக்கு ஹீரோ என்று தலைப்பு வைத்து இருப்பதாக அறிவிப்பு வந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹீரோ தலைப்பு எங்களுக்கே சொந்தம். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
இந்த தலைப்பை யாருக்கும் விட்டுத்தர முடியாது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் எழுத இருக்கிறோம்.” இவ்வாறு அவர் கூறினார். #HERO #Sivakarthikeyan #AnandAnnamalai #VijayDevarakonda
மாதவன் இயக்கி நடிக்கும் நம்பி நாராயணனின் வாழ்க்கைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா மற்றும் ஷாருக்கான் ஒப்பந்தமாகி இருக்கிறார். #RocketryTheNambiEffect #Madhavan #NambiNarayanan
மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’ படத்தில் சூர்யா - மாதவன் இணைந்து நடித்து இருந்தனர். தற்போது 15 வருடங்களுக்கு பிறகு சூர்யாவும், மாதவனும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.
மாதவன் தற்போது இயக்கி நடித்து வரும் திரைப்படம் ராக்கெட்ரி: நம்பி விளைவு. ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவரது வாழ்க்கை ‘ராக்கெட்ரி’ என்ற தலைப்பில் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படமாகி வருகிறது.

இதில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்கிறார். இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறிது நேரம் வருவதுபோல் அவரது கதாபாத்திரம் இருந்தாலும் கதைக்கு திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் இந்தி பதிப்பில் சூர்யா கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்கிறார். இதில் சிம்ரன் உள்பட மேலும் பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #RocketryTheNambiEffect #Madhavan #NambiNarayanan
நடிகர் விஷாலும், ஆந்திராவை சேர்ந்த நடிகை அனிஷாவும் காதலித்து வரும் நிலையில், இவர்களது திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் வைத்து வருகிற 16-ந் தேதி நடைபெற இருக்கிறது. #Vishal #Anisha #VishalMarriage
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டிய பிறகே திருமணம் என்று கூறி வந்தார்.
இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த நடிகை அனிஷா ஆலா ரெட்டியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்திருந்தார். அன்றைய தினமே விஷாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இந்த செய்தியை உறுதி செய்தார்.
பிரபல தொழிலதிபர் மகளான அனிஷா, அர்ஜூன் ரெட்டி உள்பட சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். சில மாதங்களாக விஷாலும், அனிஷாவும் காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாரும் கலந்து பேசி திருமணம் செய்துவைக்க முடிவு எடுத்துள்ளனர்.

விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
இவர்களது திருமணம் வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி விஷாலிடம் கேட்டதற்கு திருமண தேதி பின்னர் முறையாக அறிவிக்கப்படும் என்று கூறினார். தனது திருமணம் சென்னையில் கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டிடத்தில் தான் நடக்கும் என்று விஷால் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Vishal #Anisha #VishalMarriage
காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்திற்கு ஹீரோ என தலைப்பு வைத்துள்ளனர். #HERO #VijayDevarkonda #AnandAnnamalai
அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ஆனந்த் சங்கர் இயக்கிய நோட்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் அவர் நடிக்கும் படங்களுக்கு தமிழிலும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், விஜய் அடுத்ததாக மற்றுமொரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.

விளையாட்டு சம்பந்தப்பட்ட த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா பைக் ரேசராக நடிப்பதாக கூறப்படுகிறது. ஹீரோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22-ந் தேதி டெல்லியில் துவங்க இருக்கிறது.
இந்த படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். முரளி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. #HERO #VijayDevarkonda #AnandAnnamalai






