என் மலர்

  சினிமா செய்திகள்

  டி.இமான்
  X
  டி.இமான்

  மறுமணம் செய்துகொண்டார் இசையமைப்பாளர் டி.இமான்.. வைரலாகும் புகைப்படம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமீபத்தில் மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான் இன்று மறுமணம் செய்துள்ளார்.
  தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவர் இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல படங்களுக்கு இமான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் அவருடைய மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக இமான் அறிவித்தார்.

  டி.இமான் திருமண புகைப்படம்
  டி.இமான் திருமண புகைப்படம்

  2008-ஆம் ஆண்டு மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே விவாகரத்து செய்ததாக கூறப்பட்டு பிறகு டிசம்பர் இறுதியில் அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார். சட்ட ரீதியாக தனது மனைவியை பிரிந்த டி.இமான் சென்னையை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்துள்ளார். இமான் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
  Next Story
  ×