என் மலர்
நீங்கள் தேடியது "ஒமர் லூலு"
ஒமர் லூலு இயக்கிய `ஒரு அடார் லவ்' படத்தில் இணைந்து நடித்த பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. #OruAdaarLove #PriyaVarrier #NoorinSherif
ஒரு அடார் லவ் படத்தில் கண் சிமிட்டியும் இந்திய அளவில் பிரபலமானவர் பிரியா வாரியர். இந்த கண்சிமிட்டலுக்காகவே படம் ஓடும் என்று பேசினர். ஆனால் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஓமர் லூலு கூறும்போது, “நூரின் ஷெரீப் திறமையான நடிகை. அவருக்கு முன்னுரிமை அளித்து கதையை உருவாக்கி இருந்தேன். ஆனால் பிரியா வாரியர் கண்சிமிட்டல் பாடல் வைரலானதும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி தயாரிப்பாளர் வற்புறுத்தியதால் பிரியாவாரியரை முதன்மையான கதாபாத்திரமாக்கி கதையை மாற்றினேன்” என்றார்.

நடிகை நூரின் ஷெரீப் கூறும்போது, “படத்தில் எனக்குத்தான் முதன்மையான கதாபாத்திரம் என்று சொல்லி படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால் பிரியா வாரியர் கண்சிமிட்டலால் கதையை மாற்றி அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து என்னை ஓரம் கட்டி துணை நடிகையாக்கிவிட்டனர். இது வருத்தமாய் இருந்தது.” என்றார்.
இதனால் பிரியா வாரியருக்கும், நூரின் ஷெரீப்புக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. நூரின் ஷெரீப்புக்கு பதில் அளித்துள்ள பிரியா வாரியர், “கதையை எனக்காக மாற்றியதாக குற்றம்சாட்டுகின்றனர். கண்சிமிட்டல் பாடலுக்கு பிறகு எனக்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல் கதையை மாற்றியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்துவிட்டதாக நூரின் ஷெரீப் குறை கூறி உள்ளார். அவரை படத்தில் ஓரம்கட்டவில்லை. முதலில் சொன்ன கதையைத் தான் அப்படியே படமாக்கி இருந்தனர்” என்றார். #OruAdaarLove #PriyaVarrier #NoorinSherif
ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் கண்ணடித்து பிரபலமான பிரியா வாரியர் மீது அந்த படத்தின் இயக்குநர் ஒமர் லூலு புகார் கூறியுள்ளார். #OruAdaarLove #PriyaVarrier #OmarLulu
ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா வாரியர். அந்த படத்தில் காதல் காட்சியில் கண்ணடித்து நடித்தது பிரபலமானதை அடுத்து அவரது புகழ் கூடியது. சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனார்.
இந்த படத்தில் முதலில் நூரின் ஷெரீப் தான் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். பிரியா வாரியர் கண்ணடித்து நடித்தது பிரபலம் ஆனதால் நூரினை துணை கதாபாத்திரமாக்கி பிரியாவை முதன்மை கதாநாயகியாக மாற்றினார்கள்.
ஒரு அடார் லவ் படம் கடந்த மாதம் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பிரியா வாரியர் மீது அந்த படத்தின் டைரக்டர் ஓமர் லூலு புகார் கூறி உள்ளார்.

அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ’இந்த படத்தின் ஒரிஜினல் பதிப்பில் பிரியாவாரியர் கதாநாயகி கிடையாது. அவர் கண்ணடித்தது பிரபலம் ஆனதால், தயாரிப்பாளர் என்னை அணுகி பிரியா வாரியரை கதாநாயகியாக வருவது போல் கதையை மாற்றி எழுதும்படி கூறினார்.
நூரின் ஷெரிப் தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பிறகு அவரது கதாபாத்திரம் துணை கதாபாத்திரமாக்கப்பட்டது. படத்தினால் புகழ் கிடைத்த பின்னர் பிரியாவாரியர் பட புரமோஷன் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை.
பட ரிலீசுக்கு பிறகு நடந்த படத்தை பிரபலபடுத்தும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. அது சரியில்லை. எதிர்காலத்தில் அவர் இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது’ என்றார். #OruAdaarLove #PriyaVarrier #OmarLulu
ஒமர் லூலு இயக்கத்தில் ரோஷன் அப்துல் ரகூப் - நூரின் ஷெரிப் - பிரியா வாரியர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஒரு அடார் லவ்' படத்தின் விமர்சனம். #OruAdaarLove #OruAdaarLoveReview #Roshan #PriyaVarrier
பள்ளியில் 11-வது படிக்கும் ரோஷனுக்கும், நூரின் ஷெரிப்புக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், அதே பள்ளியில் சேரும் பிரியா வாரியரை பார்க்கும் ரோஷனுக்கு அவள் மீது காதல் ஏற்டுகிறது.
ஒரு கட்டத்தில் இருவருமே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ரோஷன், நூரின் ஷெரிப்புடன் தோழமையாக பழகுவது பிரியா வாரியருக்கு பிடிக்காமல் போக, இருவருக்கும் இடையே விரிசல் ஏற்டுகிறது. பிரியா வாரியருடன் மீண்டும் இணைய நினைக்கும் ரோஷன், நூரின் ஷெரிப்புடன் நெருக்கமாக பழகுவது போல நடிக்கிறார். ஒரு கட்டத்தில் ரோஷன் - நூரின் ஷெரிப் இடையே நெருக்கம் அதிகமாகி காதலாகிறது.

கடைசியில், ரோஷன் யாருடன் இணைந்தார்? யார் காதல் வெற்றி பெற்றது? என்பதே படத்தின் மீதி காதல் கதை.
காதல் காட்சிகளில் ரோஷன், பிரியா வாரியர் இளைஞர்களை கவர்கின்றனர். இருப்பினும் இரண்டாவது பாதியில், அனைவரையும் கவர்ந்து ரசிகர்களின் கவனத்தை தன்வசமாக்குகிறார் நூரின் ஷெரிப். மற்றபடி அனீஷ் ஜி மோகன், தில்ருபா, மிச்செல் அல் டேனியல், ரோஷ்னா அன் ராய் என மற்ற கதாபாத்திரங்களும் ரசிக்கும்படி நடித்துள்ளார்கள்.

பள்ளிப்பருவத்தில் நடக்கும் காதலை, இளைஞர்கள் ரசிக்கும்படியான படமாக இயக்கியிருக்கிறார் ஒமர் லூலு. இளைஞர்கள் தனது பள்ளி, கல்லூரி காலங்களில் யாரிடமும் பகிர முடியாமல் இருக்கும் ரகசியங்கள் பற்றி இந்த படத்தில் பேசியிருக்கிறார்கள். எனவே இளைஞர்களை கவரும் ஒரு படமாக இருக்கும். குறிப்பாக தமிழில் வசனங்கள் சரியான இடத்தில் இடம்பெற்றிருப்பது மிகச் சிறப்பான ஒன்று. நூரின் ஷெிப்பின் கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது. அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.
ஷான் ரஹ்மான் இசையில் மாணிக்க மலராய பூவே பாடல் ஹிட்டடித்த நிலையில், மற்ற பாடல்களும் ரசிக்கும்படியாகவே உள்ளது. சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `ஒரு அடார் லவ்' இளமைக் காதலின் இனிமை. #OruAdaarLove #OruAdaarLoveReview #Roshan #PriyaVarrier #NoorinSherif






