கலைப்பயணத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழையும் மகத் ராகவேந்திரா- வைரல் புகைப்படங்கள்

கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்று வந்தார் மகத்.
கலைப்பயணத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழையும் மகத் ராகவேந்திரா- வைரல் புகைப்படங்கள்
Published on

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் மகத். இவர் மங்காத்தா, ஜில்லா, சென்னை 600028 - 2, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

படங்களில் தனது தனித்துவமான கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்தவர் தனது பிசிக்கல் டிரான்ஸ்பர்மேஷனுக்காக தற்போது பாக்ஸிங் கற்றுள்ளார். இவர் கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்று வந்தார்.

இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்றார். இந்த வருடம் ஆஸ்திரேலிய சூப்பர் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை சாம்பியனான கோயன் மசூடியரிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்ததுதான் நடிகர் மகத் குத்துச்சண்டை பயணத்தின் சிறப்பம்சம்.

இந்த நிலையில், மகத் ராகவேந்திரா வேற லெவல் லுக்கில் கலைப்பயணத்தின் அடுத்தக்கட்டத்திற்குள் நுழைகிறார்.

இதுதொடர்பாக நடிகர் மகத் ராகவேந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஊடக நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும்,

எனது கலைப்பயணத்தின் தொடக்கத்தில் இருந்தே, உங்கள் ஆதரவு எனக்கு என்றும் நிலையான பலத்தையும், ஊக்கத்தையும் அளித்து வருகிறது. ஒரு கலைஞராகவும், தனிநபராகவும் எனது வாழ்க்கைப் பயணத்தை வடிவமைத்ததில் உங்கள் ஆதரவுக்கு முக்கியப் பங்குண்டு.

கடந்த சில மாதங்களாக நான் ஒதுங்கி இருந்து, சுய பரிசோதனை செய்து, என்னை நானே செதுக்கிக் கொண்டேன். தற்போது, புதிய நோக்கத்துடன், மேம்பட்ட ஒரு நபராகவும் மீண்டும் களம் இறங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அந்தப் பயணத்தின் வெளிப்பாடே, நான் வெளியிட்டுள்ள 'Mechanic' என்ற புகைப்படத் தொகுப்பு. இது வெறும் உடலின் அழகியல் காட்சி மட்டுமல்ல. நான் கடினமாக உழைத்த மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை இது வெளிப்படுத்துகிறது.

இனிவரும் காலங்களில், நல்ல கதைகளை ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் படைப்புகளில் நான் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதே எனது முதன்மை நோக்கம். அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை, மீண்டும் சமூகத்திற்குக் கொண்டு சேர்ப்பதில் எனது கவனம் இருக்கும்.

கடவுள் ஆசீர்வாதத்துடன், எனது கலைப்பயணத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழைய நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த புதிய அத்தியாயத்திலும், நான் எப்போதும் மதிக்கும் உங்கள் ஆதரவைத் தேடுகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com