என் மலர்
சினிமா செய்திகள்
சமந்தா நடிப்பில் உருவாகி வரும் கொரியன் பட ரீமேக்கான ‘ஓ பேபி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்திருக்கிறது. #Samantha #OhBaby
2014-ம் ஆண்டு வெளியான கொரியன் படம் ‘மிஸ் க்ரானி’. சீனா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது.
இந்தியாவில் முதலில் தெலுங்கில் ‘ஓ பேபி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ஒரு போட்டோ ஸ்டூடியோவுக்கு செல்லும் அவள், மந்திர சக்திகள் மூலம் 20 வயது பெண்ணின் தோற்றத்தைப் பெறுகிறாள். இதன்பிறகு ஏற்படும் சிக்கல்களை சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையுடனும் திரைக்கதையாக அமைத்திருப்பார்கள்.

இதில் இளமையான தோற்றத்தில் சமந்தாவும், வயதான தோற்றத்தில் லட்சுமி நடித்திருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
காமெடி நடிகராகவும், முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வரும் யோகிபாபு, தற்போது பட்டிபுலம் படத்தில் பேயாக நடித்திருக்கிறார். #Yogibabu
காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு தற்போது முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் ‘பட்டிபுலம்’ படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார். கதா நாயகியாக அமிதாராவ் நடிக்கிறார். மேலும் சேரன் ராஜ், சூப்பர்குட் சுப்ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுரேஷ் இயக்குகிறார். இவர் இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணியாற்றியவர்.
இப்படம் பற்றி இயக்குனர் சுரேஷ் கூறும்போது, ‘நான் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணி புரிந்ததால் காமெடியை எப்படி உபயோகம் செய்தால் மக்களின் பாராட்டை பெறலாம் என்பதை கற்றுக் கொண்டேன்.

அந்த பார்முலா படி யோகி பாபுவை இந்த பட்டிபுலத்தில் பயன் படுத்திக்கொண்டேன். அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷம் இல்லை, படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருகிறார். அந்த ஒரு மணி நேரத்திற்கும் அதகளப் படுத்தி இருக்கிறார்.
கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் என்ற ஊர் இருக்கு. அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும் அதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது தான் கதை.
இதை நகைச்சுவையாகவும் பரபரப்பாகவும் சொல்லி இருக்கிறோம். படத்தில் யோகி பாபுவுக்கு பேய் என்று பெயர் வைத்திருக்கிறோம். இப்படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது’ என்றார்.
ஒரு நல்ல கதை தனக்குரிய திறமையான நடிகர் நடிகையரை தேடிக்கொள்ளும் என்று நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். #HouseOwner
ஆரோகணம், அம்மணி படத்தை தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஹவுஸ் ஓனர்’. இப்படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும்போது, ‘வார்த்தைகளே இல்லை, நான் மிகமிக மதிக்கும் சிலர் என் படத்தை பார்த்து என்னை பாராட்டுவது மனதை நிறைய வைக்கிறது. உள்ளதை உள்ளபடி சொல்லும் உள்ளங்களை மட்டும் தான், நான் இத்தகைய பிரத்தியேக காட்சிகளுக்கு அழைப்பேன். அவர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த பாராட்டும் மரியாதையும் அளவிட முடியாது.
‘ஆடுகளம்’ கிஷோர் இந்தப் படத்தில் மிரட்டியிருக்கிறார். பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் நடிப்பை பார்த்தவுடன், நடிப்புப் கூட பரம்பரை சொத்துதான் என கருத்து தோன்றும். எனது தோழி விஜயலக்ஷ்மியும் அவளது சகோதரி சரிதாவும் லவ்லினுடைய திறமையை எண்ணி பெருமைப்படலாம்.

‘பசங்க' திரைப்படத்தின் மூலமாக தேசியவிருது பெற்றவரும், ‘கோலிசோடா' படத்தில் மிக பிரமாண்டமாக நடித்திருந்த கிஷோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாம் சராசரி வாழ்வில் சந்திக்கும் ஒரு அம்மாவை ஶ்ரீரஞ்சனி பிரதிபலித்திருக்கிறார். தரமான நல்ல கதைகள் திறமையான நடிகர்களை தானே தேடிக்கொள்ளும் என்பதில் எனக்கு இங்கேதான் நம்பிக்கை பிறக்கிறது.
இசையமைப்பாளர் ஜிப்ரான் போன்ற கலைஞனுடன் இந்தப் படத்தில் பணியாற்றியதில் பெருமிதம் கொள்கிறேன். மதன் கார்க்கி மற்றும் அனுராதா பாடல் வரிகளை இயற்றியுள்ளார். பாடல்களுக்கு உயிருட்டும் விதமாக சின்மயி, சத்யபிரகாஷ் மற்றும் பென்னி தயாள் பாடியுள்ளனர். ‘மகளிர் மட்டும்' புகழ் பிரேம் சிறந்த முறையில் எடிட்டிங் செய்துள்ளார். கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவாளராகவும், தபஸ் நாயக் ஆடியோகிராபியும் கையாண்டுள்ளனர். இப்படத்தை கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன, அந்த வரிசையில் இந்தப்படமும் வெற்றிபெறும் என நம்புகிறேன்” என்றார்.
தினேஷ் பாபு இயக்கத்தில் சாய்குமார், சாந்தி கிருஷ்ணா, அக்ஷய் கிருஷ்ணன், ஐஸ்வர்யா உல்லாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கிருஷ்ணம்’ படத்தின் விமர்சனம். #Krishnam #KrishnamReview
தொழிலதிபர் சாய்குமாருக்கு மகனாக இருக்கும் நாயகன் அக்ஷய் கிருஷ்ணன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மீது கல்லூரியில் இருப்பவர்கள் நல்ல அபிப்ராயம் வைத்திருக்கிறார்கள். இதே கல்லூரியில் படிக்கும் ஐஸ்வர்யா உல்லாசை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் கிருஷ்ணன்.
தந்தை சாய்குமாரும், அக்ஷய் கிருஷ்ணனும் நண்பர்கள் போல பழகி வருகிறார்கள். மகனின் எல்லா செயல்களுக்கும் துணையாக இருக்கும் தந்தை சாய்குமார் இந்த காதலுக்கும் துணையாக இருக்கிறார். இந்நிலையில், கல்லூரியில் ஒரு போட்டி நடக்கிறது. அப்போது அக்ஷய் கிருஷ்ணனுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.

மருத்துவ சோதனையில் அக்ஷய் கிருஷ்ணனுக்கு கொடிய நோய் பாதித்திருப்பதாகவும், ஆபரேஷனில் அவர் உயிர் பிழைக்க சிறிதளவே வாய்ப்பு இருப்பதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர். இவர்கள் சொல்லுவதை நினைத்து வருந்தும் சாய் குமார், தன்னுடைய தெய்வமான குருவாயூரப்பனிடம் வேண்டுகிறார்.
குருவாயூரப்பனின் அருளால் அக்ஷய் கிருஷ்ணன் உயிர் பிழைத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
அக்ஷய் கிருஷ்ணன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களையே படமாக்கி இருக்கிறார்கள். அதை உணர்ந்து ஓரளவிற்கு நடித்து இருக்கிறார். ஐஸ்வர்யா உல்லாஸ் அழகாக வந்து நடித்திருக்கிறார். அப்பாவாக நடித்திருக்கும் சாய் குமார், தன்னுடைய அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். பன்னீர் புஷ்பங்கள், மணல் கயிறு படங்களில் நடித்த சாந்தி கிருஷ்ணா இந்த படம் மூலம் ரீ எண்ட்ரியாகி இருக்கிறார். இவரின் நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது. இனி அடிக்கடி அம்மா வேடங்களில் பார்க்கலாம்.

உண்மை சம்பவத்தை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் தினேஷ் பாபு. இவரே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இரண்டாம் பாதியில் உள்ள விறுவிறுப்பு முதல் பாதியில் குறைவு என்றே சொல்லலாம். கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். அவரை நம்பினால் நல்லது நடக்கும் என்பதை சொல்லியிருக்கிறார்கள். கடவுள் மகிமை படங்கள் வந்து வெகு காலம் ஆகிறது. நீண்ட நாட்கள் கழித்து அப்படி ஒரு படமாக வெளியாகி இருக்கிறது.
ஹரி பிரசாத்தின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கிரிஷ்ணம்’ பக்தி பரவசம்.
பாலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அவரை வரவேற்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். #KeerthySuresh #Jhanvi
தமிழ்த் திரையுலகில் இருந்து பல கதாநாயகிகள் இந்தி சினிமாவுக்கு சென்று முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்துள்ளனர். தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சென்றுள்ள நிலையில் அவரை வரவேற்று ஜான்வி கபூர் பதிவிட்டுள்ளார்.
ஜான்வி கபூரின் தாயாரும் மறைந்த நடிகையுமான ஸ்ரீதேவியும் தமிழ்த் திரையுலகில் இருந்து பாலிவுட் சென்று தடம் பதித்தவர். அந்த வரிசையில் கீர்த்தி சுரேசும் இணைந்து இருக்கிறார். இந்திய கால்பந்தாட்ட வீரரும் பயிற்சியாளருமான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் அஜய் தேவ்கன் சையத் கதாபாத்திரத்தில் நடிக்க அவரது மனைவி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். அமீத் ஷர்மா இயக்கும் இந்தப் படத்தை ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்நிலையில் கீர்த்தி படக்குழுவில் இணைந்தது குறித்து ஜான்வி, “மகாநடி திரைப்படத்தைப் பார்த்ததிலிருந்து உங்கள் மீது அளவு கடந்த ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் அப்பாவின் அடுத்த படத்தில் நீங்கள் இணைந்திருப்பது மிகுந்த உற்சாகமளிக்கிறது. நல்வரவு” என தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சாயிஷாவை மனைவியாக பெற்றதில் மகிழ்ச்சி என்று நடிகர் ஆர்யா நேற்று நடந்த திருமண வரவேற்பில் கூறியுள்ளார். #Arya #Sayyeshaa #AryawedsSayyeshaa
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. 2005ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினி காந்த் என்று பல முக்கிய படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் காதல் மலர்ந்தது. சாயிஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தி ஆவார்.
கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. காதலர் தினத்தன்று தாங்கள் திருமணம் செய்ய இருப்பதை ஒப்புக்கொண்டனர்.
ஆர்யா, சாயிஷா திருமணம் கடந்த 10-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெற்றது. முன்னதாக நடந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில் இந்தி சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் கலந்துகொண்டனர். திருமணத்தில் நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஷாம் உள்ளிட்ட ஆர்யாவின் நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஆர்யா-சாயிஷாவின் திருமண வரவேற்பு சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் இயக்குனர் விஜய், நடிகர்கள் பரத், சாந்தனு உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

ஆர்யாவிடம் சாயிஷாவை திருமணம் செய்து கொண்டது பற்றி கேட்ட போது அவர் கூறியதாவது:-
‘சாயிஷாவை மனைவியாக பெற்றதில் மகிழ்ச்சி. கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே சின்ன ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் நண்பர்களாக மாறினோம். காப்பான் படத்தில் மீண்டும் நடிக்க தொடங்கியபோது எங்களுக்குள் இருந்த நட்பை பார்த்து, இருவரது பெற்றோரும் நிச்சயித்து திருமண ஏற்பாடுகள் செய்தார்கள்.
வெகுகாலமாக என் பெற்றோர் என்னை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தி வந்தனர். அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றியதிலும் அவர்களுக்கு பிடித்த பெண்ணையே மனைவியாக அமைந்ததிலும் எனக்கு மகிழ்ச்சி. திருமணத்துக்கு பின்னர் நடிப்பது குறித்து சாயிஷாவின் முடிவுக்கே விடுகிறேன். அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டேன்’.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்யா நடிப்பில் மகாமுனி, டெடி என 2 படங்கள் தயாராகி வருகிறது. சாயிஷா காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
திருமணமான நடிகைகளுக்கு மார்க்கெட் சரிந்துவிடுகிறது என்று எண்ணி அவர்களை ஒதுக்குவது சரியல்ல, எல்லோரும் திருமணம் செய்துதான் ஆகவேண்டும் என்று தீபிகா படுகோனே கூறியுள்ளார். #DeepikaPadukone
திருமணம் ஆன நடிகைகளை இயக்குனர்கள் புதிய படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள். அக்கா, அம்மா வேடங்களுக்கு மட்டுமே வாய்ப்பு தருகின்றனர். அந்த வழக்கத்தை சமீபத்தில் உடைத்திருக்கிறார் சமந்தா. திருமணத்துக்கு பிறகும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பதுடன், லிப் டு லிப் முத்தக்காட்சி, கவர்ச்சி காட்சிகளில் நடித்து புது டிரெண்ட் உருவாக்கினார். இது ஒர்க் அவுட் ஆனதால் பாலிவுட்டில் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா போன்றவர்களும் திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
சீனியர் நடிகைகள் நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா, காஜல் அகர்வால் போன்றவர்கள் இந்த விஷயத்தில் தயக்கம் காட்டி வருகின்றனர். தங்களது திருமணத்தை தள்ளிப்போட்டு வருகின்றனர். வயது ஏறினாலும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகைகளுக்கு தைரியம் தரும் வகையில் தீபிகா படுகோனே பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: ‘அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நான் இருப்பது பெருமையாக இருக்கிறது. யாரையும் கட்டாயப்படுத்தி அதிக சம்பளம் கேட்டது இல்லை. என்னுடைய தகுதிக்கு ஏற்பவே சம்பளம் தரப்படுகிறது. அப்படியில்லாமல் யாரும் பெரிய தொகையை தர மாட்டார்கள். திருமணமான நடிகைகளுக்கு மார்க்கெட் சரிந்துவிடுகிறது என்று எண்ணி அவர்களை ஒதுக்குவது சரியல்ல. எல்லோரும் திருமணம் செய்துதான் ஆகவேண்டும்.
திருமணம் ஆனதும் சினிமா தொழில் ஸ்தம்பித்துவிடாது. திருமணமான நடிகைகளின் படங்களுக்கு வசூல் குறையும் என்பதை ஏற்கமாட்டேன். திருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்பது சிலரது விருப்பமாக இருக்கலாம். ஆனால் இப்போதைய பெண்கள் அப்படி இல்லை. திருமணத்துக்கு பிறகும் நடிக்கிறார்கள். அவர்களின் படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன என்பதை சமீபத்திய படங்கள் நிரூபித்திருக்கின்றன’. இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார். #DeepikaPadukone
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் விமர்சனம். #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan
பொன்வண்ணனின் மகன் ஹரிஷ் கல்யாண். சிறுவயதிலேயே தாயை பிரிந்து வளரும் ஹரிஷ் தாய் பாசத்திற்காக ஏங்குகிறார். தனிமையையே விரும்பும் கோவக்காரராக வளர்கிறார். எந்த பிரச்சனை என்றாலும் முதல் அடி இவருடையதாக இருக்கும். பால சரவணனும், மாகாபா ஆனந்தும் இவரது நண்பர்கள்.
இந்த நிலையில், பார்ட்டி ஒன்றில் நாயகி ஷில்பா மஞ்சுநாத்தை சந்திக்கிறார். அங்கு ஏற்படும் பிரச்சனையில் ஷில்பாவின் குடும்ப நண்பரை அடித்துவிடுகிறார். பின்னர் ஷில்பா ஒரு சில பிரச்சனைகளில் சிக்க அதிலிருந்து அவரை காப்பாற்றி விடுகிறார். இதையடுத்து ஷில்பாவுக்கு ஹரிஷ் மீது காதல் வர, இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள்.

தனது காதலியின் மீதான ஈர்ப்பும், நெருக்கமும் அதிகரிக்க, அவளும் தன்னை விட்டு போய்விடுவாளோ என்று நினைக்கும் ஹரிஷ், ஷில்பாவை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். தனது வீட்டுப் பிரச்சனை காரணமாக ஷில்பா திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.
தனது அம்மா போலவே இவளும் தன்னை பிரிந்து சென்று விடுவாள் என்று எண்ணும் ஹரிஷ், தனது அம்மா மீதுள்ள கோபத்தையும் ஷில்பா மீது வெளிப்படுத்துகிறார்.

இதனால் இவர்களுக்கிடையே என்னென்ன பிரச்சனைகள் வந்தது? ஹரிஷ் - ஷில்பா இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார். தனிமையை விரும்பும், அதிகமாக பேசாத கோவக்கார இளைஞனாக ரசிகர்களை கவர்கிறார். பாசம், காதல், ஆக்ஷன் என நடிப்பில் மிளிர்கிறார். ஷில்பா மஞ்சுநாத் துணிச்சலாக நடித்திருக்கிறார். காதல், கிளாமர் என ரசிகர்களை கவர்கிறார். மாகாபா ஆனந்த், பால சரவணன் காமெடிக்கு கைகொடுக்க, பொன்வண்ணன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பெற்றோர் பிரிந்தால் குழந்தைகள் என்ன மாதிரியான அவஸ்தைக்குள்ளாவார்கள், அவர்களது ஏக்கம், அவர்களது வாழ்க்கை இப்படியும் மாறலாம் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இயக்கியிருக்கிறார் ரஞ்சித் ஜெயக்கொடி. முதல் பாதி ரசிக்கும்படியாக விறுவிறுப்பாக செல்ல, இரண்டாவது பாதி நீளமாகவும், தேவையில்லாத சில காட்சிகள் இடம்பெற்று தொய்வை ஏற்படுத்துகின்றன. இளைஞர்கள் ரசிக்கும்படியான படமாக இயக்கியிருக்கிறார்.
பின்னணி இசையில் சாம்.சி.எஸ். மிரட்டியிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஏ.கவின்ராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். பவன் ஸ்ரீகுமாரின் படத்தொகுப்பு சிறப்பு.
மொத்தத்தில் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' பிரிவின் வலி. #IspadeRajavumIdhayaRaniyum #IspadeRajavumIdhayaRaniyumReview #HarishKalyan #ShilpaManjunath
‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க இருக்கிறார். #AjithKumar #HVinoth
அஜித் எச்.வினோத் இயக்கி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு, சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கு பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் எச்.வினோத் இயக்க இருக்கும் அதிரடி அரசியல் திரைப்படம் ஒன்றில் அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கிறார்.
‘விஸ்வாசம்’ படத்தில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர் - நடிகர் கூட்டணி என்பதால் வினோத் திரைக்கதையைக் கூர்தீட்டி கொண்டிருக்கிறார். அஜித் இதுவரை அரசியல் படங்கள் எதிலும் நடித்ததில்லை.

விஜய், கத்தி, மெர்சல், சர்கார் படங்களில் அரசியல் வசனம் பேசினார். சூர்யா அடுத்து நடித்து வரும் என்.ஜி.கே படம் அரசியல் படம்தான். இந்த வரிசையில் தற்போது அஜித்தும் சேர்ந்து இருக்கிறார். #AjithKumar #Thala60 #Thala61 #HVinoth
செல்வகண்ணன் இயக்கத்தில் பூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி நடிப்பில் வெளியாகி இருக்கும் `நெடுநல்வாடை' படத்தின் விமர்சனம். #Nedunalvadai #NedunalvadaiReview
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், டூலெட் போன்ற படங்கள் எளிமையான கதையுடன் மக்களின் வாழ்வியலை சொல்லும் படங்களாக வெளியாகி பெருமைப்பட வைக்கின்றன. அந்த வரிசையில் சேரும் இன்னொரு படைப்பு நெடுநல்வாடை.
திருநெல்வேலியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பூ ராமுவுக்கு மைம் கோபி, செந்திகுமாரி என 2 பிள்ளைகள். காதல் திருமணம் செய்துகொண்டு ஊரைவிட்டு ஓடிப் போகும் செந்திகுமாரி கணவனின் தொல்லை தாங்காமல் மகன் இளங்கோ மற்றும் மகளுடன் தனது தந்தை வீட்டுக்கு வருகிறார்.
ஆனால், மைம் கோபி அவர்களை சேர்த்துக்கொள்ள மறுக்க பூ ராமுவே மகள் குடும்பத்துக்கு அரணாக மாறுகிறார். பேரன், பேத்தி இருவரையும் நன்றாக படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு வர பாடுபடுகிறார். சிறுவயது முதல் ஒன்றாக பழகி வரும் இளங்கோவும், அஞ்சலி நாயரும் காதலிக்கிறார்கள்.

தனக்கு பிறகு குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் அளவுக்கு இளங்கோ பக்குவப்பட வேண்டும் என்று விரும்புகிறார் பூ ராமு. இளங்கோ நல்ல நிலைக்கு வர வேண்டிய நிலையில், அவரது காதல் குறுக்கே நிற்கிறது.
கடைசியில் பேரனின் காதல், தாத்தாவின் பாசம், இரண்டில் வென்றது எது? என்பதே கதை.
பூ ராமுவுக்கு இளங்கோ குடும்பத்தையும் படத்தையும் தாங்கும் கதாபாத்திரம். சின்ன சின்ன அசைவுகள் முதல் உணர்வுமிக்க காட்சிகள் வரை செல்லையாவாகவே வாழ்ந்து அசத்தி இருக்கிறார். படம் முழுக்கவே நம் உணர்வுகளை தட்டி எழுப்பும் காட்சிகள் செல்லையாவின் வாழ்க்கைக்குள்ளேயே நம்மை ஒன்ற வைக்கிறது. இந்த ஆண்டு பல விருதுகளை பூ ராமு குவிப்பார் என்று சொல்லலாம். தேசிய விருதுக்கே தகுதியான நடிப்பு.

தாத்தாவின் சொல்லை தட்டாத பேரனாக இந்த ஆண்டில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த வரவாக இளங்கோ இருப்பார். தாத்தாவின் பாசத்துக்கும், அஞ்சலி நாயரின் காதலுக்கும் இடையே தவிக்கும் நாயகனாக இளங்கோ, அந்த தவிப்பை நமக்கும் கடத்தி இருக்கிறார்.
படத்தில் அஞ்சலி நாயருக்கு காதலிப்பதுதான் வேலை. ஆனால் வெறுமனே அழகு பொம்மையாக வந்து போகாமல் படத்தின் உயிர்நாடியாக நடித்து இருக்கிறார். 90-களின் கதாநாயகிகளை நினைவுபடுத்தும் வசீகரம். கிளைமாக்ஸ் காட்சி நடிப்பில் கைதட்டல்கள் பெறுகிறார்.

வெறுப்பை உமிழும் மாமாவாக மைம் கோபி, கணவனை பிரிந்த கையறு நிலை தாயாக செந்தி குமாரி, அஜய் நடராஜ், ஐந்து கோவிலான், ஞானம் என மற்றவர்களும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
உணர்வுகளை காட்சிகளுக்குள் கொண்டு வந்து அவற்றை அப்படியே ரசிகர்களிடத்தில் கொண்டு செல்லுதல் என்பது ஒரு கலை. எளிமையான கதையையும், அறிமுக நடிகர்களையும் கொண்டு அந்த கலையை அழகாக செய்து காட்டி இருக்கிறார் செல்வகண்ணன். எளிமையான கதை தான் என்றாலும் அதை திரையில் காட்டியிருக்கும் வடிவத்தில் நிற்கிறார் இயக்குநர். புதுமுகங்கள் என்றாலும், அவர்களின் சிறப்பான பங்களிப்பு படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது. அதுமட்டுமின்றி சரியான கதைக்களம், தொழில்நுட்பங்கள் என இதனை ஒரு அழகிய படைப்பாக மாற்றி இருக்கும் செல்வகண்ணனுக்கு பாராட்டுக்கள். தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது. எல்லோருக்கும் பொருந்த கூடிய ஒரு கதையில் சில சாதி அடையாளங்கள் காண கிடைப்பது மட்டுமே திருஷ்டி.

வெறும் பொழுதுபோக்கு படமாக மட்டும் அல்லாமல் 2 மணி நேரம் நம்மை பேச்சியம்மாவுக்காக கலங்க வைத்து, மருது பாண்டி, கொம்பையா மீது கோபப்படுத்தி, அமுதாவை காதலிக்க வைத்து, செல்லையா போன்ற ஒரு தாத்தாவுக்கு ஏங்க வைத்து அனுப்புகிறது நெடுநல்வாடை.
முக்கியமாக வைரமுத்துவின் வரிகள் படத்துக்கு உயிர்பை கொடுத்திருக்கின்றன. குறிப்பாக கருவாத்தேவா பாடலில் இடம்பெற்றிருக்கும் வரிகளான, ஒரு பசுவின் தியாகம் தான் உசுரா ஒழுகுது பாழாக, ஒரு மனுசனின் தியாகம் தான் ஒவ்வொரு குடும்பமும் ஆளாக என்ற வரியும், ஒரு கிழவனின் கண்ணீரோ தரையில் ஓடுது நதியாக, நதியோடிய தடமெல்லாம் குடும்பம் வளருது பயிராக போன்ற வரிகள் மூலமாக படத்தின் கதையை சொல்லியிருக்கிறார்.

ஜோஸ் பிராங்ளினின் இசை, வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு, மு.காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு மூன்றும் செல்வகண்ணனின் எழுத்தை அப்படியே திரைக்கு கொண்டு வர உதவி இருக்கின்றன. ஜோஸ் இசையில் வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் காதுகளுக்கு விருந்து தான். வினோத்தின் ஒளிப்பதிவு திருநெல்வேலியின் கிராமத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்த உதவியிருக்கிறது. காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பும் நேர்த்தி.
மொத்தத்தில் `நெடுநல்வாடை' பாராட்டப்பட வேண்டிய படைப்பு. #Nedunalvadai #NedunalvadaiReview
இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கைப் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். #KeerthySuresh #AjayDevgn
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தில் கதாநாயகியாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ், இப்போது தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார். விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
சாவித்திரியாக ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்த பிறகு அவரது மார்க்கெட் மற்றும் சம்பளம் உயர்ந்தது. தற்போது இந்தி பட உலகுக்கும் போய் உள்ளார். பிரபல இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கை கதை படமாகிறது.

இதில் அஜய் தேவ்கன் ரகீமாக நடிக்கிறார். அவரது மனைவியாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். அமித் சர்மா இயக்குகிறார். இந்த படத்தை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.
இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “இந்தி படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. நான் சவாலான வேடங்களை தேர்வு செய்தே நடித்து வருகிறேன். இந்தி படமும் அப்படித்தான் இருக்கும். எனக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதை. இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பகுதியை இந்த படம் பேசும்” என்றார். போனிகபூர் சிபாரிசின் பேரிலேயே கீர்த்தி சுரேசுக்கு இந்தி பட வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்தியில் கீர்த்தி சுரேஷ் சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. #KeerthySuresh #AjayDevgn
மலையாளத்தில் இருந்து பல நடிகைகள் தமிழுக்கு வரும் நிலையில், தற்போது லிஜோ மோள் என்னும் நடிகை புதிய படத்தில் மூலம் தமிழுக்கு வருகிறார். #lijomol
பிச்சைக்காரன் படத்துக்கு பிறகு சசி இயக்கும் படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்கின்றனர். இதற்கு தலைப்பு வைக்காமல் இருந்தனர். இந்நிலையில், சிவப்பு மஞ்சள் பச்சை என்று தலைப்பு வைத்துள்ளனர்.
அக்கா, தம்பி பாசத்தை சொல்லும் கதையாக இப்படம் உருவாகிறது. அக்காவாக மலையாள நடிகை லிஜோ மோள் நடிக்கிறார். இவர் அறிமுகமாகும் தமிழ் படம் இது. மலையாளத்தில் மகிஷிண்டே பிரதிகாரம், கட்டபனையில் ஹிரித்திக் ரோஷன் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்தவர்.

அவரது தம்பியாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். லிஜோவுக்கு ஜோடியாக சித்தார்த் நடித்து, டிராபிக் போலீஸ் வேடம் ஏற்றுள்ளார். பைக் ரேஸராக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். தவிர காஷ்மீரா, மதுசூதனன், யூடியூப் குழு நடிகர்கள் உள்பட பலர் நடிக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.






