என் மலர்tooltip icon

    தனுசு - வார பலன்கள்

    தனுசு

    வார ராசிபலன் 15.6.2025 முதல் 21.6.2025 வரை

    15.6.2025 முதல் 21.6.2025 வரை

    எதிர்பார்த்த நல்ல திருப்பங்கள் ஏற்படும் வாரம். ராசியை பார்க்கும் சூரியன், புதன், குருவால் புத ஆதித்ய யோகம் மற்றும் சிவராஜ யோகம் ஏற்பட்டு உள்ளது. கடந்த கால மகிழ்ச்சியான நினைவுகளில் மனம் லயிக்கும். குடும்ப உறவுகளிடம் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் தீரும். திட்டமிடுதலில் சிறு குறைபாடு நிலவினாலும் குடும்பப் பெரியவரின் அறிவுரை பயனுள்ளதாக, பக்கபலமாக இருக்கும்.

    உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் வரும். தாமரை இலையும், தண்ணீருமாக வாழ்ந்த தம்பதிகள் கூடி வாழ்வார்கள். வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். மூத்த சகோதர, சகோதரி மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    எதிர்பாராத சில செலவுகளை சமாளிக்க முடியும். பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சொத்துச் சேர்க்கை உண்டாகும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த செயலுக்கு சாதகமான பலன் உண்டு. தம்பதிகள் விட்டுக் கொடுத்து செல்வது முக்கியம். தினமும் ஆதித்ய இருதயம் கேட்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசிபலன் 08.06.2025 முதல் 14.06.2025 வரை

    08.06.2025 முதல் 14.06.2025 வரை

    மனதிற்கினிய சம்பவங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி குரு 7, 10-ம் அதிபதி புதனுடன் சேர்க்கை. புதிய தொழில் கூட்டாளிகளை இணைக்கும் முயற்சி பலிக்கும். குடும்ப உறவுகளால் ஏற்பட்ட துயரங்கள் அகலும். புதிய நட்புகள் கிடைக்கும். நிச்சயித்த திருமணம் நல்ல முறையில் நடக்கும். எதிரிகள் விலகுவார்கள்.

    தொழில் வளர்ச்சிக்கு அனுபவஸ்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பேச்சுத் திறமையால் விரும்பிய மாற்றத்தை அடைவீர்கள். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் மீது பற்றும் பாசமும் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பெண்களுக்கு வாழ்க்கைத்துணைவர் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். நிலம் வாங்கும் முயற்சிகள் கை கூடும்.

    அரசினால் வருமானம் உண்டு. வெளியூரில் வசித்தவர்கள் மீண்டும் பூர்வீகத்திற்கு வந்து வருமானம் ஈட்டி சொந்த பந்தங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். கடன் தொல்லைகள் குறையும். இனிமையான இல்லறம் அமையும். வேலையில் சிறிய மன அழுத்தம் மற்றும் டென்சன் ஏற்படலாம். பிறர் சொல்வதைக் கேட்டு மனதை குழப்பாமல் இருப்பது நல்லது. நவகிரக குரு பகவானை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசிபலன் 01.06.2025 முதல் 07.06.2025 வரை

    01.06.2025 முதல் 07.06.2025 வரை

    வெற்றிகரமான வாரம். ராசிக்கு சனி, குரு பார்வை. உங்கள் திட்டங்களிலும், செயல்களிலும் நிலவிய தடை தாமதங்கள் விலகும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். அபாரமான சக்தியுடன் இருப்பீர்கள். கொடுத்த வாக்கு மிக முக்கியம் என உணர்ந்து செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு வீர தீரச் செயல்களில் வெற்றி உண்டு.

    நிலம், வீடு, வாகனம் வாங்குவதில் சுமூகநிலை நீடிக்கும். சில விரயங்கள் ஏற்பட்டாலும் இது நல்ல எதிர்காலத்திற்கான அஸ்திவாரமாக அமையும். உள்நாட்டு பணம், வெளிநாட்டு பணம் என உங்கள் கையில் தாராளமாக பணம் புழங்கும். உயர் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என அனைத்தும் சாதமாக உள்ளது.

    வியாபாரிகளுக்கு அரசின் மானியம் கிடைக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். தந்தையின் அன்பும், ஆசிர்வாதமும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். தம்பதிகள் மிகவும் இன்பமாக பொழுதை செலவிடுவார்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட சந்தர்ப்பம் கிடைக்கும்.1.6.2025 அன்று இரவு 9.36 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. பிறர் விசயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். ஸ்ரீ சந்தான லட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசிபலன் 25.05.2025 முதல் 31.05.2025 வரை

    25.05.2025 முதல் 31.05.2025 வரை

    நிம்மதியான வாரம். ராசிக்கு குரு பார்வை. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் சஞ்சாரம் செய்கிறார். விவேகத்துடன் செயல்பட்டு விரும்பிய இலக்கை அடைவார்கள். சிலர் வேலையை மாற்றுவார்கள். உங்களுக்கு வர வேண்டிய பதவிகள், சலுகைகள், பெயர், புகழ் அனைத்தும் தேடி வரும். வெளிநாட்டு வேலை முயற்சி சித்திக்கும்.

    அரசு பணியாளார்கள் வீண் பழியில் இருந்து விடுபடுவார்கள். பழைய சொத்துக்களில் இருந்து வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நிலத்தகராறு, வாய்க்கால் வரப்புத் தகராறு மற்றும் எல்லைத் தகராறுகள் முடிவிற்கு வரும். அர்த்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் பொறுமையாக செயல்படுவது அவசியம். சிலர் ஒப்பந்த வேலைக்காக வெளியூர் வெளிமாநிலம் செல்லலாம்.

    30.5.2025 பகல் 3.42 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிக்கிறது. பருவ வயது பிள்ளைகள் பெற்றோர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். எதிர் பாலினத்தவரால் நிம்மதி குறையும். வயோதிகர்களுக்கு ஞாபக மறதி அதிகரிக்கும். அமாவாசையன்று கொண்டைக்கடலை தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசிபலன் 18.05.2025 முதல் 24.05.2025 வரை

    18.05.2025 முதல் 24.05.2025 வரை

    வெற்றிகரமான வாரம். ராசிக்கு குரு மற்றும் சனி பார்வை. ஆயுள், ஆரோக்கியம் மகிழ்ச்சியைத் தரும். ஒரு மனிதனுக்கு பொற்காலம் என்று சொல்லக் கூடிய நேரம் கோட்சாரத்தில் 3,6,11ம்மிடங்களில் கிரகங்கள் சஞ்சாரம் செய்யும் காலமாகும். இப்பொழுது அந்த பொற்காலம் தனுசு ராசிக்கு வந்துவிட்டது. 3ம் மிடத்திற்கு ராகு வரும் இந்த காலத்தில் உங்கள் அம்மா, அப்பாவின் ஆதரவை பெற்று மூத்த சகோதர, சகோதரிகளின் பூர்வீக சொத்து பங்கையும் சேர்த்து அடைவீர்கள்.

    ஒரு சிலர் அம்மா, அப்பாவின் சம்மதம் இல்லாமல் பூர்வீகச் சொத்தை அடமானம் வைத்து அதனை தொழிலுக்கு பயன்படுத்தி அதன் மூலமும் வருமானம் பெறுவார்கள். வெகு நாட்களாக திட்டமிட்ட வெளிநாட்டுப் பயணம் இப்பொழுது கைகொடுக்கும்.

    மேலும் குழந்தைகளுக்காக அதிக விரயச் செலவு செய்ய நேரும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அகலும். தம்பதிகள் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். திருமணத் தடை அகலும். ஸ்ரீ தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசிபலன் 11.5.2025 முதல் 17.5.2025 வரை

    11.5.2025 முதல் 17.5.2025 வரை

    முயற்சிகள், எண்ணங்கள் பலிதமாகும் வாரம். ராசிக்கு குரு பார்வை. விரைவில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கான நல்ல பலன் கிடைக்கப் போகிறது. புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். தொழிலில் பிரமாண்ட வளர்ச்சி ஏற்படும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் தனித்திறமை மிளிரும். நம்பிக்கையான, விசுவாசமான வேலை ஆட்கள் கிடைப்பார்கள்.

    பாகப் பிரிவினையால் ஏற்பட்ட மன பேதம் சீராகும். ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். சிலர் எழுதிய உயில், ஆவணங்களில் திருத்தம் செய்வார்கள். இளைய சகோதரருக்கு திருமணம் நடக்கும். அதிர்ஷ்ட பொருள், பணம், உயில் சொத்து கிடைக்கும். சிலர் மன அமைதி மற்றும் நிம்மதிக்காக விடுமுறையில் தீர்த்த யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள்.

    சிறிய வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் வசதியான வீட்டிற்கு செல்லலாம். வீடு வாகன யோகம் சிறப்பாக அமையும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும். சிலருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும். தம்பதிகளுக்குள் புரிதல் கூடும். உடல் நலம் சீராகி வைத்தியச் செலவு குறையும். சித்ரா பவுர்ணமி அன்று அந்தணர்களுக்கு தான, தர்மம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசிபலன் 4.5.2025 முதல் 10.5.2025 வரை

    4.5.2025 முதல் 10.5.2025 வரை

    முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் புதன் சேர்க்கை. தடைபட்ட திருமணம் நடந்து முடியும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. சிலருக்கு வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். தந்தைவழி சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

    மூளை பலமே மூலதனம் என்று திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. வெளியூர், வெளிநாட்டு வியாபாரத் தொழில் சம்பந்தமான பிரச்சினைகள் அகலும். விரும்பிய கடன் தொகை கிடைக்கும். ஆரோக்கிய கேடு சீராகும். 5.5.2025 அன்று மதியம் 2.01 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மேலதிகாரிகள் உங்கள் பணியில் ஏதாவது குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். உணர்ச்சி வசப்படாமல் உங்கள் பொறுப்புகள் மற்றும் கடமைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். ஸ்ரீ தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசிபலன் 27.4.2025 முதல் 03.5.2025 வரை

    27.4.2025 முதல் 03.5.2025 வரை

    தடை, தாமதங்கள் அகலும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பாக்கிய அதிபதி சூரியன் உச்சம் அடைவதால் பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாக்கிய ஸ்தானமும் பலம் பெறுகிறது. மகன், மகளின் திருமண முயற்சி கைகூடும். வாழ்க்கை துணை இணக்கமாக இருப்பார். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். இதுவரை பங்கு சந்தை பற்றிய ஆர்வம் இல்லாதவர்களுக்கு கூட பங்கு வர்த்தகத்தின் மேல் ஆர்வம் ஏற்படும்.

    சிறிய பங்குச் சந்தை முதலீட்டில் பெரிய லாபம் கிடைக்கும். புதிய அசையும், அசையாச் சொத்துக்கள் உருவாகும். உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் ஏற்படப் போகிறது. வெளிநாட்டு வேலை முயற்சி கைகூடும். துக்கம் அகலும். லவுகீக வாழ்வில் உள்ள அனைத்து இன்பங்களையும் நுகரும் ஆர்வம் அதிகரிக்கும்.

    தந்தை வழி உறவுகளுடன் அன்னியோன்யம் கூடும். பல்வேறு விதமான வளமான பலன்கள் நடக்கும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். 3.5.2025 அன்று காலை 6.37 மணிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கடுமையான அலைச்சல் மிகுந்த பயணம் செய்ய நேரும். அதனால் டென்ஷன், கோபம் உருவாகும். ஸ்ரீ ஆஞ்சநேயர் மூல மந்திரம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை

    20.4.2025 முதல் 26.4.2025 வரை

    சகாயங்கள் நிறைந்த வாரம். பாக்கிய அதிபதி சூரியன் உச்சம் பெறுவதால் இளமையாக அழகாக மாறுவீர்கள். வக்கீல்கள், ஆடிட்டர்கள், நீதித் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான வருமானம் உண்டு. தற்காலிகப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரமாகும்.

    சிலர் தொழிலை மாற்றுவார்கள் அல்லது தொழில் முறையை மாற்றி புதுமையை புகுத்துவார்கள். முதலீட்டாளர்களுக்கு நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். தொழில் அதிபர்களுக்கு அரசின் ஒப்பந்தம் கிடைக்கும்.கடன் தொல்லை குறையும். உறவுகளால் ஏற்பட்ட மன பாரம் குறையும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.கொடுத்த கடன்கள் வசூலாகும்.ராகு குறுக்குவழி சிந்தனையை மிகைப்படுத்துவார்.

    அர்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் அதிர்ஷ்டம் மற்றும் குறுக்கு வழியை நாடக்கூடாது. சிலர் உயர் கல்விக்காக அல்லது வீடு கட்ட கடன் பெறலாம். சிலர் வெளிநாட்டிற்கு பிழைப்பிற்காக இடம் பெயருவார்கள். வாடகை வீட்டுத் தொல்லை அகலும். பெண்கள், நகைச் சீட்டு, ஏலச் சீட்டு என பணத்தை பெருக்குவார்கள். சப்த கன்னிகளை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசிபலன் 13.4.2025 முதல் 19.4.2025 வரை

    13.4.2025 முதல் 19.4.2025 வரை

    புத்தி சாதுர்யத்துடன் செயல்பட வேண்டிய காலம். ராசிக்கு சனியின் 10-ம் பார்வை உள்ளதால் பூர்வீகச் சொத்துக்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். குடும்ப நலனுக்காக இரவு பகல் பாராது உழைப்பீர்கள். சிலர் கடன் பெற்று புதிய வாகனம் சொத்துக்கள், வாங்குவார்கள். சிலர் செல்வாக்கை அதிகரிக்க கடன் வாங்கி செலவு செய்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்பு தோன்றினாலும் சமாளித்து விடுவீர்கள். ஆன்லைன் வர்த்தகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். ஒரு சிலர் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்வார்கள். போட்டி பந்தயங்களில் அமோகமாக வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஏற்றமும், முன்னேற்றமும் இருக்கும். திருமணத் தடை அகலும். வரவு செலவு சீராக இருக்கும். பிள்ளைகளின் திருமணத்திற்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்கும். பல வருடங்களாக விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்கும். ஆரோக்கிய குறைபாட்டிற்கு உரிய மருத்துவரை அணுகினால் விரைவில் நிவாரணம் பெற முடியும். வசதியற்ற பிள்ளைகளின் படிப்பிற்கு உதவவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசிபலன் 06.4.2025 முதல் 12.4.2025 வரை

    06.4.2025 முதல் 12.4.2025 வரை

    கவனமாக செயல்பட வேண்டிய வாரம்.வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் வாரம். பாகப் பிரிவினை சுமூகமாக முடியும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். திருமண முயற்சி கைகூடும். அரசியல்வாதிகளுக்கு கூடுதல் நன்மைகள் உண்டாகும். நீண்ட நாளாக நினைத்திருந்த சுற்றுலா தலங்களுக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் சென்று மகிழ்வீர்கள். அந்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் குடும்ப நல விரும்பிகளின் ஆலோசனையின் படி செயல்படுவது நல்லது.

    வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். நிலுவையில் உள்ள சம்பள பாக்கி கைக்கு வரும். சிலருக்கு இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். பணப் புழக்கம் மிகுதியாக இருக்கும். கடன் தொல்லை குறையும். 8.4.2025 அன்று காலை 7.54 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் இனம் புரியாத கவலை குழப்பம் உண்டாகலாம். எதிலும் கவனமாக இருப்பதுடன் யாரையும் நம்பக் கூடாது. அனாவசியச் செலவுகளைக் குறைப்பது நல்லது. சுய வைத்தியத்தை தவிர்க்கவும். சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசிபலன் 30.3.2025 முதல் 5.4.2025 வரை

    30.3.2025 முதல் 5.4.2025 வரை

    தடைகள் அகலும் வாரம். தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் நீண்ட காலமாக தடைபட்ட முக்கிய பணிகளை இந்த காலகட்டத்தில் விரைந்து முடிப்பது நல்லது.உங்களின் நேர்மறையான அணுகுமுறை சுற்றத்தாரிடம் நன்மை பெற்றுத் தரும். அலுவலகத்தில் சாதகமான மாற்றங்கள் உண்டாகும். தொழிலில் நிலவிய பிரச்சினைகள் அகலும்.தாய் வழி உறவனர்களால் சில மனம் மகிழும் நல்ல சம்பவங்கள் நிகழும். பொருளாதாரப் பற்றாக்குறைகள் விலகும்.

    கொடுக்கல் வாங்கல் சுலபமாகும். பணப் பற்றாக்குறையால் நின்று போன வீடு கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து முடியும். புதிய பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சி தரும். பிள்ளை களால் மன நிம்மதி உண்டாகும். தற்காலிகப் பணியா ளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். பெண்களுக்கு புகுந்த வீட்டார் மற்றும் கணவரின் ஒத்துழைப்பால் நிம்மதி அதிகரிக்கும். தான தர்மங்கள், முன்னோர் வழிபாடு செய்து பாக்கிய பலனை அதிக ரிப்பீர்கள். தடைபட்ட தெய்வ பிரார்த்த னைகளை நிறை வேற்ற ஏற்ற காலம்.மேலும் பல பாக்கியங்களை அடைய மகாலட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×