என் மலர்
தனுசு - வார பலன்கள்
தனுசு
30.3.2025 முதல் 05.4.2025 வரை
தடைகள் அகலும் வாரம். தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு குருப்பார்வை இருப்பதால் நீண்ட காலமாக தடைபட்ட முக்கிய பணிகளை இந்த காலகட்டத்தில் விரைந்து முடிப்பது நல்லது. உங்களின் நேர்மறையான அணுகுமுறை சுற்றத்தாரிடம் நன்மை பெற்றுத் தரும். அலுவலகத்தில் சாதகமான மாற்றங்கள் உண்டாகும். தொழிலில் நிலவிய பிரச்சனைகள் அகலும்.
தாய் வழி உறவனர்களால் சில மனம் மகிழும் நல்ல சம்பவங்கள் நிகழும். பொருளாதாரப் பற்றாக்குறைகள் விலகும். கொடுக்கல் வாங்கல் சுலபமாகும். பணப் பற்றாக்குறையால் நின்று போன வீடு கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து முடியும். புதிய பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் மன நிம்மதி உண்டாகும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.
பெண்களுக்கு புகுந்த வீட்டார் மற்றும் கணவரின் ஒத்துழைப்பால் நிம்மதி அதிகரிக்கும். தான தர்மங்கள், முன்னோர் வழிபாடு செய்து பாக்கிய பலனை அதிகரிப்பீர்கள். தடைபட்ட தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம். மேலும் பல பாக்கியங்களை அடைய மகாலட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 23.3.2025 முதல் 29.3.2025 வரை
23.3.2025 முதல் 29.3.2025 வரை
வெற்றிகரமான வாரம். அர்த்தாஷ்டமச் சனி ஆரம்பிக்கிறது என்று தனுசு ராசியினர் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. மே மாதம் முதல் ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் தெய்வ சக்தி துணை வரும். சுறுசுறுப்பும், உற்சாகமும் நிறைந்து காணப்படும். தொட்டது துலங்கும். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை, தைரியமும் மேலோங்கும். நீண்ட காலமாக அனுபவித்து வந்த டென்சன், மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வீடு, நிலம் இவற்றில் நிலவிய பிரச்சினைகள் விலகி சுமூகமான தீர்வு ஏற்படும். சுய கவுரவம், மரியாதை காப்பாற்றப்படும். வெளிநாட்டு வேலை மற்றும் பயணம் திட்டமிட்டபடி நடக்கும்.குடும்ப உறவுகளிடையே புரிதல் உண்டாகும். புதிய தொழில் கூட்டாளி சேர்க்கை மற்றும் ஒப்பந்தங்களில் கவனம் தேவை. தொழிலால் ஏற்பட்ட வராக் கடன்கள் வசூலாகும்.பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுக்கும் முயற்சிகள் நிறைவேறும். அமாவாசையன்று குடும்ப பெரியோர்களின் ஆசிகள் பெறவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 16.3.2025 முதல் 22.3.2025 வரை
16.3.2025 முதல் 22.3.2025 வரை
திருமணத் தடை அகலும் வாரம். ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாயின் பார்வை உள்ளது. குருவும் சுக்ரனும் ராஜயோகத்தை தரப்போவதால் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். அடமானச் சொத்துக்கள் நகைகளை மீட்கும் வாய்ப்புகள் உள்ளது. பாகப் பிரிவினை தொடர்பாக தந்தை மற்றும் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் சிறு மன பிணக்கு ஏற்படலாம். எதிரிகள் தொந்தரவு நீங்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
தொழிலில் செய்த முதலீடு பல மடங்கு லாபத்தைத் தரும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். கோட்சார செவ்வாயால் தடைபட்ட திருமணம் கைகூடி வரும். குடும்பத்தில் விசேஷ நிகழ்ச்சிகள் நடக்கும்.விண்ணப்பித்த தொழில், வீட்டு, வாகன கடன் இந்த வாரத்திற்குள் கிடைத்து விடும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும்.தினமும் சூரிய பகவானை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 9.3.2025 முதல் 15.3.2025 வரை
9.3.2025 முதல் 15.3.2025 வரை
தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்பட வேண்டிய வாரம். விரைவில் அர்த்தாஷ்டமச் சனி துவங்கப் போகிறது. ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும். தாய் மற்றும் தாய் வழி உறவுகள் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். சொத்துக்கள் தொடர்பான செயல்களில் சிந்தித்து நிதானமாக செயல்படுவது நல்லது. அஷ்டமச் சனி காலத்தில் ஏற்படும் பாதிப்பில் சரிபாதி இருக்கும். எனவே முக்கிய முடிவுகளை சுய ஜாதக பரிசீலனையில் செய்வது நல்லது. ஏலத்திற்கு போக இருந்த பூர்வீகச் சொத்து சித்தப்பாவின் முயற்சியால் காப்பாற்றப்படும். சில தம்பதிகளிடம் அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றி மறையும்.
பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடிக்க சாதகமான சூழ்நிலை உண்டாகும்.சிலர் வயது மூப்பு மற்றும் சோர்வால் வாரிசுகளிடம் தொழில் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுக்க விரும்பலாம். 9.3.2025 அன்று மாலை 5.46 முதல் 12.3.2025 அன்று காலை 2.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மாசி மகத்தன்று சிவன் கோவிலுக்கு நல்லெண்ணெய் தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 02.03.2025 முதல் 08.03.2025 வரை
02.03.2025 முதல் 08.03.2025 வரை
எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெறும் வாரம். முயற்சி ஸ்தான அதிபதி சனியுடன் பாக்கிய அதிபதி சூரியன். வெற்றிமேல் வெற்றி வந்து உங்களைச் சாரும். அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் சூரியன், சனியைச் சாரும். எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
உற்சாகமாக சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு சாதகமான பதில் உண்டு. சிலர் உயர் கல்விக்காக, வெளியூர், வெளிநாடு செல்வார்கள். வீடு, மனை வாங்கும் முயற்சியில் உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மூலம் கடன் கிடைக்கும.
சிலருக்கு தேவையில்லாத எண்ணங்கள் தூக்கமின்மை, மன சஞ்சலம் உண்டாகலாம். அண்டை அயலாருடன் ஏற்பட்ட பிணக்குகள் சீராகும். கண் மறைவாக இருந்த, காணாமல் போன நகைகள் மீண்டும் கிடைக்கும். அடமான நகைகள் மீண்டு வரும்.
மாமனார் மூலம் திரளான சொத்துகள் அல்லது பணம் கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நிம்மதி அதிகமாக நவகிரகங்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 23.2.2025 முதல் 01.03.2025 வரை
23.2.2025 முதல் 01.03.2025 வரை
விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். வக்ர நிவர்த்தி பெற்ற பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய்.
விரைவில் அர்தாஷ்டமச் சனி துவங்க உள்ளது என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். பொருளாதார நெருக்கடிகள் விலகி அனைத்து தேவைகளும் நிறைவேறும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல சிறப்பாக இருக்கும். தொழில் கூட்டாளிகளுடன் தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் இந்த வாரம் கிடைக்கக்கூடும். விவாகரத்து வழக்கில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும். பாஸ்போட் விசா சார்ந்த பிரச்சனைகள் அகலும். சிலருக்கு மாமனார் மூலம் அதிர்ஷ்டப்பணம் கிடைக்கும். திருமணம், குழந்தை பேறில் நிலவிய தடைகள் அகலும்.
இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். தந்தைவழி உறவில் நல்ல விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சிலருக்கு அறுவை சிகிச்சையில் ஆரோக்கியம் சீராகும். மகா சிவராத்திரியன்று சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து சிவ வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 16.2.2025 முதல் 22.2.2025 வரை
16.2.2025 முதல் 22.2.2025 வரை
தனித்திறமை வெளிப்படும் வாரம். ராசியை பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் பார்ப்பதால் முயற்சியில் தளர்ச்சி இல்லாத வளர்ச்சி உண்டாகும். புதிய தேடல்கள் உருவாகும். உழைப்பிற்கான பலன் கிடைக்கும். கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட், பங்குச் சந்தை போன்ற துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமான லாபகரமான பலன் கிடைக்கும்.
பொருளாதார நெருக்கடிகள் குறையும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அரசாங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பணிமாற்றம் கிடைக்கும். உங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சிறப்பான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். உடன் பிறப்புகளால் அனுகூலமும், ஆதாயமும் உண்டாகும். பொருட் சேர்க்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் தரம் உயரும். எதையும் சமாளித்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனை மனக்கசப்பு முடிவுக்கு வரும். தாத்தா பாட்டியை சந்தித்து நல்லாசி பெறுவீர்கள். தாரள தன வரவு உண்டு. வீட்டில் சுப விசேஷங்கள் நடக்கும். பசுவிற்கு அகத்திக்கீரை தானம் வழங்க நன்மைகள் அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 9.2.2025 முதல் 15.2.2025 வரை
9.2.2025 முதல் 15.2.2025 வரை
திடீர் திருப்பங்கள் உண்டாகும் வாரம். பாக்கியாதிபதி சூரியன் முயற்சி ஸ்தானத்தில் முயற்சி ஸ்தான அதிபதி சனியுடன் சேர்க்கை பெறுகிறார்.தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.தொழில் வளர்ச்சியும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் குடும்ப, குல விவகாரங்களில் தலையிட்டவர்கள் தாமாக விலகுவார்கள். விண்ணப்பித்த அரசு வேலை கிடைக்கும். திருமணத்திற்கு ஏற்ற காலம். ஆண்களுக்கு மாமனாருடன் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும். சொத்துக்கள் மற்றும் கடன்களின் மீது கவனம் தேவை.
ஆன்மீக எண்ணங்கள் சற்று அதிகரிக்கும்.சிலருக்கு உஷ்ணம் சார்ந்த பிரச்சினைகளும் ஜீரணக்கோளாறுகளும் ஏற்படும். உயர்கல்வி வாய்ப்புகள் கிடைக்கும்.10.2.2025 அன்று காலை 11.56 மணி முதல் 12.2.2025 அன்று மாலை 7.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் உணர்ச்சி போராட்டம் அதிகமாகும். கொடுக்கல் வாங்கலில் பெரியளவு முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.எதைச் செய்தாலும் ஒரு முறைக்குப் பல முறை யோசித்து செய்யவும். தைப்பூசத்தன்று சந்தன அபிசேகம் செய்து முருகனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 2.2.2025 முதல் 8.2.2025 வரை
2.2.2025 முதல் 8.2.2025 வரை
வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படும் வாரம். ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாயின் பார்வை. தன ஸ்தானத்தில் சூரியன் புதன் சேர்க்கை தர்மகர்மாதிபதி யோகம். பாக்கிய ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானமும் பலம் பெறுகிறது.பித்ருக்களின் நல்லாசிகள் கிடைக்கும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடும் ஆர்வம் அதிகரிக்கும். திறமை மேலோங்கும். பேச்சை மூலதனமாக கொண்ட விற்பனை பிரதிநிதிகள், வக்கீல்கள், ஆசிரியர்களுக்கு, ஆடிட்டிங், நிதி நிர்வாகம் போன்ற துறையில் உள்ளவர்களுக்கு வருமானம் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும்.
தொழிலில் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் மன வேதனையில் இருந்தவர்கள் நம்பிக்கை, நாணயத்தை நிலை நிறுத்துவீர்கள்.கடன் விசயத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாக வந்து சேரும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரக்கூடிய வாய்ப்பு உருவாகலாம். சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். தந்தையின் அன்பும் ஆசியும் கிடைக்கும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 19.1.2025 முதல் 25.1.2025 வரை
19.1.2025 முதல் 25.1.2025 வரை
குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சூரியன். பல்வேறு வளமான பலன்களை அடையும் யோகம் உள்ளது. கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றுவீர்கள். முறையான முன்னோர்கள் வழிபாட்டால் தடைபட்ட சுப காரியங்கள் கைகூடும். பொருள் கடனும், பிறவிக் கடனும் தீரும். ஆன்ம பலம் பெருகும். சிலருக்கு கவுரவப்பதவிகள் கிடைக்கும்.தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தை பிரிந்து வாழ்ந்த தந்தை மீண்டும் குடும்பத்துடன் இணைவார். நீண்ட காலமாக காத்திருந்த குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அரசு வழி ஆதரவு கிடைக்கும். சிலருக்கு தந்தையின் வாரிசு வேலை கிடைக்கும்.பெற்றோர்கள், உடன் பிறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து மகிழ்வீர்கள். கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். சிலருக்கு மறுமணம் நடைபெறும். வெளிநாட்டு தொடர்புகளால் ஆதாயம் உண்டு. தம்பதிகளிடம் புரிதல் உண்டாகும். நிம்மதியாக உறங்கி, சந்தோஷமாக இருப்பீர்கள். சூரிய நாராயணரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
12.01.2025 முதல் 18.01.2025 வரை
தடை தாமதங்கள் விலகி பாக்கிய பலன் உண்டாகும். பாக்கியாதிபதி சூரியனும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாயும் சம சப்தமாக பார்க்கும் அற்புதமான கிரக நிலவரம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு வாடகை வருமானத்தை அதிகரிக்கும் சொத்துக்கள் சேரும். தந்தை மகன் உறவு சிறக்கும். கடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கப் பெறுவீர்கள்.
பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டின் மூலம் காரிய சித்தி கிடைக்கும். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதியினர் சேர்ந்து வாழ்வார்கள். தடைபட்ட திருமணம் ஏப்ரல் மாதத்திற்கு மேல் நடைபெறும். பொருத்தமான ஜாத ம் வந்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். புத்திர பிராப்தம் உண்டாகும். வயோதிகர்களுக்கு பேரன், பேத்தியை பார்க்கும் யோகமான நேரம்.
14.1.2025 அன்று அதிகாலை 4.19 மணி முதல் 16.1.2025 அன்று காலை 11.16 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நேரத்திற்கு உண்டு, உறங்க முடியாமல் கடுமையாக உழைக்க நேரும். பிறருக்கு ஜாமின் போட்டால் கடன் தொகைக்கு நீங்களே பொறுப்பு ஏற்க நேரும் என்பதால் கவனம் தேவை. பவுர்ணமியன்று அந்தணர்களுக்கு தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 5.1.2025 முதல் 11.1.2025 வரை
5.1.2025 முதல் 11.1.2025 வரை
தர்மகர்மாதிபதி யோகம். ராசியில் பாக்கிய அதிபதி சூரியனுடன் 7, 10-ம் அதிபதி புதன் சேர்க்கை. இது தர்ம கர்மாதிபதி யோகமாகும்.பாக்கிய பலன்கள் மிகுதியாகும்.தாய், தந்தை பொருள் உதவி செய்து தொழில் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அரசு வேலை முயற்சி வெற்றி தரும். கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனஸில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள்.
மன வேதனையால் முதியோர் இல்லம் சென்ற சில வயது முதிர்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள். சிலர் வெளிமாநிலம், வெளிநாட்டுக்கு இடம் பெயரலாம். சிலருக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். திருமணத் தடை விலகி விவாகம் நடைபெறும். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். தத்தாத்ரேயரை வழிபட வளம் பெருகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






