என் மலர்

  சினிமா

  சினிமாவில் இணைந்த பிக்பாஸ் காதலர்கள்
  X

  சினிமாவில் இணைந்த பிக்பாஸ் காதலர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று காதலித்ததாக பிரபலமான மகத், யாஷிகா ஆனந்த் புதிய படத்தில் இணைந்து நடிக்க இருக்கின்றனர். #MahatRaghavendra #YashikaAannand
  பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகத்தும், நடிகை யாஷிகா ஆனந்தும் நெருக்கமாக பழகினார்கள். ஆனால் வெளியில் வந்த பிறகு இருவரும் பிரிந்தார்கள். இந்த நிலையில், இரட்டை இயக்குனர்களான மகேஷ், வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

  படத்தை பற்றி இயக்குனர்கள் கூறும்போது ‘இந்த படம் ஹாரர் திரில்லர் படமாக இருந்தாலும், நாட்டு மக்கள் எளிதில் தங்களோடு பொருத்திக்கொள்கிற ஒரு முக்கிய பிரச்சினை படத்தில் இருக்கிறது. எனவே படத்தை தமிழ், கன்னடம் ஆகிய 2 மொழிகளில் எடுக்க இருக்கிறோம்.  மகத், யாஷிகாவுடன் முனிஸ்காந்த், மாகாபா. ஆனந்த் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்கி கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்’ என்றனர். மகத் இன்னொரு படத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் நடிக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் மகத்துக்கு அதிக வாய்ப்புகள் குவிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #MahatRaghavendra #YashikaAannand

  Next Story
  ×