என் மலர்
நீங்கள் தேடியது "வடிவுடையான்"
வடிவுடையான் இயக்கத்தில் பரத் - சிருஷ்டி டாங்கே, நமீதா, இனியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பொட்டு' படத்தின் விமர்சனம். #Pottu #PottuReview
தம்பி ராமையா - ஊர்வசியின் மகனான பரத் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் சிருஷ்டி டாங்கேவும் - பரத்தும் காதலிக்கிறார்கள்.
அந்த கல்லூரியில் உள்ள ஒரு கட்டிடத்தில் அமானுசிய சக்தி இருப்பது தெரிய வருகிறது. ஒருகட்டத்தில் பரத்துக்கு பேய் பிடிக்கிறது. இதையடுத்து பரத் அவ்வப்போது பெண் போன்று நடந்து கொள்கிறார்.

கடைசியில், பரத்துக்கு பேய் பிடிக்க காரணம் என்ன? அந்த பேயின் முன்கதை என்ன? பரத் மூலம் அந்த பேய் யாரை பழிவாங்கியது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
பரத் பெண் வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அதற்காக அவர் தனது உடல் மொழிகளை மாற்றி அந்த கதாபாத்திரமாக மாறியிருப்பதை உணர முடிகிறது. இனியாவின் கதாபாத்திரம் படத்தின் கருவுக்கு முக்கிய காரணமாகிறது. மந்திரவாதியாக வரும் நமீதாவுக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை. சிருஷ்டி டாங்கே காதல், கவர்ச்சி என வழக்கம் போல வந்து செல்கிறார். மற்ற கதாபாத்திரங்களை சரியாக வேலை வாங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மருத்துவக் கல்லூரி பின்னணியில் ஹாரர் படமாக இதை இயக்கியிருக்கிறார் வடிவுடையான். படத்தில் வழக்கம்போல வித்தியாசமான புரியாத சில வசனங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் திரைக்கதை வலுவில்லாமல் இருப்பதால படத்தை பொறுமையாக உட்கார்ந்து பார்க்க முடியவில்லை.
அம்ரீஷ் கணேஷின் பின்னணி இசையில் எரிச்சலை உண்டுபண்ணுகிறது. பாடல்கள் சுமார் ரகம் தான். இனியன் ஜே.ஹாரிஸின் ஒளிப்பதிவு சிறப்பாக வந்துள்ளது.
மொத்தத்தில் `பொட்டு' நமக்கான வேட்டு. #Pottu #PottuReview #Bharath #Namitha #Iniya #SrustiDange
வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் வீரமாதேவி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. #Veeramadevi #SunnyLeone
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது, பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தமிழில் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தை பொட்டு படத்தை இயக்கியுள்ள வடிவுடையான் இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் பொன்சே.ஸ்டீபன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #Veeramadevi #SunnyLeone






