என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகத் ராகவேந்திரா"

    கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்று வந்தார் மகத்.

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் மகத். இவர் மங்காத்தா, ஜில்லா, சென்னை 600028 - 2, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    படங்களில் தனது தனித்துவமான கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்தவர் தனது பிசிக்கல் டிரான்ஸ்பர்மேஷனுக்காக தற்போது பாக்ஸிங் கற்றுள்ளார். இவர் கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்று வந்தார்.

    இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்றார். இந்த வருடம் ஆஸ்திரேலிய சூப்பர் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை சாம்பியனான கோயன் மசூடியரிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்ததுதான் நடிகர் மகத் குத்துச்சண்டை பயணத்தின் சிறப்பம்சம்.

    இந்த நிலையில், மகத் ராகவேந்திரா வேற லெவல் லுக்கில் கலைப்பயணத்தின் அடுத்தக்கட்டத்திற்குள் நுழைகிறார்.

    இதுதொடர்பாக நடிகர் மகத் ராகவேந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஊடக நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும்,

    எனது கலைப்பயணத்தின் தொடக்கத்தில் இருந்தே, உங்கள் ஆதரவு எனக்கு என்றும் நிலையான பலத்தையும், ஊக்கத்தையும் அளித்து வருகிறது. ஒரு கலைஞராகவும், தனிநபராகவும் எனது வாழ்க்கைப் பயணத்தை வடிவமைத்ததில் உங்கள் ஆதரவுக்கு முக்கியப் பங்குண்டு.

    கடந்த சில மாதங்களாக நான் ஒதுங்கி இருந்து, சுய பரிசோதனை செய்து, என்னை நானே செதுக்கிக் கொண்டேன். தற்போது, புதிய நோக்கத்துடன், மேம்பட்ட ஒரு நபராகவும் மீண்டும் களம் இறங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    அந்தப் பயணத்தின் வெளிப்பாடே, நான் வெளியிட்டுள்ள 'Mechanic' என்ற புகைப்படத் தொகுப்பு. இது வெறும் உடலின் அழகியல் காட்சி மட்டுமல்ல. நான் கடினமாக உழைத்த மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை இது வெளிப்படுத்துகிறது.

    இனிவரும் காலங்களில், நல்ல கதைகளை ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் படைப்புகளில் நான் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதே எனது முதன்மை நோக்கம். அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை, மீண்டும் சமூகத்திற்குக் கொண்டு சேர்ப்பதில் எனது கவனம் இருக்கும்.

    கடவுள் ஆசீர்வாதத்துடன், எனது கலைப்பயணத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழைய நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த புதிய அத்தியாயத்திலும், நான் எப்போதும் மதிக்கும் உங்கள் ஆதரவைத் தேடுகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அஜித், விக்ரம் ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா திரிவேதி மகத் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். #PriyankaTriveti #MahatRagavendra
    அஜித் நடித்த ராஜா, விக்ரம் நடித்த காதல் சடுகுடு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரியங்கா திரிவேதி. 2003-ம் ஆண்டு கன்னட நடிகர் உபேந்திராவை மணம் முடித்த பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். 

    இவர் கடைசியாக அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த ஜனனம் திரைப்படம் 2004-ம் ஆண்டு வெளியானது. தற்போது பதினைந்து ஆண்டுகளுக்கு பின் மகத், யாஷிகா ஆனந்த் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத ஹாரர் திரில்லர் படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர்கள் மகேஷ் வெங்கடேஷ் இருவர் இணைந்து இந்த படத்தை இயக்குகின்றனர்.



    வரும் வாரம் முதல் பிரியங்கா படக்குழுவுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். கன்னடம், தமிழ் என இரு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

    குழந்தைகள் வளரும் வரை நடிப்பில் இருந்து விலகி இருந்த பிரியங்கா கன்னடம், வங்க திரையுலகில் சில படங்களில் நடித்துவந்தார். இவர் தற்போது நடித்துள்ள ஹவாரா பிரிட்ஜ் திரைப்படம் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது. இந்த படமும் தமிழில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #PriyankaTriveti #MahatRaghavendra #YashikaAannand

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் பிசியாகியிருக்கும் மகத், அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாவதால் பயமாக இருப்பதாக மகத் கூறியுள்ளார். #MahatRaghavendra
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, நடிகர் மகத் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன், தன் நண்பர் சிம்பு நடிக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்தார். 

    பிரபு ராம் இயக்கத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் ரொமான்டிக் காமெடி ஜானரில் ஒரு படம், யாஷிகா ஆனந்துடன் ஹாரர் திரில்லர் ஜானரில் ஒரு படம் என மகத் மிகவும் பிசியாகிவிட்டார். 

    இது குறித்து மகத்திடம் கேட்ட போது, “ரொம்ப பயமா இருக்கு. அடுத்தடுத்து படங்கள் பண்றேன். என்ன நடக்குதுனே புரியலை. நான் என் பெஸ்டை கொடுக்கிறேன். அதுக்கு மக்கள் ஆதரவு கிடைத்தால் ரொம்ப சந்தோசமா இருக்கும்“ என்றார் மகிழ்ச்சியுடன். #MahatRaghavendra

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று காதலித்ததாக பிரபலமான மகத், யாஷிகா ஆனந்த் புதிய படத்தில் இணைந்து நடிக்க இருக்கின்றனர். #MahatRaghavendra #YashikaAannand
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகத்தும், நடிகை யாஷிகா ஆனந்தும் நெருக்கமாக பழகினார்கள். ஆனால் வெளியில் வந்த பிறகு இருவரும் பிரிந்தார்கள். இந்த நிலையில், இரட்டை இயக்குனர்களான மகேஷ், வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

    படத்தை பற்றி இயக்குனர்கள் கூறும்போது ‘இந்த படம் ஹாரர் திரில்லர் படமாக இருந்தாலும், நாட்டு மக்கள் எளிதில் தங்களோடு பொருத்திக்கொள்கிற ஒரு முக்கிய பிரச்சினை படத்தில் இருக்கிறது. எனவே படத்தை தமிழ், கன்னடம் ஆகிய 2 மொழிகளில் எடுக்க இருக்கிறோம்.



    மகத், யாஷிகாவுடன் முனிஸ்காந்த், மாகாபா. ஆனந்த் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்கி கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்’ என்றனர். மகத் இன்னொரு படத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் நடிக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் மகத்துக்கு அதிக வாய்ப்புகள் குவிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #MahatRaghavendra #YashikaAannand

    பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்ற மகத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் இணைந்து ரொமான்டிக் காமெடி பலந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். #MahatRagavendra #AishwaryaDutta
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் ஐஸ்வர்யா தத்தாவின் செயல்பாடுகள் அதிக விமர்சனங்களைச் சந்தித்தன. அதன் மூலம் அவர் அதிக கவனம் பெற்றார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.

    பிக்பாசில் அவரோடு இணைந்து கலந்துகொண்ட மகத் அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபு ராம்.சி இயக்குகிறார். இவர் ஹாலிவுட் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். ரொமாண்டிக் காமெடி கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் முழு விபரம் விரைவில் வெளியாக உள்ளது. 

    மகத் தற்போது சிம்புவின் வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சுந்தர்.சி இயக்கும் இந்த படத்தில் மேகா ஆகாஷ், கேத்தரீன் தெரசா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.



    ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா, ஹரிஷ் கல்யாண் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்திருந்தனர். ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகி இருந்த அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே பாணியில் மகத், ஐஸ்வர்யா களம் இறங்கி உள்ளனர். #MahatRagavendra #AishwaryaDutta

    ×