search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சமந்தா–நாக சைதன்யா விரைவில் நிச்சயதார்த்தம்
    X

    சமந்தா–நாக சைதன்யா விரைவில் நிச்சயதார்த்தம்

    பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் விரைவில் நிச்சயதார்த்தம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தமிழ், தெலுங்கு பட உலகின் முன்னணி நாயகியாக இருப்பவர் சமந்தா. தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் இவருக்கு அங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

    இந்த நிலையில், ‘ஒருவரை காதலிக்கிறேன், அவர் யார் என்ற விவரத்தை திருமண அறிவிப்பின்போது வெளியிடுவேன்’ என்று சமந்தா ஒரு பேட்டியில் தெரிவித்தார். காதலர் யார் என்பதை அறிவதில் ரசிகர்கள் தீவிர ஆர்வம் காட்டினார்கள். இதனால் சமந்தா காதல் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகின.

    இப்போது சமந்தாவின் காதலர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் இளம் நாயகனுமான நாகசைதன்யா என்பது உறுதியாகி இருக்கிறது. தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.

    இதை அறிந்த நாகசைதன்யாவின் பெற்றோர் சமந்தமாவை தங்கள் வீட்டுக்கு அழைத்து பேசினார்கள். நாகசைதன்யாவிடமும் கேட்டனர். இதில் இருவரும் தீவிரமாக காதலிப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவுசெய்தனர்.

    இதற்கிடையே சமந்தாவும், நாகசைதன்யாவும் ஒரே வீட்டில் சேர்ந்து இருப்பது போன்ற வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத்தில் உள்ள ஒரு வீட்டின் பால்கனியில் இருவரும் ஜோடியாக பேசிக்கொண்டு உலா வருவதை யாரோ ரகசியமாக படம் எடுத்து வெளியிட்டிருந்தனர்.

    இப்போது இவர்கள் காதல் பற்றிய செய்திகள் தொடர்ந்து விதம் விதமாக வெளியாகி வருகின்றன. எனவே சமந்தா– நாகசைதன்யா திருமண நிச்சயதார்த்தத்தை விரைவில் நடத்த இரண்டு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர். தற்போது நாகசைதன்யா ‘பிரேமம்‘ தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் நிச்சயதார்த்தம் நடைபெறும் என்று தெரிகிறது.
    Next Story
    ×