search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மீண்டும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் கபாலி
    X

    மீண்டும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் கபாலி

    ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கபாலி படம் பல வகைகளில் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இந்நிலையில், பாடல்கள் டீசர் மூலம் மீண்டும் விருந்து படைக்க வருகிறது.
    ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘கபாலி’. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் எப்போது வெளியாகும் என்று பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    சமீபத்தில் வெளியான டீசர், பல சாதனைகளை படைத்தது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக ‘நெருப்புடா நெருங்குடா...’ பாடல் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்து வருகிறது.

    இது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் நிலையில், இந்த பாடல்களின் டீசரை நாளை இரவு 8 மணிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதுவும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×