search icon
என் மலர்tooltip icon

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    4.3.2024 முதல் 10.3.2024 வரை

    மாற்றங்களால் மனம் மகிழும் வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் சுக்ரனுடன் சகாய ஸ்தானத்தில் சேருவதால் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். தடை, தாமதங்கள் விலகும். உற்சாகமாக சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இல்லறம் நல்லறமாகும். வீடு மாற்றம், ஊர் மாற்றம் போன்ற நல்ல விரும்பிய மாற்றங்கள் வந்து சேரும்.சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருந்தாலும் லாபம் குறையாது. வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.

    சில மறைமுக எதிர்ப்புகள், போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் ராசிக்கு 6-ல் குரு சஞ்சரிப்பதால் வெற்றி உங்களுக்கே கல்விக்காக வெளியூர், வெளிநாடு மற்றும் விடுதியில் தங்கி யிருந்த பிள்ளைகள் இல்லம் திரும்பு வார்கள். ஆரோக்கியம் சார்ந்த பயம் விலகும். பெண்க ளுக்கு உற்றார், உறவினர் வரு கையால் வீட்டுப் பொறுப்பு கள் அதிக ரிக்கும். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டு. சிவ னுக்கு பஞ்சாமிர்த அபிசேகம் செய்து வழிபட இறையருள் பரிபூரணமாக துணை நிற்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×