என் மலர்
சினிமா செய்திகள்
விஜய் 63 படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்திக்க விஜய் வந்த போது இடையே இருந்த தடுப்பு வேலி சரிந்து விழுந்த நிலையில், ரசிகர்கள் கீழே விழாதபடி வேலியை விஜய் தாங்கிப்பிடித்தார். #Vijay #Vijay63
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் விளையாட்டு சம்மந்தப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விஜய் படத்தின் படப்பிடிப்பு நடப்பதை அறிந்து விஜய்யை பார்க்க, அவரது ரசிகர்கள் படப்பிடிப்பு தளங்களுக்கு படையெடுப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யைக் காண அவரது ரசிகர்கள் குவிந்தனர். இதையறிந்த விஜய் ரசிகர்களை சந்திப்பதற்காக வந்தார்.

ரசிகர்களை நோக்கி கையசைத்துக் கொண்டே விஜய் வேலி அருகில் சென்ற போது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் விஜய்யை பார்க்க வேலியில் ஏறினர். அப்போது அந்த தடுப்பு வேலி திடீரென சரிந்து விழுந்தது. திடீரென வேலி சரிந்ததை பார்த்து முதலில் அதிர்ச்சிக்குள்ளான விஜய், பின்னர் அந்த வேலி கீழே விழுந்துவிடாதபடி தாங்கிப் பிடித்தார். விஜய்க்கு அவரது உதவியாளர்கள் உதவிசெய்ய, வேலி கீழே விழாதபடி தடுத்தனர்.
இதையடுத்து விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Vijay #Vijay63
விஜய் ரசிகர்களை சந்திக்கும் வீடியோ:
எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு `ராட்சசி' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Raatsasi #Jyothika #SRaj
`காற்றின் மொழி' படத்துக்குப் பிறகு ஜோதிகாவைத் தேடி நிறைய கதைகள் வருகிறது. முக்கியமாக பெண்ணியம் சார்ந்த கதைகள் தான் அதிகமாக வருவதாக கூறப்படுகிறது. மக்கள் எளிதில் தங்களை இணைத்துக்கொள்ளும் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்.
அந்த வகையில், அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். ஜோதிகா ஆசிரியை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு `ராட்சசி' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஜோதிகாவுக்கு ஆக்ஷன் காட்சிகள் கூட இருக்கிறது.

இதில் முக்கிய வேடத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி ஆகியோர் நடிக்கிறார்கள். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார்.
தற்போது கல்யாண் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் ஜோதிகா, அடுத்ததாக ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. #Raatsasi #Jyothika #SRaj
உன்னாலே உன்னாலே தமிழ் படத்தில் நாயகியாக நடித்திருந்த தனிஷா முகர்ஜி, அமெரிக்காவில் தான் இனவெறியோடு அவமரியாதையை சந்தித்ததாக கூறியுள்ளார். #TanishaMukerji
தமிழில் உன்னாலே உன்னாலே படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் தனிஷா. இந்தி படங்களிலும் நடித்துள்ளார். டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இவர் பிரபல இந்தி நடிகை கஜோலின் தங்கை ஆவார். தனிஷாவுக்கு அமெரிக்காவில் இனவெறியோடு அவமரியாதை செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது:-
“அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று இருந்தேன். நிகழ்ச்சி முடிந்து அங்குள்ள ஓட்டலுக்கு சென்றபோது ஒருவர் என்னை அருவெறுப்பாக பார்த்தார். கேவலமான வார்த்தைகளால் பேசினார். அவரது செயல் குரூரமாகவும், முரட்டுத்தனமாகவும் இருந்தது.

என்மீது இனவெறியோடு நடந்து கொண்டார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் நான் பொறுமையாக இருந்தேன். ஓட்டல் ஊழியர் ஒருவர் நான் பார்க்க வித்தியாசமாக இருந்ததால் அந்த நபர் அப்படி பேசியதாக தெரிவித்தார். அமெரிக்காவில் இனவெறி அனுபவத்தை நான் சந்தித்தேன். இதற்கு முன்பு இதுபோல் நடந்தது இல்லை. என்னுடன் வந்த தோழிகளும் இதை பார்த்து அதிர்ச்சியானார்கள்.” இவ்வாறு அவர் கூறினார். #TanishaMukerji #Racism
சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கென்னடி கிளப்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி 2 கோடி செலவில் உருவாகி வருகிறது. #Sasikumar #KennedyClub
சசிகுமார், இயக்குனர் பாரதிராஜா, இணைந்து நடிக்க பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் கென்னடி கிளப். சசிகுமார் இதுவரை நடித்ததிலேயே இந்த படம் தான் அதிக பட்ஜெட் கொண்ட படம். 15 கோடி செலவில் உருவாகி வரும் இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது.
தற்போது விழுப்புரத்தில் உள் விளையாட்டு அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக இந்தியாவில் இருந்து 16 குழுக்கள் வந்துள்ளது. ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பூனே, கேரளா, ஆந்திரா, மங்களூர், போன்ற இடங்களிலிருந்து கபடி குழுக்கள் வந்துள்ளது. நிஜ வீரர்களை கொண்டே படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். ஏறத்தாழ 300 வீரர்கள் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள்.

படப்பிடிப்பு விழுப்புரத்தில் நடந்தாலும் வடஇந்தியாவில் நடப்பது போல் பிரத்யேகமாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் ரூ.2 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளது. இறுதிக்கட்ட காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிஜ போட்டியாகவே நடத்தி படப்பிடிப்பை பதிவு செய்து வருகிறார்கள் பட குழுவினர். இறுதிப்போட்டியை காண ஏராளமானோரை வரவழைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக்கட்ட காட்சிகளுக்கு மட்டும் 10 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்துகிறார்கள். இந்த படப்பிடிப்பு முடிந்ததும் பாடல்கள் மட்டும் படமாக்கப்படுகிறது என்று இதன் தயாரிப்பாளர் தாய் சரவணன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பலாத்காரம் செய்த சம்பவத்திற்கு நடிகர் சங்கம் தலைவர் நாசர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். #NadigarSangam #PollachiRapists
பொள்ளாச்சியைச் சேர்ந்த பாலியல் மாபியா கும்பலின் செய்தியறிந்து நாடே உறைந்து போய் கிடக்கிறது. 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை துன்புறுத்தி வேட்டையாடி வந்த அந்த கயவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென தமிழகம் முழுவதில் இருந்தும் போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில், நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில்,
கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வரும் பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகள் மனதை கனக்கச் செய்கின்றன. இந்த மாபெரும் படுபாதக செயல்களை பல காலங்களாக திட்டமிட்டு ஒரு கும்பல் செய்து வந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக பார்க்க முடிகிறது.
இந்த செயலின் பின்னணியில் உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து, அவர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என காவல்துறையிடம் வேண்டுகோள் வைக்கிறோம்.
இச்செயலில் காவல்துறை நேர்மையாகவும் துணிவுடனும் விரைந்து செயல்படும் என நம்புகிறோம். அந்த நேர்மைக்கு எப்போதும் தென்னிந்திய நடிகர் சங்கம் துணை நிற்கும் என இந்த நேரத்தில் உறுதியளிக்கிறோம்.

அலைபேசியில் உள்ள இணையதளங்கள் முகநூல் வாட்ஸ்அப் போன்ற விஞ்ஞான வளர்ச்சியில் உள்ள ஆபத்துக்களை உணர்ந்து இன்றைய தலைமுறையினர் விழிப்புடன் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நம்மை வழி நடத்துவதில் நம்ம பெற்றோருக்கு இருக்கக்கூடிய பொறுப்பும், கனவுகளும், வேறு யாருக்கும் இருக்கப்போவதில்லை. அதனால் ஒரு குறிப்பிட்ட வயது வரை நம் பெற்றோர்களுக்கு தெரியாமல் எந்த ஒரு உறவுகளையும் நட்புகளையும் யாரும் வைத்துக்கொள்ள வேண்டாம் என இளைய தலைமுறையினரை தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தெறி படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. #Theri #Vijay #ThalapathyVijay
விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தெறி’. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறது என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. பின்னர் எந்த அறிவிப்பு வராததால் கைவிடப்பட்டது என்று தகவல் கசிந்தது.

தற்போது தெறி படத்தின் ரீமேக் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்க இருக்கிறார். எமி ஜாக்சன் கதாபாத்திரத்தில் கேத்ரின் தெரசா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சமந்தா கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் இப்படம் பற்றி முழுவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, திருமணமான நடிகைகளை ஒதுக்குவது சரியல்ல என்று கூறியிருக்கிறார். #DeepikaPadukone
இந்தியில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கிடையே பிரபலமானார். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை மணந்து திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நான் இருப்பது பெருமையாக இருக்கிறது. கட்டாயப்படுத்தி அதிக சம்பளம் கேட்டது இல்லை. எனக்கு அருகதை இல்லாமல் யாரும் பெரிய தொகையை கொடுக்க மாட்டார்கள். அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்று என்னை அழைப்பதில் மகிழ்கிறேன்.
திருமணமான நடிகைகளுக்கு மார்க்கெட் இல்லை என்று ஒதுக்குவது சரியல்ல. திருமணம் நடிகைகள் மார்க்கெட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எல்லோரும் திருமணம் செய்துதான் ஆகவேண்டும். திருமணம் ஆனதும் சினிமா தொழில் ஸ்தம்பித்து போய்விடாது. திருமணமான நடிகைகளின் படங்களுக்கு வசூல் குறையும் என்பதை ஏற்கமாட்டேன்.

திருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்பது சிலரது விருப்பமாக இருக்கலாம். நீண்ட நாட்கள் நடித்து சலிப்பு ஏற்பட்டு சொந்த வாழ்க்கை திருமண பந்தம் போன்றவற்றை சந்தோஷமாக அனுபவிக்க சினிமாவை விட்டு ஒதுங்க நினைக்கலாம். ஆனால் இப்போதைய பெண்கள் அப்படி இல்லை. திருமணத்துக்கு பிறகும் நடிக்கிறார்கள். அவர்களின் படங்கள் நன்றாக ஓடுகின்றன.
இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.
பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து நடிகர் சத்யராஜ் வீடியோ மூலம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். #PollachiRapists
பொள்ளாச்சியில் ஒரு கும்பல் கல்லூரி, பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இந்த சம்பவம் குறித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது நடிகர் சத்யராஜ் வீடியோ மூலம் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், ‘பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை, அக்கிரமத்தின் உச்சம், அநியாயத்தின் உச்சம், கொடூரத்தின் உச்சம். இந்த மனித மிருகங்களை பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர்களுக்கு சட்டப்படி உச்சபட்ச தண்டனையை தாமதமில்லாமல் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
#PunishTheRapistspic.twitter.com/MAmNyho1L1
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) March 12, 2019
துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ஆதித்யா வர்மா படத்தில் யூடியூப்பில் மிகவும் பிரபலமானவர் நடிக்க இருக்கிறார். #DhruvVikram #AdithyaVarma
துருவ் விக்ரம் அறிமுக நாயகனாக நடித்த `வர்மா’ படம், இயக்குநர் பாலா மற்றும் தயாரிப்பு தரப்புக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகளால் கைவிடப்பட்டது.
அதை தொடர்ந்து படத்தை `ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் மீண்டும் எடுக்க திட்டமிட்டு, படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தை `அர்ஜுன் ரெட்டி’ படத்தின் அசோசியேட் இயக்குநர் கிரிசய்யா இயக்குகிறார்.

பிரிட்டிஷ் இந்திய மாடல் அழகி பனிதா சந்து துருவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். படத்தில் நடிகை கதாபாத்திரத்திலேயே பிரியா ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகனுக்கு நண்பனாக வரும் கதாபாத்திரத்தில் `மீசைய முறுக்கு’, `கோலமாவு கோகிலா’ படங்களில் நடித்த யூடியூப் பிரபலம் அன்புதாசன் நடிக்கிறார். ஆன்லைனில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்ட இவர், அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கார்த்திக் இயக்கும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். #PollachiRapists
பொள்ளாச்சியைச் சேர்ந்த பாலியல் மாபியா கும்பலின் செய்தியறிந்து நாடே உறைந்து போய் கிடக்கிறது. 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை துன்புறுத்தி வேட்டையாடி வந்த அந்த கயவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென தமிழகம் முழுவதில் இருந்தும் போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
மாதர் சங்கங்களும், முற்போக்கு இயக்கங்களும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன. இந்நிலையில் இயக்குநர் பா.இரஞ்சித் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பதிவு செய்திருக்கும் ட்விட்டிலிருப்பதாவது,
"பொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தை கேள்விகேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்புக் கோர சொல்லும், எச்சரிக்கையாக இருக்க சொல்லும் நம் அனைவருக்கும்... நம் பாவம், பரிதவிப்பால், பிரச்சினை நடந்த பிறகு எழும் கோவத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை.
பொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தை கேள்விகேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்புக் கோர சொல்லும், எச்சரிக்கையாக இருக்க சொல்லும் நம் அனைவருக்கும்....நம் பாவம், பரிதவிப்பால், பிரச்சினை நடந்த பிறகு எழும் கோவத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை.
— pa.ranjith (@beemji) March 12, 2019
இல்லையேல் பாதிக்கப்பட்ட, பாதிக்கபடபோகும் பெண்களின் குரல்களை இன்னும் எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அதிகாரம் விழுங்கி கொண்டுதான் இருக்கும். நாமும் கேட்டு, பார்த்து, குரல் கொடுத்து அல்லது எதுவும் செய்யாமல் கடந்து போய் கொண்டுதான் இருக்க போகிறோம்.
ஆண் மைய சமூகத்தில் பெண் உடல், உடை, சமூக செயல்பாடு, கலாச்சாரம் பற்றிய பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய ஒவ்வொருவரும் முன் வரவேண்டும்." என்று கூறியிருக்கிறார்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஓவியா, நல்லவராக நடித்து ஆட்சியை பிடிக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். #Oviya #90ML #TNPolitical
ஓவியா நடிப்பில் சமீபத்தில் வெளியான 90 எம்.எல் படத்தில் அவர் சில ஆபாச வசனங்களை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தில் ஆபாசம் அதிகமாக இருப்பதாகவும் எதிர்ப்புகள் தோன்றின. பிக்பாஸ் மூலம் கிடைத்த புகழை கெடுத்துக்கொண்டார் என்று விமர்சனங்கள் பரவின.
இதுபற்றி ஓவியாவிடம் கேட்டோம். ’சமூகத்தில் இருப்பவர்களின் பிரதிபலிப்பு தான் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள். படத்தில் நடிப்பதற்கும் தனிப்பட்ட ஒருவரின் தன்மைக்கும் தொடர்பு இல்லை.

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? சினிமாவில் நல்லவர்களாக நடிப்பார்கள். பின்னர் அதையே வைத்து அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிப்பார்கள். இது சினிமா. சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க தொடங்குங்கள். என்னை ஓவியாவாக பாருங்கள். படத்தில் வரும் கதாபாத்திரங்களோடு சேர்த்து குழப்பி கொள்ளாதீர்கள்’.
இவ்வாறு அவர் கூறினார்.
வடிவுடையான் இயக்கத்தில் பரத் - சிருஷ்டி டாங்கே, நமீதா, இனியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பொட்டு' படத்தின் விமர்சனம். #Pottu #PottuReview
தம்பி ராமையா - ஊர்வசியின் மகனான பரத் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் சிருஷ்டி டாங்கேவும் - பரத்தும் காதலிக்கிறார்கள்.
அந்த கல்லூரியில் உள்ள ஒரு கட்டிடத்தில் அமானுசிய சக்தி இருப்பது தெரிய வருகிறது. ஒருகட்டத்தில் பரத்துக்கு பேய் பிடிக்கிறது. இதையடுத்து பரத் அவ்வப்போது பெண் போன்று நடந்து கொள்கிறார்.

கடைசியில், பரத்துக்கு பேய் பிடிக்க காரணம் என்ன? அந்த பேயின் முன்கதை என்ன? பரத் மூலம் அந்த பேய் யாரை பழிவாங்கியது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
பரத் பெண் வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அதற்காக அவர் தனது உடல் மொழிகளை மாற்றி அந்த கதாபாத்திரமாக மாறியிருப்பதை உணர முடிகிறது. இனியாவின் கதாபாத்திரம் படத்தின் கருவுக்கு முக்கிய காரணமாகிறது. மந்திரவாதியாக வரும் நமீதாவுக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை. சிருஷ்டி டாங்கே காதல், கவர்ச்சி என வழக்கம் போல வந்து செல்கிறார். மற்ற கதாபாத்திரங்களை சரியாக வேலை வாங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மருத்துவக் கல்லூரி பின்னணியில் ஹாரர் படமாக இதை இயக்கியிருக்கிறார் வடிவுடையான். படத்தில் வழக்கம்போல வித்தியாசமான புரியாத சில வசனங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் திரைக்கதை வலுவில்லாமல் இருப்பதால படத்தை பொறுமையாக உட்கார்ந்து பார்க்க முடியவில்லை.
அம்ரீஷ் கணேஷின் பின்னணி இசையில் எரிச்சலை உண்டுபண்ணுகிறது. பாடல்கள் சுமார் ரகம் தான். இனியன் ஜே.ஹாரிஸின் ஒளிப்பதிவு சிறப்பாக வந்துள்ளது.
மொத்தத்தில் `பொட்டு' நமக்கான வேட்டு. #Pottu #PottuReview #Bharath #Namitha #Iniya #SrustiDange






