search icon
என் மலர்tooltip icon

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    22.1.2024 முதல் 28.1.2024 வரை

    தடைகள் விலகும் வாரம்.ராசி அதிபதி குரு 5-ம் அதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனை பெறுவதால் திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப்போகிறது. பங்குச்சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். ஒரு சிலர் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்து சம்பாதிப்பார்கள். விவசாயிகளுக்கும், கால்நடை வளர்பவர்களுக்கும் ஏற்ற காலம். தேவையற்ற அலைச்சல், ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம். திறமைக்கும், தகுதிக்கும் ஏற்ப வேலையில் முன்னேற்றமும், சம்பள உயர்வும் கிடைக்கும்.

    விரும்பிய இடமாற்றம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. தனியாக அமைதியாக இருப்பதை மனம் விரும்பும். முன்கோபத்தில் பகைமை உருவாகும். சீரிய சிந்தனைகள் பெருகும். வாழ்வின் திருப்பு முனையான சம்பவங்கள் நடக்கும். கணவன், மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள். 25.1.2024 அன்று நள்ளிரவு 1.47 மணி முதல் 27.1.2024 பகல் 1.01 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வர சிறப்பான யோகங்கள் அதிகரிக்கும். இன்னல்கள் நீங்கி அற்புதமான நல்ல பலன்கள் உண்டாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×