என் மலர்
தனுசு - வார பலன்கள்
தனுசு
வார ராசிபலன் 7.9.2025 முதல் 13.9.2025 வரை
7.9.2025 முதல் 13.9.2025 வரை
புதிய முயற்சிகளால் வருமானம் அதிகரிக்கும் வாரம். ராசிக்கு 3-ம்மிடமான வெற்றி ஸ்தானம் மற்றும் சகாய ஸ்தானத்தில் சந்திரன், ராகு சேர்க்கை ஏற்பட்டு சந்திர கிரகணம் நடக்க உள்ளது. இதற்கு குருப்பார்வை இருப்பதால் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். அனைத்து காரியங்களுக்கும் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும்.
விட்டுப் பிரிந்த உறவுகள் ஒட்டி உறவாடுவார்கள். அக்கம் பக்கம் உள்ளவர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். துடிப்புடன் செயல்பட்டு தொழிலை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வீர்கள். எதிர்பார்த்த இடத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும்.
பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும்.
அரசுத் துறை வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் வெற்றி உறுதி. மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு அழகிய ஆடை ஆபரணங்கள் சேர்க்கை மன மகிழ்ச்சி கூட்டும். பல புண்ணியத் ஸ்தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். தினமும் குரு கவசம் படித்து தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 31.8.2025 முதல் 6.9.2025 வரை
31.8.2025 முதல் 6.9.2025 வரை
பாக்கிய பலன்கள் அதிகரிக்க வேண்டிய வாரம். ராசிக்கு 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் புதன் கேது சேர்க்கை ஏற்படுகிறது. 7.9.2025 அன்று சந்திர கிரகணம் ஏற்படும். சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்சினைகள் தோன்றும்.உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்து செயல்படுவது நல்லது.
கிரக நிலைகள் சற்று சாதகமற்று இருந்தாலும் ஒரு கதவை அடைத்தாலும் மறுகதவு திறந்து விடுபவர்கள் தான் நவகிர கங்கள். எனவே நம்பிக்கை மிக முக்கியம். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு ஞான தன்மை அதிகரிக்கும். சுய ஜாதக ரீதியாக கடுமையான பித்ரு, மாத்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய பரிகார சாந்தி பூஜைகள் செய்தால் ஜாதக ரீதியான பாதிப்புகள் அகலும்.
தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் நடைபெறும். திருமணம் குழந்தை பேறு தொழில் உத்தியோ கரீதியான இடர்கள் அகலும்.பஞ்ச கவ்யம் எனும் பசுஞ்சாணம், கோமியம், நெய், தயிர், பால், இவைகளைக் கலந்து அபிஷேக ஆராதனை செய்து நந்தி. சிவனை பூஜித்தால் தடைப்பட்ட அனைத்து இன்பங்களும் தேடி வரும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 24.8.2025 முதல் 30.8.2025 வரை
நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியைத் தரும் வாரம். பாக்கிய அதிபதி சூரியன் ஆட்சி. உங்களின் கற்பனைகள் கனவுகள் நனவாகும். இளமையாக பரபரப்பாகவும், சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்படும்.இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டுப் பெறப் போகிறீர்கள். குல தெய்வம் மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சொத்துக்கள், அழகு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சுப விசே ஷங்கள் நடக்கும். பங்குச் சந்தை ஆதாயம் இரட்டிப்பாகும்.அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும்.தொழி லில் சீரான முன்னேற்றம் இருக்கும். ஊர் மாற்றம், நாடு மாற்றம் வரலாம்.
தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமண வாய்ப்பு கூடி வரும். சிலருக்கு மறு விவாகம் நடக்கும். அரசியல் பிரமுகர்களின் பொறுப்புகள் கூடும்.மாணவர்கள் அக்கரையாக படிப்பார்கள். விநாயகர் சதுர்த்தி அன்று வெள்ளருக்கு மாலை அணிவித்து விநாய கரை வழிபடவும்.
தனுசு
வார ராசிபலன் 17.8.2025 முதல் 23.8.2025 வரை
17.8.2025 முதல் 23.8.2025 வரை
அனைத்து விதமான நற்பலன்களும் நடக்கும் வாரம். 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் ஆட்சி பலம் பெறுகிறார். பலருக்கு புதிய தொழில் எண்ணம் வரும். வருமானம் பல மடங்குபெருகும். புதிய தொழில் துவங்கும் விருப்பம் உள்ளவர்கள் கணிதம் சார்ந்த தொழில்கள், வங்கி தொழில், ஜோதிடம், காலி நில விற்பனை, நடிப்பு தொழில், புத்தக விற்பனை, வெளிநாட்டு பொருள் இறக்கு மதி, கமிஷன் தொழில் செய்யலாம்.
வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். சமூக நலச் சங்கங்களில் பதவி கிடைக்கும். பல வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமான திருப்பம் ஏற்படும். மறு விவாக முயற்சி வெற்றி தரும். வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். தந்தையுடன் நல்லுறவு ஏற்படும்.
நண்பர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். 20.8.2025 அன்று மாலை 6.35 முதல் 22.8.2025 அன்று காலை 12.16 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிர்ஷ்டத்தை நம்பி கால விரயம் செய்வீர்கள். உடல் நலமும் மனநலமும் பாதிக்கப்படலாம். பண விசயத்தில் யாரையும் நம்பாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும். வியாழக்கிழமை ஸ்ரீ சாய் பாபாவை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 10.8.2025 முதல் 16.8.2025 வரை
10.8.2025 முதல் 16.8.2025 வரை
அரசு வேலை முயற்சி வெற்றி தரும் வாரம். 5ம் அதிபதி செவ்வாய் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சந்திரிக்கிறார். இது மிகவும் அதிர்ஷ்டமான அமைப்பு. அரசாங்க வேலைக்கான முயற்சியில் வெற்றி உண்டு. அரசுப் பணியில் இடைக்கால பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் வந்து சேர உத்தரவு வரும். குடும்பத்தில் நிம்மதி கூடும்.
தன யோகம் சிறப்பாக அமையும். வீடு, வாகன யோகம் உண்டாகும். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். கூட்டுத் தொழிலில் பலன் உண்டு. சமுதாய அங்கீகாரம் அதிகரிக்கும். மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வமும், அக்கறையும் ஏற்படும். கடந்த காலத்தில் நடந்த கருத்து வேறுபாடு மற்றும் மனக் கவலைகள் மறைந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள்.
குலதெய்வ அருள் கிட்டும். தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மேற்படிப்பிற்கான முயற்சி கை கூடும். காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு அவல் படைத்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 3.8.2025 முதல் 9.8.2025 வரை
3.8.2025 முதல் 9.8.2025 வரை
திருமணத்தடை அகலும் வாரம். ராசிக்கு குரு சுக்கிரன் செவ்வாய் சனி பார்வை. அர்த்தாஷ்டம சனியால் திருமணம் தடைபடாது. கோச்சாரம் சாதகமாக உள்ளது. அதிகப்படியான திருமணம் நிச்சயமாகும். பிறருக்கு நன்மை மனப்பான்மை உண்டாகும். மனதிற்கு நிம்மதியும் தன் நம்பிக்கையும் தரும் நிகழ்வுகள் நடக்கும். தைரியம் மிகுதியாக இருக்கும்.
ஞாபக சக்தி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும். தொழில் கடன்கள் குறையத் துவங்கும். நீண்டநாளாக நிறைவேற்ற முடியாமல் தடைபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி படிக்க நல் வாய்ப்பு உண்டாகும்.
புத்திர பிராப்த்தம் ஏற்படும். சிலர் விருப்ப ஓய்வு பெறலாம். குடும்ப சூழல் காரணமாக ஆரோக்கியம் காரணமாக கல்வியில் ஏற்பட்ட தடைகள் பாதிப்புகள் அகலும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். தேவையற்ற வம்பு, வழக்குகளை தவிர்க்கவும். எல்லோரையும் அனுசரித்து செல்ல வேண்டும். வரலட்சுமி நோன்பு நாளில் மஞ்சள் அபிஷேகம் செய்து மகாலட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 27.7.2025 முதல் 2.8.2025 வரை
27.7.2025 முதல் 2.8.2025 வரை
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் வாரம். ராசிக்கு சனி,செவ்வாய் மற்றும் குருவின் பார்வை உள்ளது.மன அமைதி குறையும். உடல் அசதி இருக்கும். ஓய்வு நேரம் குறையும். அதிகப்படியான புதிய தொழில் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. சிலர் சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறலாம். கண், காது, மூக்கு மற்றும் சுவாச உறுப்புகள் தொடர்பான பிரச்சினைகள் மாற்று மருத்துவத்தில் குணமாகும்.
செயற்கை கருத்தரிப்பு முறையை நாடுபவர்கள் சுய ஜாதகத்தின் படி செயல்படவும். பணவரவுகளில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் சமாளிக்க முடியும். எதிர்பாராத இடமாற்றத்தால் அதிக அலைச்சல் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு கட்சிப் பணியினால் வீண் விரயங்கள், மன உளைச்சல் ஏற்படும்.
எல்லா வசதிகளும் இன்பமும் இருந்தாலும் ஏதாவது மனக்குறை உங்களை வாட்டும். திருமணம் மற்றும் மேற்படிப்பு முயற்சிகள் சித்திக்கும். ஆடிப்பூர நன்னாளில் சர்க்கரை பொங்கல் படைத்து மகா லட்சுமியை வழிபட செல்வம் பெருகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 20.7.2025 முதல் 26.7.2025 வரை
20.7.2025 முதல் 26.7.2025 வரை
இன்னல்கள் முடிவுக்கு வரும் வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு சூரியன், புதன் பார்வை. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமையும், உயர்வும் ஏற்படும். தாய்வழி உறவுகளின் உதவி கிடைக்கும். விருந்தினர் வருகையால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு, அவர்களின் திறமைக்கு வேலை கிடைக்கும். கடன் தொல்லை அகலும். விற்பனையாகாமல் கிடந்த சொத்துக்கள் தற்போது விற்று முழுத்தொகையும் கைக்கு வந்து சேரும். சிலர் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு செல்லும் முயற்சியில் ஈடுபடுவார்கள். பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆர்வம் கூடும்.
திருமணம், புத்திர பாக்கியம் போன்றவற்றில் இருந்த பாதிப்புகள் தடைகள் நீங்கும். 24.7.2025 காலை 10.50 மணி முதல் 26.7.2025 அன்று மதியம் 3.52 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் உயர் அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு வேறு இடத்துக்கு வேலை மாற்ற முற்படுவார்கள்.
ஆடி வெள்ளிக்கிழமை மரிக் கொழுந்து சாற்றி அம்மனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 13.7.2025 முதல் 19.7.2025 வரை
13.7.2025 முதல் 19.7.2025 வரை
மனோதைரியம் அதிகரிக்கும் வாரம். ராசியை குரு, சனி பார்ப்பதால் மனோதைரியம் அதிகரிக்கும். எதையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். அர்தாஷ்டமச் சனியையும் மீறி தடைபட்ட நல்ல விசயங்கள் தாமாகவே நடக்கும். வீடு கட்டும் பணி துரிதமாகும். பணம் வரும் வழியும் தெரியாது போகும் வழியும் தெரியாது. தடைபடாத பண வரவு இருந்தாலும் சுபசெலவுகள் மிகுதியாகும்.
திருட்டுப் போன பொருட்கள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு கல்வியில் நிலவிய தடைகள் நீங்கும். சகோதர, சகோதரிகளுடன் நிலவிய கருத்து வேறுபாடு குறையும். சிலர் மன நிம்மதிக்காக வீடு மாறுவார்கள். நோய் தாக்கம் குறையும். எனினும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு எதிர்பார்க்கலாம்.
மாணவர்களுக்கு போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். அடுத்தவர்க ளுக்கு ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்க வும். சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம். சந்ததி விருத்தி ஏற்படும். நிம்மதியான உறக்கம் உண்டாகும். தினமும் குரு கவசம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 6.7.2025 முதல் 12.7.2025 வரை
6.7.2025 முதல் 12.7.2025 வரை
மாற்றங்களால் மனம் மகிழும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் ஏற்படுத்தும். எந்த ஒரு செயலை முடிப்பதற்கும் தாய்-தந்தையின் ஆதரவு கிடைக்கும். தொழில் தொடர்பாக திட்டமிட்ட அனைத்து செயல்பாடுகள் சிறப்பாக நிறைவேறும். இந்த வாரம் செல்லும் நேர்முகத் தேர்வில் வெற்றியும், மன நிறைவான வேலையும் கிடைக்கும்.
வெளிநாட்டு குடியுரிமை, வெளிநாட்டு வேலை சார்ந்த அனைத்து இன்னல்களும் அகலும். வரவேண்டிய பணம் விரைவில் வசூலாக வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல்களில் இருந்த சிக்கல்கள் விலகும். ஆடம்பர விருந்து, உபசாரங்களில் கலந்து மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக நினைத்த சில ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.
நல்ல தகவல்கள் வீடு தேடி வரும். நல்ல ஆடம்பரம், வசதி நிறைந்த வாழ்க்கைத் துணை அமையும். சுபமங்கள நிகழ்விற்கு தாராளமான பணச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தார் ஒத்துழைப்பால் உள்ளம் மகிழும். எதிர் பாலினத்தவரிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும். வைத்தியம் பலன் தரும். பவுர்ணமி அன்று ஆன்மீக குருமார்களின் ஆசி பெறவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 29.6.2025 முதல் 5.7.2025 வரை
29.6.2025 முதல் 5.7.2025 வரை
கடனை கட்டுக்குள் வைக்க வேண்டிய வாரம். 6ம் அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுகிறார். கடன், நோய், உத்தியோகம் சார்ந்த பாதிப்புகள் வரலாம். சோம்பல், மறதி அதிகமாகும். அடுத்தவர் பிரச்சினையில் தலையிடாதீர்கள். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியம். எனினும் ராசியை சூரியனும், குருவும் பார்ப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம்.
அரசாங்க ஊழியர்களுக்கு வேலை பளு கூடும். சிலரின் வாழ்க்கைத் துணைக்கு விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரலாம். பெண்களுக்கு தாய் வழிப் பாட்டி வீட்டு பழங்கால பொருட்கள் மற்றும் நகைகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு எதிர்பாராத நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடைகள் வளர்ப்பின் மூலம் நல்ல வருமானம் உண்டாகும்.
இது அர்த்தாஷ்டம சனியின் காலம் என்பதால் அதிக முதலீட்டில் தொழிலை அபிவிருத்தி செய்வதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். எந்தவகையில் பார்த்தாலும் சாதகமான பலன்கள் பெருமளவு இருப்பதால் சக்ரத்தாழ்வாரை வழிபட எதிர்வரும் சங்கடங்கள் விலகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 22.6.2025 முதல் 28.6.2025 வரை
22.6.2025 முதல் 28.6.2025 வரை
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வாரம். ராசியை ராசி அதிபதி குருவும் பாக்கிய அதிபதி சூரியனும், சனியும் பார்க்கிறார்கள். இது தனுசு ராசிக்கு பாக்கிய பலனை அதிகரிக்கும் அமைப்பாகும். ஆன்ம பலம் பெருகி சுறுசுறுப்பாக தைரியத்துடன் இருப்பார்கள். கடந்த காலத்தில் நிலவிய தடைகள் நீங்கும். புதிய வேலைக்காக எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சொந்த தொழில் பற்றிய எண்ணம் அதிகமாகும். சிலருக்கு உத்தியோக மாற்ற சிந்தனை அதிகரிக்கும். பெரிய பதவிகளும் கிடைக்க கூடிய சாத்தியக்கூறும் உள்ளது. வெளிநாடு சென்றவர்கள் சொந்த மண்ணிற்கு திரும்பும் சந்தர்ப்பம் உருவாகும். நீண்ட கால பரம்பரை நோய்க்கு மாற்று மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முயல்வீர்கள்.
உயில் எழுத ஏற்ற காலம். கைமறதியாக வைத்த ஆவணங்கள் கிடைக்கும். 27.6.2025 அன்று காலை 1.40 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் கவனக் குறைவான செயல்களால் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படலாம். அரசு அதிகாரிகளால் சிறு பிரச்சினை ஏற்படும். குலதெய்வத்தை அமாவாசையன்று வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






