search icon
என் மலர்tooltip icon

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    4.3.2024 முதல் 10.3.2024 வரை

    திடீர் அதிர்ஷ்டத்தால் ஏற்றம் உண்டாகும் வாரம். அஷ்டமாதிபதி சுக்ரன் தன அதிபதி செவ்வாயுடன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமாகும். நீண்ட நாட்களாக தீராமல் இருந்த பிரச்சினைகளுக்கு முடிவு தெரியும் எதிர்காலம் குறித்து என்ன முடிவு செய்வதென்று இருளில் திக்கு, திசை தெரியாதவர்களுக்கு முன்னேற்றப்பாதை தென்படும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். வீடு, மனை வாங்கும் முயற்சியில் உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மூலம் கடன் கிடைக்கும்.

    ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும். உங்களின் திறமையை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்காமல் தேங்கி கிடந்த பொருட்கள் விற்றுத் தீரும். காதல் கசக்கும். அண்டை அயலாருடன் நல்லிணக்கம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை தவணை முறையில் வாங்குவீர்கள். தந்தை மகன் உறவு பலப்படும். மனநல, உடல் நல பாதிப்புகள் விலகும். ராசியில் ராகு 7-ல் கேது நிற்பதால் சுய ஜாதக பரிசீலனைக்குப் பிறகு திருமணத்தை நடத்துவது நல்லது. சிவராத்திரியன்று பஞ்ச கவ்ய அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×