என் மலர்
நீங்கள் தேடியது "Yashika Aannand"
பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகை யாஷிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். #YashikaAannand
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்து பிரபலமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் தற்போது 5 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். வயது வந்தோர் மட்டுமே பார்க்கும் வெப் தொடர் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தகவலை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதிப்படுத்தி இருந்தார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.
யாஷிகா அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார். இப்போது புதிதாக படு கவர்ச்சியான தனது படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது. இந்த புகைப்படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. படத்தின் கீழே யாஷிகாவை கேவலமாக பேசியும், விமர்சித்தும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஒருவர் பொள்ளாச்சி சம்பவத்தை குறிப்பிட்டு யாஷிகாவை கண்டித்துள்ளார். இன்னும் சிலர் அவரது கவர்ச்சி தோற்றம் அழகாக இருப்பதாக பேசி உள்ளனர்.
இந்தி நடிகைகள் பட வாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வழக்கத்தை இப்போது தமிழ் படங்களில் நடிக்கும் நடிகைகளும் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர்.
புவன் நல்லன் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் `ஜாம்பி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #Zombie #YogiBabu
எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் `ஜாம்பி'. இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் படப்பிடிப்புடன் மொத்த காட்சிகளையும் படமாக்கி முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.

ஜாம்பிகள் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் சந்திக்கும் கிளைமாக்சுக்கு முந்தைய முக்கிய காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் ஹைலைட்டான காட்சியான இதை ஹீலியம் விளக்கொளியில் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் புவன் நல்லன். சென்னை முதல் பாண்டிச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நடக்கும்படியாக காட்சிப்படுத்தப்படும் இந்த படத்தின் கதை ஒரு நாள், ஓர் இரவில் நடப்பது போல் உருவாகி வருகிறது. படத்தை கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். பிரேம்ஜி இந்த படத்துக்கு இசையமைக்கிறார். #Zombie #YogiBabu #YashikaAannand
அஜித், விக்ரம் ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா திரிவேதி மகத் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். #PriyankaTriveti #MahatRagavendra
அஜித் நடித்த ராஜா, விக்ரம் நடித்த காதல் சடுகுடு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரியங்கா திரிவேதி. 2003-ம் ஆண்டு கன்னட நடிகர் உபேந்திராவை மணம் முடித்த பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இவர் கடைசியாக அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த ஜனனம் திரைப்படம் 2004-ம் ஆண்டு வெளியானது. தற்போது பதினைந்து ஆண்டுகளுக்கு பின் மகத், யாஷிகா ஆனந்த் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத ஹாரர் திரில்லர் படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர்கள் மகேஷ் வெங்கடேஷ் இருவர் இணைந்து இந்த படத்தை இயக்குகின்றனர்.

வரும் வாரம் முதல் பிரியங்கா படக்குழுவுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். கன்னடம், தமிழ் என இரு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
குழந்தைகள் வளரும் வரை நடிப்பில் இருந்து விலகி இருந்த பிரியங்கா கன்னடம், வங்க திரையுலகில் சில படங்களில் நடித்துவந்தார். இவர் தற்போது நடித்துள்ள ஹவாரா பிரிட்ஜ் திரைப்படம் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது. இந்த படமும் தமிழில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #PriyankaTriveti #MahatRaghavendra #YashikaAannand
சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் `கழுகு-2' படத்தில் யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். #Kazhugu2 #Krishna
சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான `கழுகு' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் `கழுகு-2' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.
கிருஷ்ணா, பிந்து மாதவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திலிருந்து சகலகலா வள்ளி என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாட்டில் நடிகை யாஷிகா ஆனந்த் குத்தாட்டம் போட்டுள்ளார்.
ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார். பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. #Kazhugu2 #Krishna #BinduMadhavi #YashikaAannand
சகலகலா வள்ளி பாடல் வீடியோ:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று காதலித்ததாக பிரபலமான மகத், யாஷிகா ஆனந்த் புதிய படத்தில் இணைந்து நடிக்க இருக்கின்றனர். #MahatRaghavendra #YashikaAannand
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகத்தும், நடிகை யாஷிகா ஆனந்தும் நெருக்கமாக பழகினார்கள். ஆனால் வெளியில் வந்த பிறகு இருவரும் பிரிந்தார்கள். இந்த நிலையில், இரட்டை இயக்குனர்களான மகேஷ், வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள்.
படத்தை பற்றி இயக்குனர்கள் கூறும்போது ‘இந்த படம் ஹாரர் திரில்லர் படமாக இருந்தாலும், நாட்டு மக்கள் எளிதில் தங்களோடு பொருத்திக்கொள்கிற ஒரு முக்கிய பிரச்சினை படத்தில் இருக்கிறது. எனவே படத்தை தமிழ், கன்னடம் ஆகிய 2 மொழிகளில் எடுக்க இருக்கிறோம்.

மகத், யாஷிகாவுடன் முனிஸ்காந்த், மாகாபா. ஆனந்த் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்கி கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்’ என்றனர். மகத் இன்னொரு படத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் நடிக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் மகத்துக்கு அதிக வாய்ப்புகள் குவிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #MahatRaghavendra #YashikaAannand