search icon
என் மலர்tooltip icon

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    12.2.2024 முதல் 18.2.2024 வரை

    புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம். பாக்கிய அதிபதி சூரியன் சகாய ஸ்தானத்தில் நின்று பாக்கிய ஸ்தானமான தன் வீட்டைத் தானே பார்ப்பதால் புதிய நம்பிக்கை உருவாகும். அத்துடன் தன ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் உச்சம் பெறுகிறார். எதிர்கால தேவைக்கு இப்பொழுதே சேமிப்பீர்கள். ராசி அதிபதி குரு தன் வீட்டை ராசியை பார்க்கிறார். சகாய ஸ்தானத்தில் சனி ஆட்சி என தனுசு ராசிக்கு கோட்சார கிரகங்கள் மிகச் சாதகமாக உள்ளது.நன்மை கள் மிகுதியாகும். ஆன்மீக ஈடுபாட்டில் அதிக நாட்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியம், தேக வலிமை பெறும். உங்களை வாட்டிய எதிர்மறை சிந்தனைகளை நேர்மறை சிந்தனையாக மாற்றும் பயிற்சியில் ஈடுபடுவீர்கள்.

    பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மன நிறைவோடு செய்து முடிப்பீர்கள் சேமிப்புகள் மற்றும் பங்குச் சந்தை முதலீடு அதிகரிக்கும். வராக் கடன்கள் வசூலாகும். சமுதாய அந்தஸ்து மிகுந்த புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். திருமணம், சுப காரிய முயற்சிகள் சாதகமாகும். வேலைப்பளு அதிகமாகும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி துரிதமாகும். எல்லாவிதத்திலும் இந்த வாரம் மிகச் சாதகமாக அமைய தினமும் கால பைரவ அஷ்டகம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×