என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகை யாஷிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். #YashikaAannand
    இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்து பிரபலமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் தற்போது 5 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். வயது வந்தோர் மட்டுமே பார்க்கும் வெப் தொடர் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தகவலை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதிப்படுத்தி இருந்தார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

    யாஷிகா அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார். இப்போது புதிதாக படு கவர்ச்சியான தனது படத்தை வெளியிட்டுள்ளார்.



    இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது. இந்த புகைப்படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. படத்தின் கீழே யாஷிகாவை கேவலமாக பேசியும், விமர்சித்தும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஒருவர் பொள்ளாச்சி சம்பவத்தை குறிப்பிட்டு யாஷிகாவை கண்டித்துள்ளார். இன்னும் சிலர் அவரது கவர்ச்சி தோற்றம் அழகாக இருப்பதாக பேசி உள்ளனர்.

    இந்தி நடிகைகள் பட வாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வழக்கத்தை இப்போது தமிழ் படங்களில் நடிக்கும் நடிகைகளும் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர்.
    சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் கென்னடி கிளப் படக்குழுவுக்கு இயக்குநர் பாரதிராஜா விருந்து அளித்தார். #KennedyClub #Sasikumar
    நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'.

    இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுக்க பல மாநிலங்களில் நடைபெற்றது. அதேபோல் தமிழகத்திலும் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டு வந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது.



    இதில் நிஜ வீராங்கனைகளும் நடித்தனர். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். நேற்று முன்தினத்தோடு பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த நிலையில், நேற்று அவரது இல்லத்தில் படத்தில் நடித்த நிஜ வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவில் பணியாற்றியவர்களுக்கு மதிய விருந்தளித்து உபசரித்தார்.

    இந்த படத்தில் பாரதிராஜாவுடன் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #KennedyClub #Sasikumar #Bharathiraja #Suseenthiran

    டப்பிங் சங்கத்தில் இருந்து சின்மயியை நீக்கிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. #Chinmayi #DubbingUnion
    சினிமா பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டுகளை சுமத்தினார். சர்வதேச அளவில் பிரபலமான மீடூ இயக்கம் மூலம் சமூக வலைதளங்களில் புகார் கூறியவர் பின்னர் போலீசிலும் புகார் அளித்தார்.

    சின்மயி தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். பாலியல் புகாருக்கு பிறகு அவருக்கும், சங்க தலைவர் ராதாரவிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.

    சங்க விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி கடந்த ஆண்டு நவம்பர் 18-ந் தேதி சின்மயி சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து சின்மயி தரப்பில் சென்னை 2-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.



    இந்த வழக்கு நீதிபதி எஸ்.முருகேசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது 2006-ம் ஆண்டிலேயே நுழைவு கட்டணம், வாழ்நாள் உறுப்பினர் கட்டணங்களை செலுத்திவிட்டதாகவும், 2018-ம் ஆண்டு உறுப்பினர் பட்டியலில் தன் பெயர் இருப்பதாகவும் கூறி சின்மயி தரப்பில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. தன் விளக்கத்தைக் கேட்காமல் சங்கத்தில் இருந்து நீக்கியதாகவும் சின்மயி தரப்பில் வாதிடப்பட்டது.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சின்மயியை சங்கத்தில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இதுதொடர்பாக மார்ச் 25-ந் தேதிக்குள் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார். #Chinmayi #DubbingUnion #RadhaRavi

    தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சுருதி ஹாசன் சினிமாவில் இருந்து விலகி இருக்கும் நிலையில், தனது நீண்ட நாள் எண்ணம் பலித்துவிட்டதாக கூறியுள்ளார். #ShrutiHaasan
    நடிகை சுருதிஹாசன் தமிழில், சிங்கம் 3 படத்தில் நடித்த பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனாலும் இணையதளம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். 

    சமீபத்தில் அவர் ஏதோ ஒரு வி‌ஷயத்தை மறைத்து மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்தார். ‘என்னைப் பொறுத்தவரை அது நடந்துவிட்டது. என்ன நடக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தேனோ கடைசியாக உண்மையாகி விட்டது. தற்போதைக்கு நான் சந்தோ‌ஷமாக இருக்கிறேன். எல்லா நலன்களையும் இறைவன் எனக்கு அருளி இருக்கிறான்’ என குறிப்பிட்டுள்ளார். 



    இந்த பதிவில் சுருதி எதைப்பற்றி கூறுகிறார் என்பது பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. அவரே அதற்கு விடை கூறினால் தான் சுருதியின் சந்தோ‌ஷத்திற்கான காரணம் தெரியவரும். #ShrutiHaasan

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி அவரது முதல் காட்சிக்கு 80 டேக்குகள் வரை எடுத்ததாக விஜய் சேதுபதி கூறியதாக ரம்யா கிருஷ்ணன் கூறினார். #SuperDeluxe #VijaySethupathi
    ‘ஆரண்ய காண்டம்’ படத்தைத் தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் 29ந்தேதி இந்தப் படம் ரிலீசாக இருக்கிறது. இந்த படம் பற்றி ரம்யா கிருஷ்ணன் ஒரு பேட்டியில் “என் வாழ்க்கையிலேயே இத்தனை டேக்குகள் வாங்கியது இல்லை. இதன்பிறகும் இத்தனை டேக்குகள் வாங்குவேனா என்று தெரியாது. 

    முதலில் தியாகராஜன் குமாரராஜா என்னைச் சந்திக்க பெங்களூரு வந்தார். அப்போது நான் மிகவும் கூலாக, ‘என்னுடைய முதல் ஷாட் எப்போதும் சிறந்ததாக இருக்க வேண்டும்’ என்று கூறினேன். அதற்கு அவர், ‘கண்டிப்பாக, முயற்சி செய்யலாம்...’ என்று கூறினார்.



    முதல் ஷாட் 37 டேக்குகள் எடுக்கப்பட்டது. விஜய் சேதுபதி தனக்கு 80 டேக்குகள் தேவைப்பட்டது என்று கூறினார். அப்போது அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அன்று மாலை என்னுடைய ஷூட்டிங் தொடங்கியபோதுதான் அவர் கூறிய 80 டேக்குகள் பற்றி புரிந்தது”. இவ்வாறு அவர் கூறினார். #SuperDeluxe #VijaySethupathi #Samantha #FahadFaasil #RamyaKrishnan

    தமிழ் சினிமா நட்சத்திரங்களான ஆர்யாவும், சாயிஷாவும் சமீபத்தில் திருமணம் கொண்டுள்ள நிலையில், திருமணத்திற்கு பிறகு சாயிஷா நடிப்பாரா என்ற கேள்விக்கு சாயிஷா ஆமாம் என்று பதில் அளித்துள்ளார். #Sayyeshaa #Arya
    வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் பேத்தியான இவர், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். 

    சூர்யாவுடன் காப்பான் படத்தில் ஜோடி சேர்ந்த நிலையில் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த வாரம் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், சாயிஷா சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.



    இதுபற்றி அவர் கூறுகையில் ‘ஆர்யாவை கரம் பிடித்ததில் மகிழ்ச்சி. எங்கள் குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கிறோம். தொடர்ந்து நடிப்பது பற்றி முடிவு எடுக்க ஆர்யா முழு உரிமை கொடுத்துவிட்டார். எனவே தொடர்ந்து நடிப்பேன். கதாநாயகர்கள் படம், தனி கதாநாயகி என வித்தியாசம் இல்லாமல் எப்போதும் போல எல்லா படங்களிலும் நடிப்பேன். சமந்தா, ஜோதிகா போன்றோரை இதில் எனக்கு முன்னுதாரணமாக கொண்டுள்ளேன்’. என்றார்.

    சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார். ‘டெடி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கரடி பொம்மை ஒன்று கிராபிக்ஸ் மூலம் நடிக்க உள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க சாயிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. #Arya #Sayyeshaa #AryawedsSayyeshaa #Teddy

    விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில் நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்றனர். #Vishal #VishalAnisha #VishalAnishaEngagement
    நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

    விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்தினார். பிரபல தொழிலதிபர் மகளான அனிஷா, அர்ஜூன் ரெட்டி உள்பட சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர்.



    விஷாலும், அனிஷாவும் சில மாதங்களாக காதலித்து வந்தனர். இரு வீட்டாரும் கலந்து பேசி திருமணம் செய்துவைக்க முடிவு எடுத்தனர். விஷால்-அனிஷா நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் தனியார் சொகுசு ஓட்டலில் பகல் 12 மணிக்கு நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர். #Vishal #VishalAnisha #VishalWedsAnisha #VishalAnishaEngagement 

    பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகும் `தமிழரசன்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சங்கீதா ஒப்பந்தமாகி இருக்கிறார். #Thamizharasan #VijayAntony
    `கொலைகாரன்', `அக்னிச் சிறகுகள்' படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது `தமிழரசன்', `காக்கி' படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் தமிழரசன் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்க, விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சோனு சூட் வில்லனாகவும், பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

    இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சங்கீதா ஒப்பந்தமாகி இருக்கிறார். சுமார் இரண்டு ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த சங்கீதா தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். 



    இதுகுறித்து சங்கீதா கூறும்போது,

    எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக அமையாததால் எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. இந்த படத்தில் எனது கதாபாத்திரம் பேசப்படும், மருத்துவமனை ஒன்றை நடத்தும் டாக்டர் வேடத்தில் நடிக்கிறேன். இதில் எனது கதாபாத்திரம் பவர் புல்லானது என்றார்.

    இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி இந்த படத்தை தயாரிக்கிறார். #Thamizharasan #VijayAntony #RamyaNambeesan #SonuSood #Sangeetha

    பாண்டிராஜ் - சிவகார்த்திகேயன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் சிவா ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது. #SK16 #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர். லோக்கல் படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.

    இந்த நிலையில், பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.



    இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான ‘கனா’ படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #SK16 #Sivakarthikeyan #AishwaryaRajesh #Pandiraj

    கே.சி.சுந்தரம் இயக்கத்தில் அனந்த் நாக் - அஞ்சு குரியன் - சம்யுக்தா மேனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜூலை காற்றில்' படத்தின் விமர்சனம். #JulyKaatril #JulyKaatrilReview #AnanthNag
    தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நாயகன் அனந்த் நாக் தனது நண்பன் திருமணத்தில் நாயகி அஞ்சு குரியனை சந்திக்கிறார். பின்னர் இருவருக்கிடையே நட்பு வளர்கிறது. ஒரு கட்டத்தில் அஞ்சு குரியனுக்கு, அனந்த் நாக் மீது காதல் வளர்கிறது.

    இதையடுத்து இருவீட்டாரும் பேசி இவர்களது திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். இவர்களுக்கு நிச்சதார்த்தமும் நடக்கிறது. அஞ்சு குரியனுடன் காதல் வயப்படாத அனந்த் நாக் அஞ்சுவிடம் இருந்து விலகியே இருக்கிறார். இந்த நிலையில், இவரது அலுவலகத்துக்கு வரும் சம்யுக்தா மேனனுடன் அனந்த நாக்குக்கு பழக்கம் ஏற்படுகிறது.



    இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பிக்கின்றனர். வேறு ஒருவருடனாக காதலை முறித்துக் கொண்டு வந்த சம்யுக்தா மேனனை, அனந்த் நாக் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் சம்யுக்தா, அனந்த் நாக் மீது பெரியதாக விருப்பம் கொள்ளவில்லை. எனினும், இவர்களது நெருக்கம் அதிகமாகிறது. சம்யுக்தா மற்றவர்களுடன் பழகுவதை விரும்பாத அனந்த் நாக், சில அறிவுரைகளை கூற அது சம்யுக்தாவுக்கு பிடிக்கவில்லை.

    கடைசியில், அஞ்சு குரியனின் காதல் வென்றதா? அனந்த் நாக்கின் காதல் வென்றதா? இவர்களின் காதல் என்னவானது? என்ற முக்கோணக் காதல் கதையே ஜூலை காற்றில் படத்தின் மீதிக்கதை.

    இதற்கு முன்பாக சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அனந்த் நாக் இந்த படத்தில் நாயகனாக வலம் வருகிறார். காதல், பிரிவு என இந்த கால இளைஞனாக பளிச்சிடுகிறார். அஞ்சு குரியன் அழகு பதுமையாக வந்து ரசிக்க வைக்கிறார். 



    கள்ளங்கபடமற்ற தனது காதலை வெளிப்படுத்துவதும், அதிலிருந்து வெளியேறுவதும் என அவரது வேலையை செவ்வென செய்துவிட்டுச் செல்கிறார். சம்யுக்தா மேனன் அழுத்தமான பெண் கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். ஆங்காங்கே காமெடியில் சிரிக்க வைக்கிறார் சதீஷ். மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்கள்.

    இந்த காலத்து இளைஞர்களின் காதல், பிரிவு, மீண்டும் காதல் என்ற இயல்பை படமாக இயக்கியிருக்கிறார் கே.சி.சுந்தரம். படத்தில் ஆங்காங்கே காமெடியும், படம் முழுக்க வரும் காதலும், பிரிவும் இடம்பெற்றிருக்கின்றன. இது ஒரு முக்கோணக் காதல் கதை என்று எளிதாக சொல்லும் அளவுக்கு படத்தின் திரைக்கதை நகர்கிறது. படத்தில் நீளத்தை சுருக்கி, திரைக்கதையை வலுப்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.



    ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் ரசிக்கும்படியான பாடல்களும், பின்னணி இசையும் மனதை வருடுகின்றன. டேமல் சேவியரின் ஒளிப்பதிவும் அருமை.

    மொத்தத்தில் `ஜூலை காற்றில்' காதல், பிரிவு. #JulyKaatril #JulyKaatrilReview #AnanthNag #AnjuKurian #SamyukthaMenon

    அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படத்திற்கு வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் தெலுங்கு ரீமேக்கிலும் ஐஸ்வர்யா நடிக்க இருக்கிறார். #Kanaa #AishwaryaRajesh
    ‘காக்கா முட்டை’, `தர்மதுரை' படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கனா’ படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கும் பாராட்டுக்களும் கிடைத்தது.

    அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமான இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. வசூலிலும் இந்த படம் சாதனை நிகழ்த்தியது. இதில் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருந்தார். கிரிக்கெட் விளையாடி பயிற்சிகள் எடுத்து இதில் நடித்தார்.



    இந்த நிலையில் கனா படத்தை தெலுங்கில் ‘கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி கிரிக்கெட்டர்’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். இந்த படத்திலும் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேசையே தேர்வு செய்துள்ளனர். பீமனேனி சீனிவாசராவ் இந்த படத்தை இயக்குகிறார்.

    இதில் ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்திலும், சலீம் இயக்கும் படமொன்றிலும் நடித்து வருகிறார். இது அவருக்கு 3-வது தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது. #Kanaa #AishwaryaRajesh #KousalyaKrishnamoorthyCricketer

    சமந்தா நடிப்பில் உருவாகி வரும் கொரியன் பட ரீமேக்கான ‘ஓ பேபி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்திருக்கிறது. #Samantha #OhBaby
    2014-ம் ஆண்டு வெளியான கொரியன் படம் ‘மிஸ் க்ரானி’. சீனா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது.

    இந்தியாவில் முதலில் தெலுங்கில் ‘ஓ பேபி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ஒரு போட்டோ ஸ்டூடியோவுக்கு செல்லும் அவள், மந்திர சக்திகள் மூலம் 20 வயது பெண்ணின் தோற்றத்தைப் பெறுகிறாள். இதன்பிறகு ஏற்படும் சிக்கல்களை சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையுடனும் திரைக்கதையாக அமைத்திருப்பார்கள்.



    இதில் இளமையான தோற்றத்தில் சமந்தாவும், வயதான தோற்றத்தில் லட்சுமி நடித்திருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
    ×