search icon
என் மலர்tooltip icon

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    18.9.2023 முதல் 24.9.2023 வரை

    நிறைவான வாரம். ராசி அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம். தொழில் ஸ்தான அதிபதி சூரியன் லாப ஸ்தான அதிபதி புதனுடன் பரி வர்த்தனை என கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. நிறைந்த அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் வாரம். கடல் தாண்டிச் செல்லும் யோகம் உள்ளது.எதிரிகளையும், நம்பிக்கை துரோகி களையும் அடையாளம் காண்பீர்கள். சொந்த ங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். காதலர்க ளுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். பழைய வாகனத்தை எக்ஸ்சேஞ் ஆபரில் மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வளர்ப்பு பிராணிகளிடம் கவனத்துடன் செயல்படவும். ஆதார் கார்டு, ஏ.டி.எம். கார்டு, பாஸ் புக், ஆர்.சி. புக் போன்ற ஆவணங்களையும் பணத்தையும் கவனமாக கையாள வேண்டும். மாற்றுமுறை வைத்தியத்தில் ஆரோக்கியம் அதிகரிக்கும். எந்த செயலிலும் வெற்றி பெற பிரத்தியங்கரா தேவிக்கு அரளிப்பூ மாலை அணிவித்து வணங்குதல் மிக நல்லது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×