search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கபாலியில் ரஜினியின் அறிமுகமாகும் காட்சி பற்றிய ருசிகர தகவல்
    X

    கபாலியில் ரஜினியின் அறிமுகமாகும் காட்சி பற்றிய ருசிகர தகவல்

    கபாலியில் ரஜினி அறிமுகமாகும் காட்சி பற்றிய ருசிகர தகவல்களை அப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்
    ரஜினி நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அவர் அறிமுகம் ஆகும் காட்சி ரசிகர்களுக்கு புது உற்சாகத்தை தரும். அதேபோல், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்திலும் அவரது அறிமுக காட்சி எப்படி இருக்கும் என்று ரசிகர்களிடைய நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தை பற்றியும் படத்தில் ரஜினி அறிமுகமாகும் காட்சி பற்றியும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

    கலை இயக்குனர் ராமலிங்கம்: நான் இந்த படத்திற்காகத்தான் செட்டே போட்டிருக்கிறேன். தாய்லாந்தில் உள்ள இரண்டு தெருக்களை சென்னையில் செட் அமைத்து படமாக்கியுள்ளோம். அதேபோல், மலேசியாவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றையும் இங்கே செட் அமைத்து படமாக்கியுள்ளோம். இந்த செட்டில்தான் ரஜினி அறிமுகமாகும் காட்சி படமாக்கப்பட்டது. இவை அனைத்தும் செட் என்று சொல்லமுடியாத அளவுக்கு தத்ரூபமாக இருக்கும். ரஜினி சார் எங்கள் அனைவரும் ஒரு ஆச்சர்யமான விஷயமாக இருந்தார். ஒரு மிகப்பெரிய நடிகர் மிகவும் எளிமையாக, ஒரு இயக்குனரின் நடிகராக மிகவும் ஒத்துழைத்து நடித்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது என்றார்.

    எடிட்டர் பிரவீன் கே.எல். : கபாலி படத்தின் பாடல்கள் மிகவும் நன்றாக உள்ளது. சந்தோஷ் நாராயணன் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். இதில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களில் ‘நெருப்புடா’, ‘வீரத் துறந்தரா’ ஆகிய இரண்டு பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘நெருப்புடா’ பாடல் அப்படியே நம்மை தூக்கிப் போடும் பாடல். ‘வீரத் துறந்தரா’ டானாக உருவெடுக்கிற பாடல். இந்த இரண்டு பாடல்களும் விஷுவலாக பார்க்கும்போதும் மிகவும் நன்றாக இருக்கும் என்றார்.

    இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்: இப்படத்தில் கானாபாலா, அருண்ராஜா, அனந்து ஆகியோர் முக்கியமான பாடல்களை பாடியுள்ளனர். இவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெருமையாக இருக்கிறது. இவ்வளவு பெரிய படத்தில் என்னை சுதந்திரமாக பணியாற்ற உதவிய இயக்குனர் பா.ரஞ்சித், ரஜினி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை நான் ஒப்புக்கொண்ட போது மிகவும் பயந்து இருந்தேன். இவ்வளவு பெரிய படத்தை நம்மால் எப்படி சரியாக செய்யமுடியும் என்று குழப்பத்தில் இருந்தேன். எங்களை ஊக்குவித்து சிறப்பாக செய்ய வைத்த ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது நன்றி. ஒரு ரஜினி ரசிகராக இந்த படத்தில் பாடல்களை விஷுவலாக பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றார்.

    Next Story
    ×