என் மலர்

  தனுசு - வார பலன்கள்

  தனுசு

  இந்த வார ராசிப்பலன்

  15.8.2022 முதல் 21.8.2022 வரை

  வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். ராசி அதிபதி குரு கேந்திரம் பெற்றதாலும் 7, 10-ம் அதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் பாக்கிய அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்றதாலும் வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். தொழிலுக்குத் தேவையான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சில தம்பதிகள் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம்.

  உங்களைக் கெடுக்க நினைத்த எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். நீண்டகாலமாக உங்களைப் பாதித்த நோய்த் தொந்தரவில் இருந்து விடுபடுவீர்கள். பிரிந்து போன உறவுகளை இணைக்க பெரும் முயற்சி எடுப்பீர்கள். 5-ல் ராகு இருப்பதால் வெளிவட்டார செல்வாக்கை அதிகரிக்கஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள்.குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள் பேசி நிச்சயித்த திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கப்படும்.

  சில தம்பதிகள் வெளி யூர், வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லலாம். வேலையாட்கள் உங்கள் எண்ணப்படி நடப்பார்கள்.நாத்தனார், மாமியாரால் ஏற்பட்ட மனக் கசப்பு மறையும். சோதனை களை சாதனை களாக மாற்று வீர்கள். ஆரோக்கியம் சீராகும். தினமும் ஆஞ்சநேயர் கவசம் படிக்கவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  தனுசு

  இந்த வார ராசிப்பலன்

  8.8.2022 முதல் 14.8.2022 வரை

  விரும்பிய கடன் தொகை கிடைக்கும் வாரம்.புதிய வீடு வாங்கலாம், அல்லது மாறலாம். வீடு, வாகனம் தொடர்பான கடன் முயற்சிகள் சாதக மாகும். ராசிக்கு இரண்டில் சனி பகவான் வக்ரமாக இருப்பதால் கடின வார்த்தைகளை பயன்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.

  பேசியவார்த்தைகளால்நண்பர்களையும் சில வாய்ப்புகளையும் இழக்க நேரிடும். நிதானமாக பேசினால் நன்மை உண்டு.பூர்வீகச் சொத்து தொடர்பான பங்காளிகள் கருத்து வேறுபாடு மத்தியஸ்தர்களால் சுமூகமாகும். குடும்ப உறவுகளுடன் ஆன்மீக, இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் மங்கள நிகழ்வு கள் விமரிசையாக நடக்கும்.

  தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் விரும்பிய இடமாற்றம் பெற்று குடும்பமாக சேர்ந்து வாழ்வார்கள். சிலர் மனதிற்கு பிடிக்காத வேலையை நிராகரித்து புதிய பணிக்கு முயற்சி செய்யலாம். சிலருக்கு எதிர்பாராத தலைமைப்பதவி கிடைக்கலாம்.திருமண ஏற்பாடுகள் துரிதமாகும்.சிலருக்கு வேலையாட்களால் மன சஞ்சலம் உண்டாகும்.மாணவமணிகள் கல்வியில் முன்னேற அதிகமாக உழைக்கவும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உதவவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  தனுசு

  இந்த வார ராசிப்பலன்

  1.8.2022 முதல் 7.8.2022 வரை

  குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் வாரம். வாழ்க்கைத் துணையுடன் நிலவிய பனிப் போர்மறையும். விவாகரத்து வரை சென்ற வழக்குகள் திரும்பப் பெறப்படும். திருமண விசயத்தில் வேண்டாம் என்று ஒதுக்கிய வரனே சாதகமாக முடியும். பணவரவுகளில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் சமாளிக்க முடியும்.பணிபுரிபவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றத்தால் அதிக அலைச்சல் உண்டாகும். பிள்ளைகளின் நலனுக்காக எடுக்கும் திருமணம் மற்றும் மேற்படிப்பு முயற்சிகள் சித்திக்கும்.

  ராசி, நான்காம் அதிபதி குரு மற்றும் இரண்டு, மூன்றாம் அதிபதி. சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நினைப்பதொன்று நடப்பது ஒன்றாக இருக்கும். கண் திருஷ்டி அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினருடன் பொதுச்சுவர், காம்பவுண்ட சுவர் தொடர்பான பிரச்சினையால் மன உளைச்சல் அதிகரிக்கும்.

  சிறு சிறு உடல் உபாதைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவருடன் வாழாமல் பிறந்த வீட்டில் தஞ்சம் அடைந்த சகோதரி மீண்டும் கணவருடன் சென்று வாழத்துவங்குவார். அரசியல் வாதிகளுக்கு கட்சிப் பணியினால் வீண் விரயங்கள், மன உளைச்சல் ஏற்படும். வியாழக்கிழமை விநாயகரை வழிபட்டால் இன்னல்கள் அகலும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  தனுசு

  வார ராசி பலன்கள்

  25.7.2022 முதல் 31.7.2022 வரை

  இன்னல்கள் முடிவுக்கு வரும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதிசெவ்வாய்ஆட்சி பலம் பெற்றதால் தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சமூக அந்தஸ்து அதிகரிக்கும். சொந்தக்காலில் நிற்பவர்களுக்கு லாபம் அதிகமாகும். கூட்டு தொழிலில் லாபம் அதிகரிக்கும். சிலரது துணைக்கு உத்தியோகம் கிடைக்கும்.

  திருமணத்திற்கு வரன் அமையும். வரன் மிகஅருகாமையிலேயே அமையும். சிலரின் தாயார் மூலம் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு உருவாகும். விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்கள். விரைவில் பணிக்கு செல்ல முடியும். விபத்துக் காப்பீட்டு தொகை கிடைக்கும்.

  வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். புத்திர விருத்தி உண்டு. 28.7.2022 அன்று காலை 12.20 மணி முதல் 30.7.2022 பகல் 12.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் பிரச்சினை, தேவையற்ற பழிச்சொற்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் கவனம் தேவை. பிரதோசத்தன்று சிவனுக்கு அரிசி மாவு அபிசேகம் செய்யவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  தனுசு

  இந்த வார ராசிப்பலன்

  18-7-2022 முதல் 24-7-2022 வரை

  மகிழ்சியான வாரம். ஐந்தாம் அதிபதி செவ்வாய் 5-ல் ஆட்சி பலம்பெற்றதால் கடன் தொல்லைகள் குறையும். சேமிப்பு உயரும்.பங்குச் சந்தை ஆதாயம் உபரி வருமானத்தைப் பெற்றுத்தரும். நல்ல தொழில் உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல், வாங்கலில் சிறப்பான நிலை நீடிக்கும்.

  பங்குதாரர்கள் மற்றும் வேலையாட்கள் ஆதரவால் தொழிலில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க முடியும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் வெளிநாட்டு கம்பெனியில்கிடைக்கும். முதலாளிகள் வேலையாட்களிடம்இனிக்க, இனிக்கப் பேசி இரண்டு நபர் வேலையை செய்ய வைப்பார்கள்.உற்றார், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சிதரும்.

  உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகள் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்துவீர்கள். தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். பெண்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சித்தர்களின் ஜீவ சமாதியில் அன்ன தானம் வழங்கவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  தனுசு

  இந்த வார ராசிப்பலன்

  11.7.2022 முதல் 17.7.2022 வரை

  பொருளாதாரத்தில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும் வாரம்.5,12-ம் அதிபதி செவ்வாயால் எதிர்பாராத பண வரவு உண்டாகும்‌. சமூக அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும்.

  குழந்தைகளால் ஏற்பட்ட கவலை குறையும். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். அரசாங்க ஊழியர்களுக்கு புதிய வீடு கட்டகடன் உதவி கிடைக்கும்.வியாபாரிகளின் வருமானம்திருப்திகரமாக இருக்கும்.முதலாளிகளின் பாராட்டுதலால் பணியாளர்கள் பெருமிதம் அடைவார்கள். பெண்கள் குடும்பத்திற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள்.

  பழைய நண்பரை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் உண்டாகும். பெரியவர்களின் ஆசிகள் கிட்டும். தாயாரின் உடல்நலத்தைக் கவனிக்க வேண்டி வரும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். திருமண முயற்சியில்திருப்பம் உண்டாகும் . ஜனவரியில் ஏழரைச் சனி முடிந்தவுடன் நிலையான நிரந்தரமான முன்னேற்றம் ஏற்படும். வியாழக்கிழமை ஜீவ சமாதியில் மகான்களை வழிuடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  தனுசு

  வார ராசி பலன்கள்

  4-7-2022 முதல் 10-7-2022 வரை

  நெருக்கடி நிலை மாறும் வாரம். பாக்கிய அதிபதி சூரியன் ராசியை பார்ப்பதால் தடைபட்ட அனைத்து இன்பங்களும் துளிர் விடும். தடையாக இருந்த ஒரு சில காரியங்கள் தானாக நடைபெறும். திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும். பெண் வழிப் பிரச்சினைகள் அகலும்.

  சிலர் பூர்வீகத்தை விட்டு பிழைப்பிற்காகவெளியேறலாம். புத்திர பாக்கியம் உண்டாகும். பங்கு சந்தை ஆதாயம் மகிழ்விக்கும். மாணவர்களுக்கு நல்ல கல்லூரியில் இணைந்துபடிக்கும் வாய்ப்பு உள்ளது.

  6-ம்மிட சுக்ரனால் இதுவரை எந்த வேலைக்கும் போகாமல் இருந்தவர்கள் கூட கிடைத்த வேலைக்குச் செல்வார்கள். சிலர் குடும்ப உறவுகளுக்காக கடன் பட நேரும். சிலர் ஒரு கடன் வாங்கி இன்னொரு கடனை அடைக்கலாம்.

  ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும்.சம்பந்திகள் சண்டை முடிவிற்கு வரும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் அகலும். ஆன்மீக பயணங்களால் மகிழ்ச்சி உண்டா கும். முருகன் வழிபாடு சிறப்பு.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  தனுசு

  வார ராசி பலன்கள்

  27-6-2022 முதல் 03-7-2022 வரை

  பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் காலம். 5ம் அதிபதி செவ்வாய் 5ல் ஆட்சி பலம் பெற்று ராகுவுடன் கூடுவதால் எல்லா வழிகளிலும் நன்மை கள் கிடைக்கப் போகிறது. சொத்து, சுகம், காரியசித்தி, தடையில்லாத வருமானம் என வாழ்வில் புது விதமான மாற்றங்கள் அதிகரிக்கப்போகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

  வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் பழைய வெளிநாட்டு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். தாய் மாமன் அனுசரணையால் பூர்வீகம் தொடர்பான பல பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாகும்.வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். சிலரின் வாழ்க்கை துணைக்கு அரசு வேலை கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்ததாய் வழி சீதனம் கிடைக்கும். திருமண முயற்சி நிறைவேறும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும்.

  30.6.2022 மாலை 6.23 முதல் 3.7.2022 காலை 6.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொது வாழ்வில் இருப்பவர்கள் கட்சி தொடர்பான வழக்குகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.சனிக்கிழமை முன்னோர்களை வழிபட்டு காகத்திற்கு சாதம் வைக்கவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  தனுசு

  வார ராசி பலன்கள்

  இந்த வாரம் எப்படி 20-6-2022 முதல் 26-6-2022 வரை

  நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய காலம் . 6,11-ம் அதிபதி.சுக்ரன் 6-ல் ஆட்சி பலம் பெற்று 7,10-ம் அதிபதி புதனுடன் சேர்க்கை பெறுவதால் ருண, ரோக சத்ரு ஸ்தானம் வலுப்பெறுகிறது. கடினமான அலுவலக பணிகளை கூட கச்சிதமாக நிறைவானதாக செய்து கொடுப்பீர்கள். ஆனாலும் அதற்கான உரிய அந்தஸ்து மதிப்பை பெறுவதற்காக போராட வேண்டி இருக்கும். இயல்பாகவே பொறுமைசாலியான நீங்கள் . எதையும் பொறுமையாக தீர யோசித்து முடிவுகளை எடுப்பது நல்லது.

  வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றத்திற்கு வாய்ப்பு உள்ளது. சிலர் வீட்டை பழுது பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும்.வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீடு கட்டி குடியேறலாம். சிலர் வாகனத்தை மாற்றலாம். பெண்கள் வீட்டிலும் வேலை பார்க்கும் இடங்களிலும் தானே எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு முடித்து கொடுப்பார்கள்.

  5-ல் ராகு இருப்பதால்தொழில் அல்லது உத்தியோகத்திற்காக குடும்பத்தை பிரிந்து தூர தேச நாடுகளுக்குச் சென்று தனிமையாக சம்பந்தம் இல்லாத நபர்களிடம் வாழ நேரிடும்.பிரதோஷத்தன்று பிரதோஷ வேளையில் லட்சுமி நரசிம்மருக்குமஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  தனுசு

  வார ராசி பலன்கள்

  இந்த வாரம் எப்படி 13-6-2022 முதல் 19-6-2022 வரை

  உங்கள் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் உங்கள் மறைமுக எதிரிகளே காரணமாக அமைவார்கள். உங்களின் முயற்சிக்கு மனைவியும், பிள்ளைகளும் ஆதரவாக இருப்பார்கள். பணியில் இருப்பவர்கள் தேவையான நேரத்தில் வேகமாக செயல்படுவதன் மூலம்உயர் அதிகாரிகளின் பாராட்டு பெறுவீர்கள். ஏழரை சனியின் காலத்தில் நீங்கள் அனுபவித்த துன்பம், துயரத்திற்கும் நிரந்தர தீர்வு ஜனவரி 2023ல் ஏற்படப் போகிறது.

  சனி பகவான் உங்களை விட்டு விலகும் போது நீங்கள் பல வருடங்களாக எதிர்பார்த்த நல்ல மாற்றத்தை தருவார்.பெற்றோர்களின் ஆசிர்வாதம்உங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தரும். பூமி, வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும்.வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும்.மூத்த சகோதர, சகோதரி மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சொத்துக்கள் மூலம் வாடகை வருமானம் வந்து கொண்டே இருக்கும். சில பெண்கள் கருத்தரிப்பார்கள்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  தனுசு

  வார ராசி பலன்கள்

  6.6.2022 முதல் 12.6.2022 வரை

  வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தரும். 7-ம் அதிபதி புதன் 6ல் இருப்பதால் எந்த கூட்டு முயற்சியிலும் ஈடுபடக் கூடாது.

  பார்ட்னர்கள் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள் அல்லது வம்பில் மாட்டி விடலாம். பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பாக்கிய அதிபதி சூரியன் 6-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் தந்தை பூர்வீகச் சொத்து, பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட விசயத்திற்காக கோபத்துடன் மன இறுக்கத்துடன் இருப்பார். தந்தையின் ஆரோக்கியத்திற்காக விட்டுக் கொடுக்க முயற்சிப்பீர்கள். சிலருக்கு பூர்வீகச் சொத்துக்கள் விற்பனையில் கணிசமான லாபம் கிடைக்கும்.

  பெண்களுக்கு கணவரின் புரிதல் மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்பப் பிரச்சினைகளை தம்பதிகள் தங்களுக்குள் பேசி சீராக்குவார்கள். வீட்டில் ஆனந்தமும், மகிழ்ச்சியும் களை கட்டும். உடல்வலி, அலுப்பு போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். பருவ வயதினர் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பிரதோஷத்தன்று சிவனுக்கு பஞ்சாமிர்தம் அபிசேகம் செய்து வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  தனுசு

  வார ராசி பலன்கள்

  30.5.22 முதல் 5.6.22 வரை

  விவேகத்துடன் செயல்பட்டு விரும்பிய இலக்கை அடையும் வாரம். ராசி அதிபதி குரு 5-ம் அதிபதியுடன் சுக ஸ்தானத்தில் நிற்பதால் விவசாயிகள் ஆதாயம் அடைவார்கள். நிலத்தகராறு, வாய்கால் வரப்புத் தகராறு மற்றும் எல்லைத் தகராறுகள் முடிவிற்கு வரும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கிய பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். ஏழரைச் சனியின் தாக்கத்தால் பிரிந்து வாழ்ந்த தம்பதிகளுக்கு சேர்ந்து வாழும் விருப்பம் அதிகரிக்கும்.

  தொழிலில் எப்பொழுது விடிவு காலம் வரும் என்று புலம்பி தவித்தவர்களுக்கு தொழில் அபிவிருத்தி உண்டாகும். எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைக்கும். உத்தியோ கத்தில் கவுரவமான சூழல் உண்டாகும். மன ரீதியாக, உடல் ரீதியாக அனுபவித்த வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும்.

  5ல் சுக்ரன் ராகு சேர்க்கை இருப்பதால் பருவ வயது பிள்ளைகள் பெற்றோர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.3.6.2022 பகல் 12.20 முதல் 5.6.2022 நள்ளிரவு 12. 24 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி இறங்கும் காரியங்கள் தோல்வியைத் தரும். இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். வெள்ளிக்கிழமை ஸ்ரீ வர லட்சுமியை வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×