என் மலர்

  சினிமா

  துருவ் விக்ரம் படத்தில் யூடியூப் பிரபலம்
  X

  துருவ் விக்ரம் படத்தில் யூடியூப் பிரபலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ஆதித்யா வர்மா படத்தில் யூடியூப்பில் மிகவும் பிரபலமானவர் நடிக்க இருக்கிறார். #DhruvVikram #AdithyaVarma
  துருவ் விக்ரம் அறிமுக நாயகனாக நடித்த `வர்மா’ படம், இயக்குநர் பாலா மற்றும் தயாரிப்பு தரப்புக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகளால் கைவிடப்பட்டது.

  அதை தொடர்ந்து படத்தை `ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் மீண்டும் எடுக்க திட்டமிட்டு, படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தை `அர்ஜுன் ரெட்டி’ படத்தின் அசோசியேட் இயக்குநர் கிரிசய்யா இயக்குகிறார்.  பிரிட்டிஷ் இந்திய மாடல் அழகி பனிதா சந்து துருவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். படத்தில் நடிகை கதாபாத்திரத்திலேயே பிரியா ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகனுக்கு நண்பனாக வரும் கதாபாத்திரத்தில் `மீசைய முறுக்கு’, `கோலமாவு கோகிலா’ படங்களில் நடித்த யூடியூப் பிரபலம் அன்புதாசன் நடிக்கிறார். ஆன்லைனில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்ட இவர், அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கார்த்திக் இயக்கும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
  Next Story
  ×