என் மலர்

  சினிமா செய்திகள்

  பீஸ்ட் - வெந்து தணிந்தது காடு
  X
  பீஸ்ட் - வெந்து தணிந்தது காடு

  பீஸ்டுடன் மோதும் வெந்து தணிந்தது காடு?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் விஜய்யின் பீஸ்ட் படத்துடன் வெளியாக இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
  இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துவரும் படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்தப் படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுதியுள்ளார். சிலம்பரசனுடன் இணைந்து கயடு லோஹர், சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார் போன்ற பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், பாடலாசிரியராக தாமரை ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 


  வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கி அதன்பின்னர் சென்னையில் அரங்குகள் அமைத்து சில முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  வெந்து தணிந்தது காடு
  வெந்து தணிந்தது காடு

  இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ‘கேஜிஎஃப் 2’, ‘பீஸ்ட்’ ஆகிய படங்கள் ஏப்ரலில் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 'வெந்து தணிந்தது காடு' படமும் ஏப்ரலில் வெளியாகும் என்ற தகவலினால் இருவருடைய ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 
  Next Story
  ×