search icon
என் மலர்tooltip icon

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    6.11.2023 முதல் 12.11.2023 வரை

    அறிவாற்றலும், திறமையும் கூடும் வாரம். 5-ம்மிடத்திற்குள் ராகு நுழைவதால் வெளிநாட்டு வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமாகும். காதல் திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் உண்டாகும். இடப் பெயர்ச்சி செய்ய நேரும்.அனைத்து விதமான பாக்கிய பலன்களும் உங்களை தேடி வர உள்ளது. நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், நோய் நொடியில்லாத வாழ்க்கையும் அமையப்போகின்றது. உங்களின் செயல் வேகம் அதிகரிப்பதுடன் மனதில் புத்துணர்ச்சியும் தைரியமும் எதையும் எதிர்கொள்ளும் சக்தியும் உண்டாகும். தீபாவளி கொண்டாட்டத்தால் உற்றார் உறவினர்களுடன் சுமூகமான உறவு உண்டாகும். இதுவரை நிலவிய மந்த நிலை மாறும்.

    எங்கு சென்றாலும் உங்களுக்கு முதலிடம் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகளை நிறைவு செய்து மகிழ்வீர்கள்.பூர்வீக நிலம், வீடு போன்றவற்றை விற்பதை ஒத்திவைத்தால் வீண் விரயம் தடுக்கப்படும். பங்குச் சந்தையில் எதிர்பாராத இழப்புகள் ஏற்படலாம். உஷ்ணநோய்க்கு மருத்துவ சிகிச்சை செய்யநேரும். சிலருக்கு மறுவிவாகம் நடைபெறும். சகோதரர்களால் பயனடைவீர்கள். கணவன், மனைவி உறவு மகிழ்வைத் தரும். வீர லட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×