search icon
என் மலர்tooltip icon

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    28.11.2022 முதல் 4.12.2022 வரை

    வெற்றிக் கனியை ருசிக்கும் வாரம். வெகு விரைவில் ஏழரைச் சனியில் இருந்து முழுமையாக விடுபடப் போவதால் அனுபவப் பூர்வமான அறிவுத் திறன் அதிகரிக்கும்.நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலகும். செய்யாத குற்றத்திற்காக அனுபவித்த தண்டனையில் இருந்து விடுபடுவீர்கள்.

    கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவார்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு அரசு பணியில் அமர்கின்ற வாய்ப்பு உண்டாகும். தொழிலில் செய்த முதலீடு பல மடங்கு லாபத்தைத் தரும். காணாமல் போனவர்கள் வீடு திரும்புவார்கள். வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தவர்கள் மீண்டும் தாயகம் திரும்புவார்கள். திருமணத் தடை அகலும்.

    பெண்கள் வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். மாமனார், மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். சிவனுக்கு வில்வ மாலை சாற்றி வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×