search icon
என் மலர்tooltip icon

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    20.11.2023 முதல் 26.11.2023 வரை

    உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டாகும் வாரம். சனி, குரு சம்பந்தம் தர்மகர்மாதிபதி யோகம். சிந்தனை செயல் திறன் கூடும். முகப்பொழிவு ஏற்படும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்தது நினைத்தபடியே நடக்கும். சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் உங்களின் சொத்துக்களை உடன் பிறந்தவர்கள் பயன்படுத்துவார்கள் சிலரின் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். பங்குச் சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். குடும்பத்திலிருந்து பிரிந்த மூத்த சகோதரர் மீண்டும் குடும்பத்துடன் இணைவார். தொழிலில் நல்ல முன்னேற்றமும் அபரிமிதமான வருமானமும் வரும்.

    தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தையால் ஆதாய முண்டு. தடைப்பட்ட வாடகை வருமானம் மீண்டும் வரத் துவங்கும். இரண்டாவது திருமணம் நடைபெறும். கை,கால் வலி சற்று அதிகமாகும்.இறை நம்பிக்கை கூடும்.வேதம் கற்கும் ஆர்வம் உண்டாகும்.குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். திருக்கார்தி கையன்று அண்ணா மலையாரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×