search icon
என் மலர்tooltip icon

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    25.3.2024 முதல் 31.3.2024 வரை

    மனச்சுமை தீரும் வாரம். ராசிக்கு 5ல் 7ம் அதிபதி சுக்ரன் உச்சம். பூர்வீகம், குல தெய்வம், குழந்தைகள் தொடர்பான சில நல்ல சம்பவங்கள் நடக்கும். செயற்கை கருத்தரிப்பு வெற்றி தரும். அதிர்ஷ்ட பொருள், பணம், பங்குச் சந்தை ஆதாயம் போன்ற எதிர்பாராத பண வரவு உண்டு. கவுரவப் பதவி கிடைக்கும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களால் அனுகூலமான பலன் உண்டு. நெருங்கிய நண்பரின் உதவியுடன், சிலர் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. சிலர் புதிய தொழில் கிளைகள், கூட்டுத் தொழில் துவங்கலாம். தம்பதிக ளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். கருத்து வேறு பாடு காரணமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் கூடி மகிழ்வார்கள்.

    ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் கட்டுக்குள் இருக்கும். 5ல் சுக்ரன் ராகு சேர்க்கை புதிய எதிர்பாலின நட்பை உருவாக்கும். சிலருக்கு வாழ்க்கையை வளமாக்கும் காதலாக அது அமையும். சிலருக்கு கிடைக்கும் நட்பு வாழ்க்கை சீரழிக்கும் விதமாக அமையும் என்பதால் காதல் விவ காரத்தில் கவனம் தேவை. மேலும் வளம் பெற காக்கைக்கு எள் கலந்த சாதம் மற்றும் தண்ணீர் வைக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×