search icon
என் மலர்tooltip icon

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    1.1.2024 முதல் 7.1.2024 வரை

    பரிபூரண வெற்றியும் மகிழ்ச்சியும் உண்டாகும் வாரம் .பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தான அதிபதி சூரியனுடன் ராசியில் சேர்க்கை பெறும் அற்புதமான வாரம். பூர்வ புண்ணிய அதிபதி பாக்கிய அதிபதிகள் பலம் பெறுவதால் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு கவுரவத்தை உயர்த்தும் தரமான நிகழ்வுகள் நடக்கும். தொட்டது துலங்கும்.பட்டது பூக்கும்.கடந்த கால மனக்கசப்புகள் விலகி நிம்மதி பிறக்கும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். அதற்குத் தேவையான நிதி உதவி கிடைக்கும். பொருளாதார பற்றாக்குறை அகலும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு பணிக் காலம் முடிந்தப் பிறகும் பதவி நீடிப்புகள் ஏற்படலாம்.

    தந்தை மகன் கருத்து வேறுபாடு அகலும். தந்தையின் அன்பும் ஆசியும் கிடைக்கும். திருமண முயற்சி வெற்றி தரும். புத்திர பிராப்தம் கூடிவரும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.சங்கடத்தில் ஆழ்த்திய நோய் வைத்தியத்திற்கு கட்டுப்படும்.குல தெய்வ அருளும் முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். அமாவா சையன்று பித்ருக்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×