search icon
என் மலர்tooltip icon

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    18.12.2023 முதல் 24.12.2023 வரை

    பாக்கிய ஸ்தானம் பலம் பெறும் வாரம். ராசியில் பாக்கிய அதிபதி சூரியன் சஞ்சரிப்பதால் பாக்கிய பலம் கூடும்.கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். முன்னோர்களின் நல்லாசிகளைப் பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நண்பர், உறவினர் மத்தியில் மதிப்பு கூடும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் வரும். தந்தையின் ஆரோக்கியத்தால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும். வீட்டிற்கு அடங்காமல் இருந்த பிள்ளைகளின் நடவடிக்கை மன நிம்மதி தரும். ராசியில் 7, 10-ம் அதிபதி புதன் சூரியனுடன் நிற்பதால் புதன் தொடர்பான கணிதம், வங்கி, ஜோதிடம், சார்ந்த தொழில்கள் வளரும்.

    வட்டித் தொழில், அடகு பிடித்தல், படப்பிடிப்பு தொழில் செய்பவர்கள் தொழிலில் உன்னத நிலையை அடைய முடியும்.புத்திர பிராப்தம், திருமணம், சொத்துச் சேர்க்கை என தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் நடைபெறும். ஆரோக்கியத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். படுக்கையில் இருப்பவர்கள் கூட எழுந்து நடமாடு வார்கள். மாணவர்க ளுக்கு போட்டித் தேர்வில் வெற்றி சுலப மாகும். ஏகாதசி யன்று மகாவிஷ்ணுவை விரதமிருந்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×