என் மலர்
தனுசு - வார பலன்கள்
தனுசு
வார ராசிபலன் 29.12.2024 முதல் 4.1.2025 வரை
29.12.2024 முதல் 4.1.2025 வரை
நிம்மதியான வாரம். ராசியில் பாக்கியாதிபதி சூரியன். ஆன்ம பலம் பெருகும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். மனதில் செய்ய நினைத்த காரியங்களை மறு நிமிடமே செய்து முடிப்பீர்கள்.தொழில் முன்னேற்றம் திருமண குழந்தை, வீடு வாகன யோகம் போன்ற அனைத்து விதமான பாக்கியங்களும் நடக்கும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத பொருள் சேர்க்கை ஏற்படலாம். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும்.அங்காளி, பங்காளிகள் மற்றும் குடும்ப உறவுகள் இணைந்து குடும்ப விழா கொண்டாடி மகிழ்வீர்கள்.
வியாபாரிகளுக்கு விற்பனையும் லாபமும் படு ஜோராக இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பால் வேலைபளு, மன பாரம் குறையும். கவுரவப்பதவிகள் தேடி வரும். வேலைக்கான நேர்காணவில் வெற்றி உறுதி. உத்தியோகத்திற்காக வெளியூர் அல்லது வெளிநாட்டிற்கு இடம் பெயர நேரும். தந்தை விருப்ப ஓய்வு பெற்று உங்களுடன் வந்து தங்குவார். திருமண முயற்சிகள் கைகூடும். பெண்கள் கணவரின் உண்மையான அன்பை உணர்வீர்கள். எதிர்ப்புகள் அகலும்.மூல நட்சத்தி ரத்தன்று பால் அபிசேகம் செய்து ஆஞ்சநேயரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 22.12.2024 முதல் 28.12.2024 வரை
22.12.2024 முதல் 28.12.2024 வரை
நிம்மதியான வாரம்.ராசியில் பாக்கிய அதிபதி சூரியன். மார்கழி மாதம் முழுவதும் தனுசு ராசியினருக்கு வசந்த காலம். உங்கள் திறமைகள் வெளிப்படும். செயற்கரிய செயல்களை செய்து புகழ், பாராட்டுகளை அடைவீர்கள். சுய ஜாதக ரீதியான தோஷங்கள் விலகி திருமணம் நடக்கும். குழந்தை பேறு கிடைக்கும்.பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவிற்கு வரும். குலதெய்வ கோவிலுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். கூட்டுத் தொழில், பங்குச் சந்தை ஆதாயம் உண்டு.
வீடு கட்டுதல், விரிவாக்கம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. அண்டை அயலாருடன் சுமூகமான நிலை நீடிக்கும். உடன் பிறந்தே கொன்ற வியாதிக்கு முற்று புள்ளி வைப்பீர்கள். ஆக மொத்தம் தனுசு ராசியினர் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழும் அமைப்பு உண்டாகும். பொருளாதாரம், ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை திருப்தியான வாரம் என்பதால் நிம்மதியாக இருக்கலாம். விரைவில் அர்த்தாஷ்டமச் சனி தொடங்க உள்ளது என்பதை நினைவில் நிறுத்தவும். சிவ வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 15.12.2024 முதல் 21.12.2024 வரை
15.12.2024 முதல் 21.12.2024 வரை
காரியங்களில் அனுகூலம் உண்டாகும் வாரம். ராசியில் பாக்கியாதிபதி சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் செயலாற்றலாலும் பேச்சாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள். தான, தர்மம் உதவி செய்வதன் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும்.அதிர்ஷ்டம் சார்ந்த வருமானம் எதிர்பார்க்கலாம், சிலருக்கு பிள்ளைகள் மூலம் உபரி வருமானம் கிடைக்கும். பங்குச் சந்தை ஆதாயம் இரட்டிப்பாகும். கவுரவப் பதவிகள், அரசாங்கப் பதவிகள் கிடைக்கும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவிற்கு வரும்.
கூலித் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும்.புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். திருமணம், சுபகாரியம் தொடர்பாக இந்த வாரம் பேசி முடிக்கலாம். வயோதிகர்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். 17.12.2024 மாலை 6.47 முதல் 20.12.2024 அன்று இரவு 1.59 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மகாலட்சுமியை வழிபாடு செய்வது நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 8.12.2024 முதல் 14.12.2024 வரை
8.12.2024 முதல் 14.12.2024 வரை
கடனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வாரம். 6,11ம் அதிபதி சுக்ரன் 5,12ம் அதிபதி செவ்வாயின் பார்வையில் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சாரம். புத்தி சாமர்த்தியத்தினால் திட்டம் தீட்டி நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். சுணங்கிக் கிடந்த காரியங்களில் இருந்து வந்த தடை தாமதம் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும்.பதவி உயர்வு, சம்பள உயர்வு , பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும்.
சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள்.தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொழில் முதலீடுகளில் விழிப்புணர்வு அவசியம். தொழில் பங்குதாரர்களால் வம்பு, வழக்கு உருவாகலாம். வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு கடன் அல்லது பொருள் இழப்பு அல்லது சிறு நோய் தாக்கம் உண்டாகலாம். வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள். அனைத்தும் வெற்றி பெறும் நல்ல காலமாக இந்த வாரம் அமையும். தினமும் மாலை வேளையில் சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 1.12.2024 முதல் 7.12.2024 வரை
1.12.2024 முதல் 7.12.2024 வரை
எண்ணியது ஈடேறும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு சுக்ரன், குரு, செவ்வாய் சம்பந்தம். வாழ்க்கையை நகர்த்துவதில் இருந்த சிரமங்களை சீராக்கி நிம்மதி அடைவீர்கள்.பொருளாதார ஏற்றத் தாழ்வு சமனாகி வட்டிக்கு வட்டி கட்டிய நிலைமாறும்.சொல்வாக்கால் மற்றவர்களால் மதித்திடக்கூடிய நிலையை அடைவீர்கள்.விலகிய குடும்ப உறவுகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும்.
தொலைந்த கைவிட்டுப்போன பொருட்கள் கிடைக்கும். சிலருக்கு தாயார் மூலம் திரண்ட சொத்து அல்லது பெரிய அதிர்ஷ்ட தொகை கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம். சிலருக்கு மறு விவாகம் நடக்கும்.. திருமண வாய்ப்பு கூடிவரும். கணவன் மனைவி ஒற்றுமை வலுப்பெறும்.வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சக ஊழியர்களுடன் நிலவிய பிணக்குகள் மறையும். தொழில், வியாபாரத்தில் நிலவிய போட்டி, பொறாமைகளை சமாளிக்க முடியும். விவசாயிகள் ஏற்றம் பெறுவார்கள். காளியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 24.11.2024 முதல் 30.11.2024 வரை
24.11.2024 முதல் 30.11.2024 வரை
மகிழ்ச்சியான நிம்மதியான வாரம். ராசி அதிபதி குரு சுக்ரனுடன் பரிவர்த்தனை. மன சங்கடங்கள் அகலும். ஞாபக சக்தி அதிகரிக்கும். தடை, தாமதம் விலகும். தைரியமும் தெம்பும் குடிபுகும். நினைப்பதெல்லாம் நடக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கை மறதியாக வைத்த முக்கியமான ஆவணங்கள் நகைகள் கிடைக்கும். இடப்பெயர்ச்சி செய்ய நேரும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் ஏற்படலாம். அரசின் உதவித் தொகை கிடைக்கும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி சாதகமாகும்.
உயர் கல்வி முயற்சி கைகூடும். குழந்தைகளின் மந்த தன்மை நீங்கும். பெண்கள் புதிய வாகனம் வாங்குதல், ஆடம்பரப் பொருட்கள் வாங்குதல், உல்லாசப் பயணம் செல்லுதல் என்று இனி மையாகப் பொழுதை கழிப்பீர்கள்.சிலர் பணிச்சுமை அல்லது ஆரோக்கிய குறைபாடு காரணமாக விருப்ப ஓய்வு பெறலாம். தம்பதிகள் அமைதி கடைபிடித்தால் ஓரிரு வாரங்களில் நிலமை சீராகும். பணவரவில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறவுகளின் அனுசரனையால் அனைத்து பிரச்சனைகளும் கானல் நீராக மறையும். ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 17.11.2024 முதல் 23.11.2024 வரை
17.11.2024 முதல் 23.11.2024 வரை
அமோகமான மாற்றங்கள் உள்ள வாரம். ராசி அதிபதி குருவும் 6-ம் அதிபதி சுக்ரனும் பரிவர்த்தனை பெறுகிறார்கள்.திட்டங்களை செயல்படுத்த போராடினாலும் முடிவில் வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய தொழில் முயற்சிக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை கவர்ந்து வியாபாரத்தை பெருக்குவீர்கள். அரசு வேலைகள் அனுகூலமாக நடக்கும். அரசியல் பிரமுகர்கள் அதிக நன்மை பெறுவார்கள். அரசாங்க வேலை கிடைக்கும். மாமியார் மருமகள் கருத்து ஒற்றுமை மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் சிறு சிறு கருத்து வேறுபாடு தோன்றி மறையும்.
உத்தியோகத்திற்காக ஊர், நாடு மாறலாம். பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்கள் வாங்கலாம். 20.11.2024 அன்று காலை 8.46 முதல் 22.11.2024 அன்று மாலை 5.09 மணி வரை சந்திராஷ்டமம் இருப்ப தால் பொறுமையைச் சோதிக்கும் பல்வேறு அனுபவங்களை சந்திக்க நேரும். பழைய விஷயங்களை மறந்து விட வேண்டும். வருத்தத்திலேயே அமர்ந்திருந்தால் எந்த ஒரு வேலையும் ஓடாது. பிறரிடம் பேசும் போது பொறுமை, நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. தேய்பிறை அஷ்டமியில் ஸ்ரீ ராமரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிப்பலன் 10.11.2024 முதல் 16.11.2024 வரை
வரவு செலவில் திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு 2,3-ம் அதிபதியான சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். விரும்பிய மாற்றங்கள் தேடிவரும். 6-ம் அதிபதி சுக்ரனும் ராசி அதிபதி குருவும் பரிவர்த்தனை பெறுகிறார்கள். கடன் பிரச்சனை உண்டாகும், என்பதால் பண விசயத்தில் கவனம் தேவை. பணம் வரும் வழியும் தெரியாது, போகும் வழியும் தெரியாது. சிலருக்கு ஆரோக்கிய கேடு உண்டாகும். புதிய எதிரிகள் தலை தூக்குவார்கள்.
வாழ்க்கைத் துணை, வியாபார பங்குதாரரிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வியாபாரத்தில் பொருட்கள் திருடு போகும் வாய்ப்பு இருப்பதால் முதலீட்டாளர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. சிலர் பழைய வேலையை ராஜினாமா செய்வார்கள். புதிய வேலை தேடுவார்கள். வேலைப்பளு அதிகரிக்கும். புதிய செல்போன் வாங்கலாம். ஞாபக சக்தி குறைவும், மன சஞ்சலமும் உண்டாகும். தந்தை மகன் கருத்து வேறுபாடு அகலும். திருமணத்திற்கு ஏற்ற காலம். அரசியல் பிரமுகர்களுக்கு கட்சி மாறும் எண்ணம் மேலோங்கும். பவுர்ணமியன்று சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 3.11.2024 முதல் 9.11.2024 வரை
3.11.2024 முதல் 9.11.2024 வரை
நன்மைகள் மிகுதியாகும் வாரம். ராசிக்கு 11-ல் பாக்கியாதிபதி சூரியன். ஒரு ஜாதகத்தில் ராசிக்கு 1 1-ல் சூரியன் நின்றால் சுய ஜாதக ரீதியான தோஷங்கள் விலகும். தற்போது கோட்சாரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. இழுபறி நிலைமாறி துரிதமாக காரியங்கள் நடைபெறும்.நன்மைகள் நடைபெறும். தொட்டது துலங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலவிய பிரச்சினைகள் தடைகள் விலகும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும். வீண் அலைச்சல், துக்கம் விலகும். வேலையில் பதவி உயர்வு இடமாற்றம் ஏற்படும்.
வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதம் விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். சேமிப்பு அதிகமாகும். அண்டை, அயலாருடன் நல்லிணக்கம் உண்டாகும். வீடு, வாகன முயற்சி ஜெயமாகும். திருமணம் கை கூடும். உயர்கல்வி வாய்ப்புகள் சித்திக்கும். தம்பதிகளின் கருத்து வேறுபாடு மறையும்.அதிர்ஷ்ட பணம் பொருள், உயில் சொத்து கிடைக்கலாம். நோய் தாக்கம் குறையும்.ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் அகலும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 27.10.2024 முதல் 3.11.2024 வரை
27.10.2024 முதல் 3.11.2024 வரை
கடன் தொல்லைகள் குறையும் வாரம். ராசி அதிபதி குரு ராசிக்கு 6-ல் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் வக்ர கதியில் 6ம் அதிபதி சுக்ரன் பார்வையில் சஞ்சாரம் செய்கிறார். குடும்ப உறவுகள் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வீர்கள்.பணப் புழக்கம் நன்றாக இருக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.வேலை பார்ப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள பாக்கி கைக்கு வரும். .வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.சகோதர சகோதரர்களிடையே நிலவிய மனப் பேராட்டம் அகலும். எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். திருமணம் கை கூடும். அண்டை, அயலாருடன் நல்லிணக்கம் உண்டாகும். வீண் அலைச்சல், துக்கம் விலகும்.
பயணங்களும் சுப விரயங்களும் ஏற்படும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். சிலர் கடன் பெற்று சொந்தத் தொழில் துவங்கலாம். குடும்ப உறவுகளுக்கு வீண் விரயத்தை சந்திக்க நேரும் அல்லது கொடுக்கல், வாங்கல்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரும். கணவன் மனைவி இடையை சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம். பெண்களுக்கு தீபாவளி கால வேலைப்பளு அதிகரிக்கும். சத்திய நாராயணரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 20.10.2024 முதல் 26.10.2024 வரை
20.10.2024 முதல் 26.10.2024 வரை
தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் நேரமிது. பாக்கிய அதிபதி சூரியன் நீசம் பெற்று 7, 10-ம் அதிபதி புதனுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். சிலர் புதிய கூட்டுத் தொழில் முயற்சியில் ஈடுபடலாம். அரசாங்க ஊழியர்களுக்கு பணி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு வேலை முயற்சி சித்திக்கும்.பெண்களுக்கு கணவரின் பாராட்டும் பரிசுகளும் கிடைக்கும். தடைபட்ட வாடகை வருமானம் வரும். புதிய வீடு, மனை வாங்கும் முயற்சி கைகூடும். சிலர் பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்கலாம். தந்தையின் அன்பும் ஆதரவும் மன நிம்மதி தரும். பிள்ளைகளுக்கு அரசு வேலை கிடைக்கும்.
கூட்டுக் குடும்பம் அல்லது கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரிவினைகள் சுமூகமாகும். தேவையில்லாமல் யாருக்கும் வாக்கு கொடுக்க கூடாது. தீபாவளி பட்ஜெட் விஷயத்தில் நிதானமும் கவனமும் அவசியமான தாகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். குழந்தைபேறு சித்திக்கும். 23.10. 2024 அன்று காலை 12.01 முதல் 26.10.2024 அன்று காலை 9.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் சோர்வு, அலுப்பு ஏற்படும். பணியில் சிறு தொய்வு ஏற்படலாம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிப்பலன் 13.10.2024 முதல் 19.10.2024 வரை
லாபகரமான வாரம். ராசிக்கு 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் சேர்க்கை.தர்ம தர்மகர் மாதிபதி யோகம். குலத் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமான பலன் உண்டு. வழக்கத்தைவிட உபரி வருமானம் அதிகளவில் உண்டாகும். கூட்டுத் தொழில் நல்ல வளர்ச்சி அடையும். புதியதாக தொழில் தொடங்குபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அலுவலகப் பணியை அதிகரிக்கும் புதிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும். வீடு கட்டும் பணி துரிதமாகும். சிலர் வீட்டு மனை அல்லது புதிய வாகனம் வாங்குவீர்கள்.
எதிர்பார்த்த தொகை ஓரிரு வாரங்களில் கிடைக்கும்.பெண்கள் தீபாவளி ஆபரில் புதிய பொருட்கள் வாங்குவார்கள். தொலைந்து போன, திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். மகன், மகள் திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். பூர்வீகச் சொத்து பிரிப்பதில் சகோதரரிடம் கருத்து வேறுபாடு உண்டாகலாம். பெண்களுக்கு கணவரிடம் இருந்து எதிர்பாராத வெளிநாட்டு பரிசுகளும் அன்பளிப்புகளும் கிடைக்கும். நிறைய அலைச்சலும், விரயச் செலவும் உண்டாகும். முருகன் வழிபாட்டால் நினைத்ததை அடைவீர்கள்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






